பொது அறிவு

உங்களின் பான் கார்டு பாதுகாப்பாக இருக்கிறதா அல்லது யாரேனும் தவறுதலாகHow to check PAN card misuse in Tamil

How to check PAN card misuse in Tamil

How to check PAN card misuse in Tamil

உங்களின் பான் கார்டு பாதுகாப்பாக இருக்கிறதா அல்லது யாரேனும் தவறுதலாக பயன்படுத்துகிறார்களா என்பதை எப்படி கண்டுபிடிப்பது..!

பொதுவாக இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இந்திய அரசால் ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் இதுபோன்ற அனைத்து ஆவணங்களும் குடிமக்களுக்கு மிக முக்கியமாக இருக்க வேண்டும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் ஒரு நபர் கூட இதில் எல்லா சின்னப் பிழைகள் கூட இல்லாமல் வைத்திருப்பது இல்லை, ஆவணங்களில் ஏதாவது ஒன்றில் பிழைகளுடன் தான் இருக்கிறது.

பிழைகளை சரியாக கவனிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை ஆனால் உங்களுடைய முக்கியமான ஆவணங்களை வேற யாரேனும் பயன்படுத்துகிறார்களா என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் பான் கார்டு என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாக கருதப்படுகிறது.

அதனால் அதில் மோசடி எதுவும் நிகழாதவாறு நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

அதனை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

பான் கார்டு தவறுதலாக பயன்படுத்துவதை கண்டுபிடிப்பது எப்படி

பான் கார்டு என்பது ஒரு நபரின் ஒரு வருடத்திற்கான வருமானம் முதல் இதர அனைத்தையும் கணக்கிடுவதற்கு உபயோகமுள்ள ஒன்றாக இருக்கிறது.

இதனால் தான் மத்திய அரசு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இதனைப் போலவே நாம் அனைவரும் ஒரு நபர் இரண்டு பான் கார்டுகளை பயன்படுத்தக்கூடாது என்றும் ஒருவேளை அப்படி பயன்படுத்தினால் 10,000 ரூபாய் அபராதம் என்பதும் தெரிந்து ஒன்று.

ஆனால் இத்தனை அம்சங்களையும் கொண்டுள்ள பான் கார்டு மோசடியில் இருக்கிறதா இல்லையா நம்மில் பலருக்கு தெரிவதில்லை அதனை கண்டறிவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிபில் ஸ்கோர் என்றால் என்ன

பான் கார்டிணை பயன்படுத்துவதில் உங்களுடைய சிவில் மதிப்பெண்ணை கணக்கிட வேண்டும்.

அதாவது சிவில் மதிப்பெண்களில் வேறு ஏதேனும் தேவையில்லாத கிரெடிட் கார்டு படிவங்கள் உங்களுக்கு தெரியாமல் இடம்பெற்றிருக்கிறதா என்பதை கண்காணித்தல் வேண்டும்.

ஒருவேளை ஏதேனும் மோசடி இருப்பது தெரிய வந்தால் முதலில் உங்களின் வங்கிக் கணக்கிற்கு தெரியப்படுத்தி கணக்கினை சரி பார்க்க சொல்ல வேண்டும்.

மோசடி செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் எதுவும் உங்களிடம் இருந்தால் அல்லது சந்தேகப்பட்டால் அதனை வருமானவரித்துறையிடம் மற்றும் காவல்துறையிடம் முறைப்படி புகார் அளித்து விசாரணை தொடங்க வேண்டும்.

வருமான வரித்துறை விளக்கம் என்ன

வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் படிவம் 26AS என்பதற்கு சென்று அதில் உங்களுடைய வருமான வரி தாக்குதலில் வேறு ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானம் செய்து கொள்ளுதல் அவசியம்.

STEP-1

முதலில் TIN NSDL என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பின்பு அதில் customer care என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

STEP-2

இப்பொழுது அதில் கொடுக்கப்பட்டிருக்கும் Complaint/Queries என்ற விருப்பத்தினை நீங்கள் கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

STEP-3

அதன்பிறகு உங்களுக்கான புகார் படிவம் வரும் அதில் உங்களுடைய தகவல்களை அனைத்தும் பூர்த்தி செய்து சப்மிட் (submit) என்பதை கொடுக்க வேண்டும்.

உங்களுடைய பான் கார்டு தவறுதலாக பயன்படுத்தி இருந்தால் இந்த வழிமுறைகளை பின்பற்றி.

அதற்கான ஆதாரத்தையும் நீங்கள் வருமானவரித்துறை இடம் கொடுத்தால் நிச்சயம் வருமானவரித்துறை அதிரடியான ஒரு நடவடிக்கையை எடுக்கும் மேலும் உங்களுடைய பான் கார்டு பாதுகாக்கப்படும்.

வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்வது எப்படி

தாமதமாக தூங்கும் நபர்களுக்கு மாரடைப்பு

வயிற்றில் இருக்கும் விடாப்பிடியான கொழுப்பை கரைக்க

செம்பருத்தி பூவின் சிறந்த நன்மைகள் என்ன?

வாழைப்பூவின் சிறந்த ஆரோக்கிய நன்மைகள்

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0