
How to download Birth Certificate online in tamil
இணையதளம் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி வீட்டிலிருந்து..!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர்களது குடும்ப புதிய உறுப்பினர்களின் பிறப்பு மற்றும் உயிரிழப்பு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு சட்ட விதிமுறைகளின் படி ஒவ்வொரு புதிய பிறப்பும் 14 நாட்களுக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் மற்றும் ஒவ்வொரு உயிரிழப்பும் 7 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
மக்கள் அந்தப் பகுதி சேர்ந்த பஞ்சாயத்து பிறப்பு மற்றும் உயிரிழப்பு பதிவு செய்ய முடியும்.
அவ்வாறு பதிவு செய்து வாங்கிய பிறப்பு சான்றிதழை நீங்கள் ஒருவேளை தொலைத்து விட்டீர்கள் அல்லது சேதப்படுத்தி விட்டீர்கள் என்றால்.
நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை இணையதளம் மூலம் மறுபடியும் பிறப்புச் சான்றிதழை எப்படி பதிவிறக்கம் செய்யலாம் என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.
பிறப்புச் சான்றிதழ் ஏன் மிக முக்கியமாக தேவைப்படுகிறது
நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பதற்கு மிக முக்கியமாக தேவைப்படுகிறது
பள்ளியில் சேர்ப்பதற்கு
பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு
வெளிநாடு பயணம் செய்ய
சொத்தில் பங்கு பிரிப்பதற்கு
குடும்ப அட்டை பெயர் சேர்ப்பதற்கு
அரசு சேவைகள் பெறுவதற்கு
என பல்வேறு திட்டங்களுக்கு கட்டாயம் பிறப்புச் சான்றிதழ் தேவைப்படுகிறது
பிறப்புச் சான்றிதழ் நீங்கள் பதிவிறக்கம் செய்ய மிக அவசியமாக தெரிந்திருக்க வேண்டிய சில தகவல்கள்.
குழந்தையின் பிறந்த தேதி குழந்தை எந்த மாவட்டத்தில் எந்த மருத்துவமனையில் பிறந்தது என்ற முழு விவரமும் தெளிவாக தெரிந்து இருக்க வேண்டும்.
இந்த இரண்டு விஷயங்கள் தெரிந்தால் போதும் இணையதளம் மூலம் நீங்கள் மீண்டும் பிறப்புச் சான்றிதழை எளிமையாக பதிவிறக்கம் செய்யலாம்.
முதலில் https://www.crstn.org/birth_death_tn/என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும் அவற்றில் Certificate Download என்பதில் Birth என்பதை நீங்கள் கிளிக் செய்யுங்கள்.
பின் அவற்றில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து விவரங்களையும் நீங்கள் சரியாக பூர்த்தி செய்து view என்ற தேர்வை கிளிக் செய்தீர்கள் என்றால்.
அவற்றில் அந்த தேதியில் பிறந்தவர்களின் view என்ற தேர்வு கிளிக் செய்த பிறகு அவற்றில் உங்களது பெயரை தேர்வு செய்து உங்கள் பிறப்புச் சான்றிதழை நீங்கள் எளிமையாக பதிவிறக்கம் செய்யலாம்.
நம் நாட்டில் பிறப்பு சான்றிதழ் மிக முக்கியம் குழந்தை பிறந்த 14 நாட்களுக்குள் நீங்கள் கட்டாயம் பிறப்புச் சான்றிதழ்களை பெற வேண்டும்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
ஆப்பிள் நான்கு புதிய மாடல்களை வழங்குகிறது..!
நெஞ்சு வலி வந்தால் இந்த மருந்துகளை எடுத்துக் கொண்டால் உயிரிழப்பை தடுக்கலாம்