
How to cure bad breath under your mask in tamil
முகக்கவசம் அணிந்தால் வாய் துர்நாற்றம் அடிக்கிறதா, அதற்கு இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள்!
மருத்துவ ரீதியாக ஹாலிடோசிஸ் என்றழைக்கப்படுவது தான் வாய் துர்நாற்றம். வாயிலிருந்து வீசும் ஒருவிதமான அருவெறுக்கத்தக்க வாசனை தான் தற்போது பலர் முகக்கவசம் அணியும் போது உணர்கிறார்கள்.
ஒருவருக்கு வாய் துர்நாற்றம் மோசமான சுகாதாரம் அல்லது வாய், தொண்டை புண் அல்லது செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சினைகளால் ஏற்படுகிறது.
நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் வாயில் நன்கு உடைக்கப்படுகிறது, இது இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்பட்டு நுரையீரல் வரை நாம் சுவாசிக்கும் காற்றில் பாதிக்கிறது.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து உள்ளது என்று சொல்லக்கூடிய அளவில் இல்லை, ஏனென்றால் மத்திய மற்றும் மாநில அரசுகள் இப்பொழுதும் தீவிரமான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் பக்கத்தில் இருக்கும் கேரளாவில் இந்த கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் குறைந்தபாடு இல்லை.
அதை எப்பொழுதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள், இதனை தடுப்பதற்கு அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றுவதே ஒரு சிறந்தது.
நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் பூண்டு, வெங்காயம், போன்ற வலுவான வாசனையை உருவாக்க கூடிய உணவுகளை சாப்பிட்டால் அது வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
பல்துலக்குவது அல்லது மவுத் வாஷ் கூட இத்தகைய துர்நாற்றத்தை தற்காலியமாக அல்லது சில மணி நேரங்கள் மட்டுமே மறைக்கும்.
ஆனால் சில உணவுகள் உடலில் சென்றுள்ளதால் அந்த நாற்றம் முழுமையாக எப்பொழுதும் போகாமல் இருக்கும்.
இதுதவிர பாலாடைக்கட்டி அல்லது மசாலா பொருட்கள், ஆரஞ்சு ஜூஸ் அல்லது ஆல்கஹால் போன்றவையும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
என்ன காரணங்களால் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது என்பதை இந்த கட்டுரையில் முழுமையாக பார்ப்போம்.
செரிமான பிரச்சனை
மோசமான செரிமானப் பிரச்சனை அல்லது குடலில் புண்கள் இருப்பது, மலச்சிக்கல், மூல நோய், போன்ற செரிமான பிரச்சனைகளால் வாயில் சல்பர் வாயுக்கள் அதிக அளவு உற்பத்தியாகி துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
வாய் வறட்சி
ஒருவர் வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது வாய் வறட்சி. வாயில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்றுவதிலும் முக்கிய வேலை செய்கிறது மற்றும் இதுவே வாயை எப்போதும் புத்துணர்ச்சியுடன் ஆரோக்கியமாகவும் பராமரிக்க உதவுகிறது.
காபி அல்லது ஆல்கஹால் அதிகம் குடிப்பது
இந்த இரண்டு பானங்களும் வலுவான சுவை கொண்டவை, இந்த பானங்களை அதிகம் குடிக்கும் பொழுது அவை உமிழ்நீர் சுரப்பதை வாயில் குறைத்துவிடுகிறது.
வாயில் பாக்டீரியாக்கள் வெளியேற்றாமல், வாயில் தங்க வைத்து வாய் துர்நாற்றத்தை மேலும் மேலும் இந்த பானங்கள் தூண்டுகிறது.
வாயில் தொடர்ந்து துர்நாற்றம் வீசிக் கொண்டே இருந்தால் அது உடலில் சமச்சீரற்ற தன்மையை குறிக்கிறது.
இந்த நிலையில் இந்த பிரச்சினைகளுக்கு உடனடியாக சரியான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், ஏனெனில் சிகிச்சை தான் மூல காரணத்தை சரியாக குணப்படுத்தும்.
தேவையில்லாத பழக்கவழக்கம்
புகைப்பிடித்தல், புகையிலைப் பொருட்களை மெல்லுதல் இந்த இரண்டும் வாய் துர்நாற்றத்தை எப்போதும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
சிகரெட்டில் ஏற்கனவே பல்வேறு நச்சுகள் மற்றும் கெமிக்கல்கள் உள்ளது. இவை உடல் ஆரோக்கியத்தை மோசமடைய செய்யும் வாய் துர்நாற்றத்தையும் அதிகளவு ஏற்படுத்தும்.
வாய் சுகாதாரம்
உங்களுடைய வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால் வாயில் பாக்டீரியாக்கள் அதிகம் பெருக்கம் அடையும், இப்படி அதிகரிக்கும் பாக்டீரியாக்கள் சல்பரை உற்பத்தி செய்கிறது.
இவை அழுகிய கோழி முட்டை போன்ற வாசனையை ஏற்படுத்திவிடும், இது வாய் துர்நாற்றத்தை அதிக அளவு உண்டாக்கும் ஒருவருக்கு.
இந்த பிரச்சனையை சரிசெய்யும் உணவுகள்
துளசி, ஓமம், சீரகம், போன்ற வீட்டு உணவுகளை பச்சையாக சாப்பிடுவது வாய் துர்நாற்றத்தை எளிதில் போக்கும்.
இது தவிர முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், கேரட்,முலாம்பழம் மற்றும் சிட்ரஸ் பழங்களில் காணப்படும் சில முக்கியமான ஆன்டிஆக்சிடன்ட் ஊட்டச்சத்துக்கள் வாய் துர்நாற்றத்தை போக்கும்.
இதுமட்டுமின்றி இந்த உணவுகள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கும் மற்றும் செரிமான பாதையை சுத்தமாக வைத்திருக்கும் எப்பொழுதும்.
இதனை தடுப்பதற்கு சில வழிகள்
வறுத்த சோம்பு அல்லது சீராக விதைகளை உணவு சாப்பிட்டபின் வாயில் சிறிதளவு போட்டு மென்றால் செரிமானம் நன்றாக நடைபெறும், இதனால் வாய் துர்நாற்றம் பிரச்சினை ஏற்படாது.
உடம்பில் உள்ள கழிவுகளை எப்பொழுதும் சீரான முறையில் வெளியேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
இதனால் வாயில் ஈரப்பதம் மற்றும் உமிழ்நீர் உற்பத்தி சரியாக இருக்கும்.வாய் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இலவங்கப்பட்டை எண்ணெயின் சிறந்த ஆரோக்கிய நன்மைகள்
உணவு எடுத்துக் கொள்ளும் போது நன்று மெதுவாக மென்று சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
அதுமட்டுமில்லாமல் இரவு வேளைகளில் அதிக அளவில் உணவு சாப்பிடுவதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
How to prevent covid-19 3rd wave
பாதி எலுமிச்சை பழத்தை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து இரவு தூங்குவதற்கு முன் குடித்து வாருங்கள்.
இது வாய் துர்நாற்றத்தை போக்கும் அதுமட்டுமில்லாமல் உடலில் ஏற்படும் துர்நாற்றத்தையும் இது குறைத்துவிடும்.
இந்த இயற்கையான வழிமுறைகளை பின்பற்றியும் வாய் துர்நாற்றம் தொடர்ந்து கொண்டே இருந்தாள்.
முதலில் மருத்துவரை அணுகுங்கள் உங்களுடைய உடல் முழுவதும் சோதனை செய்யுங்கள் முக்கியமாக வயிற்று பகுதியை.