Health Tips

How to find carbide and organic mangoes in tamil

How to find carbide and organic mangoes in tamil

How to find carbide and organic mangoes in tamil

கல் வச்சு பழுத்த மாம்பழம் மற்றும் இயற்கையான பழுத்த மாம்பழம் எப்படி கண்டுபிடிப்பது..!

கோடை காலம் தொடங்கி விட்டால் தமிழகத்தில் மாம்பழ சீசன் தொடங்கிவிடும் என்பதில் மாற்றமில்லை ஆனால் மாம்பழம் சாப்பிடுவதில் உள்ள மிகப்பெரிய சுகாதார சீர்கேடு.

அதை ரசாயனங்களை கொண்டு கார்பனேட் ரசாயனம் கொண்டு பழுக்க வைப்பது தான்.

அதனால் மாம்பழம் வாங்க தயங்குகிறோம் இயற்கையாக பழுத்த மாம்பழங்களையும் கார்பனைடு வைத்த பழுத்த மாம்பழங்களையும் எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

முக்கனியில் முதல் கனியாக இருக்கும் மாம்பழம் சுவையில் சிறந்தது ஒரு மாம்பழம் 4 லட்சம் ரூபாய் வரை கூட விலை போகக் கூடியதாக இருக்கிறது.

உலகில் இந்தியாவில் மாம்பழம் உற்பத்தி அதிகம், தமிழகத்தில் சேலம் மாம்பழம் உற்பத்தியில், கிருஷ்ணகிரி மாம்பழம் உற்பத்தியிலும் முதன்மையாக இருக்கிறது.

ஆனால் இந்த மாம்பழங்களை சாப்பிடுவதால் கடந்த சில வருடங்களாக மக்களுக்கு பல்வேறு வகையான உடல் சீர்கேடுகள் ஏற்படுகிறது.

அதற்கு முக்கியமான காரணம் மாம்பழத்தை இயற்கையான முறையில் பழுக்க வைக்காமல் கார்பனேட் கற்கள் கொண்டு பழுக்க வைப்பதால் பல்வேறு வகையான உடல் சீர்கேடுகள் ஏற்படுகிறது.

மாம்பழத்தின் தோல் பகுதிகளில் மாற்றம்

செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தில் ஆங்காங்கே பச்சை நிறத்தில் தீட்டுக்கள் இருக்கும் இந்த பச்சை நிற தீட்டுக்கள் பழத்தில் இருக்கும் மஞ்சள் நிறத்தில் இருந்து தெளிவாக வேறுபட்டு காணப்படும்.

இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் மஞ்சள் மற்றும் பச்சை நிறம் கலந்த ஒரே சீரான அளவில் கலந்தது போல் இருக்கும்.

இயற்கையாக பழுத்த மாம்பழத்தை விட செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அதிக மஞ்சள் நிறத்துடன் தோல் பளபளப்பாக இருக்கும்.

அதே போல் கல் வைத்து பழுக்க வைக்கும் போது பழத்தின் தோல் பகுதி சுருங்கி தன்மையுடன் இருக்கும்.

பழத்தின் சுவைகளில் வேறுபாடு

செயற்கையாக ரசாயன கல் கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களில் சிலவற்றை சாப்பிடும் போது நாக்கில் சுர் என்று ஒருவகை எரிச்சல் ஏற்படும்.

இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் இயல்பாக வாசனை கொண்டது, நீண்ட தொலைவில் இருக்கும் போது நறுமணம் நன்றாக வீசும் முகுந்து பார்த்தால் நறுமணம் நன்றாக இருக்கும்.

இதுவே ரசாயனங்களால் பழுத்த பழமாக இருந்தால் முகர்ந்து பார்த்தால் நறுமணம் வீசாது அதை வைத்து எளிமையாக கண்டுபிடித்து விடலாம்.

அமுக்கிப் பாருங்கள்

மாம்பழத்தை வாங்கும்போது உள்ளங்கையில் வைத்து மெதுவாக மாம்பழத்தை லேசாக சுற்றிலும் அமுக்கி பாருங்கள் எல்லா பகுதியிலும் ஒரே மாதிரியாக பழுத்திருந்தால் அது இயற்கையாக பழுத்தது.

இதுவே ஒரு சில இடங்களில் நன்றாக பழுத்தும் சில இடங்களில் கெட்டியாகும், கட்டியாகவும், திட்டு போல் இருந்தால் அது ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழம் என்று தெரிந்து கொள்ளலாம்.

மாம்பழத்தின் நிறத்தில் மாறுபாடு

மாம்பழத்தை நறுக்கி பார்த்தாலும் இயற்கையாக பழுத்த மாம்பழத்திற்கும் செயற்கையாக பழுத்த மாம்பழத்திற்கு உள்ள வித்தியாசத்தை எளிமையாக கண்டுபிடித்து விடலாம்.

மாம்பழத்தை இரண்டாக வெட்டினால் எல்லா பகுதியும் நல்ல மஞ்சள் அடர் நிறத்தில் உள் பகுதி முழுவதும் ஒரே மாதிரி இருப்பது தான் இயற்கையாக பழுத்த மாம்பழம்.

இதுவே வெளிறிய மஞ்சளும், அடர் மஞ்சளும் என மாறிமாறி இருப்பது, செயற்கை ரசாயனங்கள் கொண்டு பழுக்க வைக்கப்பட்டது.

தண்ணீரில் சோதனை செய்யலாம்

மேற்கண்ட சில வழிமுறைகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் தண்ணி சோதனை மூலம் மிக எளிமையாக கண்டுபிடித்து விட முடியும்.

செயற்கையாக ரசாயனங்கள் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்களையும் இயற்கையாக பழுத்த பழங்களையும் கண்டுபிடித்து விட முடியும்.

ஒரு தண்ணீர் தொட்டியில் மாம்பழத்தை ஒவ்வொன்றாக போட்டு சோதனை செய்யுங்கள் மாம்பழம் தண்ணீருக்குள் மூழ்கினால் அது இயற்கையாக பழுத்தது.

இதுவே மாம்பழம் தண்ணீரில் மூழ்காமலும் தண்ணீருக்கு மேல் மிதந்தால் செயற்கையாக ரசாயனங்கள் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட பழம் என கண்டுபிடித்து விடலாம்.

Katla Fish Benefits Health list in tamil

இந்த சோதனையில் நிறைய மாம்பழங்களை தண்ணீரில் போட்டால் அடியில் இருப்பது மூள்கதான் செய்யும், அதனால் தனித்தனியாக மாம்பழங்களை தண்ணீரில் போட்டு சோதனை செய்யுங்கள்.

சுகாதார சீர்கேடுகள் என்ன கல் வைக்கப்பட்ட பழம் மூலம்

இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை காட்டிலும் செயற்கையாக கால்சியம் கார்பனேட் கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தில் சூடு அதிகமாக இருக்கும்.

இந்த சூட்டின் காரணமாக அந்த மாம்பழங்களை சாப்பிடுபவர்களுக்கு சில பக்க விளைவுகள் ஏற்படும்.

கடுமையான வயிற்று வலி

தொண்டையின் உள்பகுதியில் கடுமையான எரிச்சல்

வாந்தி

வயிற்றுப்போக்கு

வயிற்று எரிச்சல்

வயிறு சம்பந்தமான பல்வேறு வகையான பக்க விளைவுகள் ஏற்படும்.

சில நேரங்களில் கணையம்,சிறுநீரகம், போன்ற மிக முக்கியமான உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

What is your reaction?

Excited
1
Happy
3
In Love
0
Not Sure
0
Silly
0