செய்திகள்

பான் கார்டு தொலைந்து போனால் சில நிமிடங்களில் இ-பான் கார்டை டவுன்லோட் செய்வது எப்படி..! How to download e PAN card in tamil 2023

How to download e PAN card in tamil 2023

How to download e PAN card in tamil 2023

பான் கார்டு தொலைந்து போனால் சில நிமிடங்களில் இ-பான் கார்டை டவுன்லோட் செய்வது எப்படி..!

இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வருமான வரி பான் கார்டு வழங்கப்படுகிறது.

பான் கார்டு மூலம், ஒரு நபரின் முழு வருமானத்தையும், அவர் செலுத்த வேண்டிய வரியையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் முக்கியமாக வருமான வரி செலுத்துவதற்கான முக்கியமான அடையாள அட்டையாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர வங்கி பரிவர்த்தனை டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பெறுவதற்கான முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இது கேட்கப்படுகிறது.

இப்போது பல முக்கிய இடங்களில் பயன்படுத்தப்படும் பான் கார்டு தொலைந்து போனால் என்ன செய்வது, உடனே அதை எப்படி பெறுவது என்று பார்க்கலாம்.

பான் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது?

முன்பெல்லாம் பான் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் ஏதேனும் தொலைந்து விட்டால் அதற்கு நீங்கள் மாதக்கணக்கில் அலைந்து நடையாய் நடக்க வேண்டி இருக்கும்.

அப்படி என்ன முயற்சி செய்தாலும் எளிதில் சில ஆவணங்களை பெற்று விட முடியாது.

ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது ஓரிடத்தில் இருந்து கொண்டே இணையதளம் மூலம்.

நீங்கள் மறுபடியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இதற்காக நீங்கள் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியது அவசியமில்லை.

எப்படி பதிவிறக்கம் செய்வது?

பொதுமக்கள் https://www.incometax.gov.in/iec/foporta என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு முதலில் செல்லவும்

அதில் கீழே உள்ள our services என்ற விருப்பத்தை தேர்வு செய்து  Instant e- PAN card என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்

இதற்கு முன்பாக நீங்கள் e- PAN பதிவு செய்யவில்லை எனில் Get new e- PAN card என்பதை கிளிக் செய்யவும்.

கட்டாயம் ஆதார் எண் தேவை?

e-Pan டவுன்லோட் செய்யும் முன்பு check status என்பதை கீழுள்ள Download Pan என்பதை கிளிக் கொடுத்து Continue என்பதை கொடுக்கவும்.

அதன் பிறகு உங்களது 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும் அதன் பிறகு Continue என்பதை கிளிக் செய்யவும்.

தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்

அதன் பிறகு உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி மூலம் கடவுச்சொல் (Password OTP) அனுப்பப்படும்.

உங்களது விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கின்றதா குறிப்பாக ஈமெயில் ஐடி சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்க்கவும்.

அதன் பிறகு உங்களது e-Pan என்பது உங்களது இமெயில் ஐடிக்கு  வரும் பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்க மற்றொரு வழி

முதலில் https://onlineservices.nsdl.com/paam/request என்ற இணையதளத்திற்குச் சென்று e pan.html ஐப் பதிவிறக்கவும்.

உங்கள் பான் கார்டு எண் மற்றும் பிறந்த தேதியைக் கொடுத்த பிறகு, பதிவிறக்குவதற்கான விருப்பம் கிடைக்கும்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

How to protect pan card aadhar card 2023

How to get token for magalir urimai thogai..!

Health Benefits of triphala Suranam in tamil..!

What is bail How to get full details in tamil..!

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
1
Not Sure
0
Silly
0