
How to eliminate detoxify in the body in tamil
உடலில் சேரும் நச்சுக்களை நீக்க இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்..!
நம் உடலில் உள்ள நச்சுக்களை அவ்வப்போது வெளியேற்றினால் தான் ஆரோக்கியமாக வாழமுடியும்.
நச்சு என்பது நமது உடலை மட்டுமில்லாமல் மனதிற்குள்ளும் பாதிப்பை ஏற்படுத்தும், காலப்போக்கில் பல்வேறு வகையான நோய்களை உடலில் கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
இன்றைய காலகட்டத்தில் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகளும், பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறைகளும், வேலைப்பளு காரணமாக, உடலில் பல்வேறு வகையான நச்சுக்கள் அதிக அளவில் சேர்ந்துவிடுகிறது.
இதனை அவ்வப்போது வெளியேற்றிக் கொண்டே இருந்தால்தான் உடல் சுத்தமாகும்.
அதுமட்டுமில்லாமல் இரத்தத்தில் தேங்கி இருக்கும் கழிவுகள் வெளியேறும், இதனால் உடல் ஆரோக்கியம் அடையும் மற்றும் புதிய திசுக்கள், புதிய செல்கள், உடலில் வளரத் தொடங்கும்.
அதுமட்டுமில்லாமல் புதுப்பித்தல் நடைபெறும் என பல்வேறு வகையான செயல்பாடுகள் உடலில் தொடர்ந்து நடைபெறும்.
சிறுநீரக செயல்பாடு மேம்படும்
ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை அவ்வப்போது வெளியேற்றிக் கொண்டே இருந்தால் தான் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவை வராமல் இருக்கும்.
சிறுநீரகம் சரியாக செயல்பட்டால் மட்டுமே உடல் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கும், அதற்கு எப்போதும் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கொண்டே இருக்க வேண்டும்.
உடலில் உள்ள நச்சுக்களை அவ்வப்போது வெளியேற்றினால் தான் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ முடியும்.
நச்சு என்பது உங்கள் உடலை மட்டும்மில்லாமல் உங்கள் மனதிற்குள்ளும் பாதிப்பை ஏற்படுத்தும்.
காலப்போக்கில் இது பல்வேறு வகையான நோய்களை உங்கள் உடலில் ஏற்படுத்தி விடும்.
மனம் தெளிவு இல்லாத நிலையில் எப்போதும் சோர்வாக உணர்தல், கலைப்பு,எதிலும் ஆர்வமற்ற உணர்வு, வயிறு, கால்கள் அல்லது உடல் முழுவதும் கனமாக உணர்வது, மூச்சுவிடுவதில் சிரமம், போன்றவை கூட உடலில் அதிக அளவில் நச்சுக்கள் இருப்பதற்கான சில அறிகுறிகள்.
உணவில் நிறைய மஞ்சள், சீரகம், கொத்தமல்லி, போன்ற மூலிகைப் பொருட்களையும் ஏலக்காய், கருஞ்சீரகம், வெந்தயம், இலவங்க பட்டை, இஞ்சி, போன்ற மசாலா பொருட்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
இந்த மசாலாக்கள் நமது செரிமானத்தை தூண்டி உடல் சுத்திகரிப்பை தூண்டுகிறது, இதனால் உடல் முழுவதும் சுத்தமடைகிறது.
ஆமணக்கு எண்ணெய் சிறிது அளவில் எடுத்துக்கொள்வது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு சிறந்த பயனைத் தரும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
நச்சுக்களை வெளியேற்ற அதிகாலையில் வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீர் குடிப்பது நல்லது.
அதேசமயம் குடிக்கும் தண்ணீரை சுத்தமாக இருக்கவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இஞ்சி டீ குடிப்பதால் உடலில் நச்சுக்கள் எளிதாக வெளியேறும்.
தினசரி காலையில் மூன்று லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி சுக்கு பொடியை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
இந்த சுக்கு நீரை ஒரு மணி நேரத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு கப் குடித்து வந்தால் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்.
காமசூத்ரா கூறும் அடிப்படை பாலியல் ரகசியங்கள்
உடலின் செரிமான சக்தி பலவீனமாக இருப்பது மற்றும் வளர்ச்சிதை மாற்றம் பாதிக்கப்படுவது நோய்கள் வருவதற்கான முக்கிய காரணம்.
செரிமான கோளாறு உடல் பலவீனமும் உடலில் அதிகப்படியான இந்த சிக்கலை உருவாக்கி விடும்.
SBI ATM franchise business full details in tamil
உடல் செயல்பாடுகளை முற்றிலும் பாதிக்கும் அதோடு ஊட்டச்சத்து குறைபாடு சேர்ந்தால் நோய்கள் ஏற்பட்டு விடும்.
அதுபோன்று காய்கறிகள் மற்றும் பருப்பு சூப் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் எளிமையாக வெளியேறிவிடும் உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும்.