
How to change Passport photo in tamil 2023
உங்களுடைய பாஸ்போர்ட்டில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமா இதற்கான வழிமுறைகள் என்ன..!
இந்திய குடிமக்களின் ஆவணங்களில் முக்கியமானதாக கருதப்படுவது பாஸ்போர்ட்.
வெளிநாடு செல்வதற்கு மட்டுமின்றி அடையாள சான்றதாகவும் பாஸ்போர்ட் நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாஸ்போர்ட்டில் ஒரு சில மாற்றங்களை செய்வதற்கு இணையதளம் அல்லது பாஸ்போர்ட் அலுவலகம் சென்று மாற்றி வரலாம் என்பது அனைவருக்கும் தெரியும்.
அந்த வகையில் பாஸ்போர்ட்டில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமென்றால்,என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது முழுமையாக பார்க்கலாம்.
பாஸ்போர்ட்டில் என்ன மாற்றங்கள் செய்ய முடியும்
ஒரு நாட்டின் பாஸ்போர்ட் என்பது வெளி விவகார அமைச்சகத்தால் நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் ஒரு முக்கிய ஆவணம்.
சர்வதேச பயணத்தின் நோக்கத்திற்காக பாஸ்போர்ட் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் பாஸ்போர்ட் என்பது முக்கியமான அடையாள ஆவணமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியா பாஸ்போர்ட் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும் என்பதும் அதன் பிறகு புதுப்பிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாஸ்போர்ட்டில் புகைப்படத்தை மாற்றுவது எப்படி
பாஸ்போர்ட்டில் புகைப்படங்களை மாற்ற பல்வேறு காரணங்கள் இருக்கலாம் உதாரணமாக ஒருவர் பாஸ்போர்ட் எடுக்கும் போது கொடுத்து இருக்கும் புகைப்படம்.
சில ஆண்டுகளுக்கு பிறகு அவர் வெளிநாடு சென்றால் அவருடைய முகம் மாறுபட்டு இருக்கும் இதனால் குழப்பம் ஏற்படலாம்.
எனவே அவர் தனது பாஸ்போர்ட்டில் குறிப்பிட்ட கால இடைவெளியில் புகைப்படத்தை மாற்றிக் கொள்வது மிக நல்லது.
பாஸ்போர்ட்டில் புகைப்படத்தை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது முழுமையாக பார்க்கலாம்.
இணையதளத்தில் பாஸ்போர்ட் புகைப்படம் மாற்ற
பாஸ்போர்ட்டில் புகைப்படத்தை இணையதளம் மூலம் மாற்ற பாஸ்போர்ட் சேவா கேந்திர அலுவலகம் https://passportindia.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து படிவம் என்பதை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்த பின்னர் நிர்வாகப் பிரிவு பகுதியில் இருந்து பாஸ்போர்ட் மறு வெளியீடு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை
இப்போது (Change in Existing personal) என்பதை கிளிக் செய்து பொருத்தமானதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
அதன்பிறகு தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
அதன்பிறகு விரைவில் புகைப்படத்துடன் கூடிய புதிய பாஸ்போர்ட்டை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
tn rs 1000 scheme how to get form in tamil
How Check PAN card Misuse in tamil 2023