
How to check property register name in tamil
இணையதளம் மூலம் பத்திரம் மற்றும் பட்டா யார் பெயரில் இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது எப்படி..!
பொதுவாக நீங்கள் ஒரு நிலம் வாங்க வேண்டும் என்றால் அல்லது விற்க வேண்டும் என்றால் அதற்கு பத்திரம் என்பது மிக முக்கியமாக உள்ளது.
ஏனென்றால் பத்திரம் இருந்தால் மட்டுமே தான் உங்களுடைய நிலத்தை நீங்கள் விற்பனை செய்ய முடியும்.
இவ்வளவு முக்கியம் வாய்ந்த பத்திரம் யாருடையது யார் பெயரில் இருக்கிறதே என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது மிக அவசியம்.
ஆனால் சில நபர்களுக்கு இதனை எவ்வாறு தெரிந்து கொள்வது என்ற விவரங்கள் தெரியாமல் உள்ளது.
பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை நீங்கள் மிகவும் எளிமையான முறையில் இணையதளம் மூலமாகவே வீட்டில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பதிவில் இணையதளம் மூலம் பத்திரப்பதிவு யாருடைய பெயரில் இருக்கிறது என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
பத்திரம் என்றால் என்ன ஏன் அது மிக அவசியம்?
பத்திரம் என்பது ஒரு நிலத்தினை குறிக்கும் மிகவும் முக்கியமான ஆவணம் அந்த வகையில் உங்களுடைய நிலத்தினை வேறு ஒருவர் உரிமை கொண்டாட முடியாது என்றும்.
இந்த நிலம் எனக்கு மட்டுமே சொந்தம் உரிமை என்பதை சுட்டிக்காட்டுவதற்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் மிக முக்கியமான ஆவணங்களில் பத்திரம் முதன்மையாக உள்ளது.
இணையதளத்தில் பத்திரம் யார் பெயரில் உள்ளது என்பதை தெரிந்து கொள்வது எப்படி
ஒரு நிலத்தினுடைய பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை இணையதளம் மூலம் எளிதாக தெரிந்து கொள்வதற்கு தமிழக அரசு அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்கியுள்ளது.
அதாவது https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்திற்கு முதலில் நீங்கள் செல்ல வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று பிறகு மின்னணு சேவை என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதில் வில்லங்கச் சான்றிதழ் என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.
அதன்பிறகு வில்லங்கச் சான்று விவரங்கள் பார்வையிடுதல் என்பதையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
வில்லங்கச் சான்று சம்பந்தமான ஒரு புதிய பக்கம் தோன்றும் அதில் வில்லங்கச் சான்று என்பதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நீங்கள் பதிவிட வேண்டும்.
அதன்பிறகு திருத்த இயலாத நிலை ஆவணத்தை பதிவிறக்கம் செய்வதை என்பதை நீங்கள் கிளிக் செய்யவும்.
இவ்வாறு செய்தால் உங்களின் பத்திரம் தோன்றும் அதில் பத்திரம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
தொடர்ந்து இதனை நீங்கள் பின்பற்ற வேண்டும்
நீங்கள் உங்கள் நிலம் சம்பந்தமான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு அரசின் அதிகாரப்பூர்வ https://tnreginet.gov.in/portal/ இணையதள பக்கத்திற்கு சென்று.
பட்டா சிட்டா, வில்லங்கச் சான்று, வரைபடம், உள்ளிட்ட ஆவணங்களை குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை நீங்கள் பார்வையிட வேண்டும்.
அப்பொழுதுதான் நிலம் தொடர்ந்து உங்களுடைய பெயரில் இருக்கிறதா என்பதை உங்களால் உறுதி செய்ய முடியும்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
tn rs 1000 rupees scheme need 6 documents
Kisan Vikas Patra scheme details 2023..!