
How to Change Name in Aadhaar Card 2023
உங்களுடைய ஆதார் அட்டையை இனி யாரும் திருட முடியாது ஆதார் கார்டில் எத்தனை போன் நம்பர்கள் இருக்கிறது ஈசியாக கண்டுபிடிக்கலாம்..!
உங்கள் ஆதார் கார்டில் எத்தனை செல்போன் நம்பர்கள் இணைக்கப்பட்டுள்ளது என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா, திருமணமான பெண்கள் தனது தந்தையின் பெயரை நீக்கி கணவன் பெயரை இணைப்பது எப்படி.
ஆவணங்கள் என்றால் அதை நாம் எந்த நேரமும் பத்திரப்படுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது,எங்கு செல்வதானாலும் அவைகளை பாதுகாப்புடன் கொண்டு சென்று வீடு திரும்ப கொண்டு வர வேண்டும்.
நம் நாட்டில் இப்பொழுது எங்கு சென்றாலும் முதலில் கேட்கப்படுகின்ற ஒரு விஷயம் ஆதார் அட்டை.
ஆதார் அட்டை இப்பொழுது இந்திய குடிமகனின் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது.
இந்த ஆதார் அட்டை இல்லாமல் நீங்கள் கோவிலுக்கு, ரயில் டிக்கெட், விமான டிக்கெட், வெளியூரில் தங்குவதற்கு ரூம், போன்றவை எடுப்பதற்கு நிச்சயம் இந்த ஆதார் அட்டை தேவைப்படுகிறது.
அடையாள அட்டையாக கூட பாக்கெட்டில் எடுத்துச் செல்ல வேண்டி இருக்கிறது ஆனால் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு மத்திய/மாநில அரசுகள்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது முக்கியமாக ஆவணங்களை நீங்கள் டிஜிட்டல் வடிவில் செல்போனில் அல்லது உங்களுடைய இமெயில் ஐடியில் வைத்துக் கொள்ளலாம்.
ஆதார் அட்டை, பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ்,வாக்காளர் அடையாள அட்டை சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களை இப்பொழுது ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முறைகேடுகள் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள்
ஆதார் கார்டை பொறுத்தவரை மிக மிக முக்கிய ஆவணமாக மாறிவிட்டது வங்கி பணப்பரிவர்த்தனை என்றாலும் ஆதார் கார்டு கட்டாயம் தேவை.
1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை முதல் அரசின் பல்வேறு நல திட்டங்கள் உதவிகளை பெறுவதற்கு முதலில் கேட்கப்படும் ஆவணம் ஆதார் அட்டை.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது என அனைத்து விஷயங்களுக்கும் ஆதார் கார்டு மிக முக்கியமாக உள்ளது.
இதில் நிறைய முறைகேடுகள் இந்த ஆதார் கார்டு வைத்து நடப்பதால் பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இணைந்துள்ள தொலைபேசி எண்கள் என்ன?
இந்த ஆதார் கார்டில் ஒன்றுக்கு மேற்பட்ட செல்போன் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது மிக அவசியம்.
காரணம் ஒரு நபரின் ஆதார் கார்டை இன்னொருவர் தவறாக பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
அதனால் ஆதார் கார்டில் என்னென்ன போன் நம்பர்கள் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
திருமணமான பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
ஒருவேளை திருமணமான பெண்கள் தங்கள் தந்தையின் பெயருக்கு பதில் கணவனின் பெயரை மாற்ற வேண்டுமானாலும் அதற்கு ஒரு வழி உள்ளது.
இதையும் நீங்கள் இணையதளத்தில் செய்யலாம் இதற்கு 50 ரூபாய் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.
இதற்கு என்ன வழிமுறை இருக்கிறது
திருமண சான்றிதழை நீங்கள் ஸ்கேன் செய்து அல்லது ஃபோட்டோவாக தெளிவாக எடுத்து கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
https://myaadhaar.uidai.gov.in/என்ற இணையதளத்திற்கு சென்று ஆதார் திருத்தம் என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு உங்கள் ஆதார் நம்பரை பதிவிட வேண்டும் இப்பொழுது உங்கள் ஆதார் கார்டில் இணைந்துள்ள போனுக்கு (OTP Number) அனுப்பப்படும்,அந்த நம்பரை அதில் பதிவிட்டு திருத்தம் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
அங்கே உங்களது பிறந்த தேதி, தந்தையின் பெயர், உங்களது பெயர், வீடு முகவரி, போன்ற விவரங்கள் இடம் பெற்று இருக்கும்.
அதில் நீங்கள் எதை மாற்ற வேண்டுமோ அந்த தகவல்கள் இடம்பெற்று இருக்கும் இடத்தில் பெயர் மாற்றம் என்று தனது தந்தையின் பெயருக்கு பதில் கணவன் பெயரை மாற்றிக் கொள்ளலாம்.
50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்
இப்போது ஏற்கனவே தயாராக கையில் வைத்திருக்கும் திருமண சான்றிதழ் போட்டோ அல்லது ஸ்கேனை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அனைத்து தகவலும் சரி செய்த பிறகு ரூபாய் 50 கட்டணத்தை இணையதளத்தில் செலுத்த வேண்டும்.
இறுதியாக submit என்ற தேர்வை தந்ததும் உங்களுக்கு பதிவு எண் ஒன்று தோன்றும் அதை மறக்காமல் நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும்.
சில நாட்களுக்குப் பிறகு உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு விடும் பெயர் திருத்தம் செய்த பிறகு அது உங்கள் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துவிடும்.
மேலும் 90 நாட்களில் திருத்தம் செய்யப்பட்ட ஆதார் கார்டு உங்களின் வீட்டு முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்படும்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Foods that prevent heart disease in tamil
TN provides loan assistance to start business
How to download e PAN card in tamil 2023