
How to find pure oil made in Czech in tamil
பெரும் வணிக நிறுவனங்களின் பாக்கெட் எண்ணெய்களை விட செக்கில் ஆட்டிய எண்ணெய் வகை நல்லது என்ற எண்ணம் கடந்த சில வருடங்களாகவே மக்களிடம் பிரபலமாகி வருகிறது.
அதிலும் மரச்செக்கு எண்ணெய் வகை, மரச்செக்கு எண்ணெய் என்று ஸ்பெஷல் வகைகள் விளம்பரப்படுத்தப்படுகிறது.
மரச்செக்கு எண்ணெய் ஏன் நல்லது இவை உண்மையான தானா என்று எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து இந்த கட்டுரையின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
செக்கு எண்ணெய் என்பது எண்ணெய் வித்துக்களை அறை வெப்பநிலையில் செக்கிலிட்டு மெதுவாக சுழலும் இயந்திரம் மூலம் எண்ணெய் பிழிவது.
இம்முறையில் கிடைக்கும் எண்ணெயின் அளவு குறைவாக இருந்தாலும் எண்ணெய் வித்துக்களின் அளவில் 35 சதவீத அளவிற்கு எண்ணெய் கிடைக்கும்.
தொழிற்சாலைகளில் இயந்திரம் மூலம் எண்ணெய் வித்துக்களை சூடாக்கி எண்ணெய் பிரித்தெடுக்கும் போது கிடைக்கும் எண்ணெயின் அளவு இதைவிட அதிகமாக இருக்கும் அதிக அளவு எண்ணெய் கிடைப்பதால் வர்த்தக நோக்கில் இம்முறை அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
எண்ணெய் வித்துக்களை அதிக வெப்பத்துக்கு உள்ளாக்கும் போது அதன் அமிலத் தன்மை அதிகரிக்கிறது, அடுத்து அதனை சுத்திகரிக்கும் போது அமிலத்தன்மை குறைக்கப்படுகிறது இத்தகைய வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு எண்ணெயின் இயற்கை சத்துக்கள் அழிக்கப்படுகிறது.
ஆனால் செக்குகளில் அறை வெப்பநிலையில் தயாரிக்கும் எண்ணெய்களில் அப்படி நிகழ்வதில்லை இவற்றில் பாலி, ஃபீனால், டோகோஃபெரால், ஃபைட்டோஸ்டிரால்ஸ், கெரோட்டினாய்டுகள்,போன்ற ஊட்டச்சத்துக்கள் கூட்டுப் பொருளாக இருக்கிறது.
டோகோஃபெரால் என்பது வைட்டமின் ஈ இது இதயத்தை பாதுகாக்கும் செரிமான கோளாறுகளை சரிசெய்யும் எலும்பு மற்றும் நரம்பு பிரச்சினைகளை சரிசெய்யும் புற்றுநோயை எதிர்க்கும் கொழுப்பை குறைக்கும்.
ஃபைட்டோஸ்டிரால்ஸ் என்பது தாவர செல்களில் இருக்கும் இதன் அமைப்பு மனித உடலில் கொலஸ்ட்ரால் மாதிரியே இருக்கும் எண்ணெய் மூலம் இதனை நாம் எடுக்கும் பொழுது பிறகு உணவுகளிலிருந்து கொழுப்பை எடுத்துக்கொள்வது குறையும்.
நீரிழிவு நோயாளிகளுக்குக் சத்துக்காக ஸ்டார்டிங் மருந்து தரப்படுகிறது செக்கு எண்ணெய் எடுத்துக் கொண்டால் ஸ்டார்டிங் மருந்து அளவை குறைக்கலாம்.
கெரோட்டினாய்டுகள் கண்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமாக இது தேவை கண்புரை தடுக்கும் திறன் இதற்கு இருக்கிறது.
இந்த எண்ணெயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் எப்பொழுதும் இளமையாக இருக்க உதவுகிறது, எனவே மூப்பின் காரணமாக வரும் இதய நோய்கள், நரம்பு கோளாறுகள், போன்றவை வராமல் தடுக்கலாம்.
இதய ஆரோக்கியத்திற்கு
உயர் வெப்பநிலையில் தயாரிக்கப்படும் எண்ணெய்களில் ஒமேகா-6 அதிகமாகவும், ஒமேகா-3 குறைவாகவும் இருக்கும்.
ஒமேகா-3 ஊட்டச்சத்து இதயத்திற்கு மிக நல்லது உயர் ரத்த அழுத்தம் மற்றும் மன பதற்றத்தை குறைக்கும், நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும், கர்ப்பகாலத்தில் சாப்பிடும் பொழுது கருவின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.
ஆட்டிஸம் ஏற்படாமல் தடுக்கிறது இன்னும் பல நன்மைகளை இந்த ஒமேகா-3 ஊட்டச்சத்து மனித உடலுக்கு கொடுக்கிறது.
இயற்கையில் கிடைக்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் செக்கு எண்ணெய்யில் இருந்தாலும் அதனை அதிக வெப்பத்தில் சூடு படுத்தினால் ஊட்டச்சத்துகள் அழிந்துவிடும்.
செக்கு முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய் அதிக வெப்பநிலையை தாங்காது, ஆனால் ரீபைன்ட் எண்ணெய் உயர் வெப்பநிலை தாங்கும் திறன் இருக்கிறது.
செக்கு எண்ணெய் அதிக நாட்களுக்கு வைத்து பயன்படுத்த முடியாது 3 முதல் 4 மாதங்கள் வரையே அதனை உபயோகிக்கலாம்.
அதன்பிறகு காரல் வாடை வீசும், நல்ல கனமான கண்ணாடி பாட்டில்களில் சேமிப்பது, பிரிட்ஜில் வைப்பது, போன்ற நடவடிக்கைகளால் இன்னும் ஓரிரு மாதங்கள் அதனுடைய தன்மையை அதிகரிக்க முடியும்.
ஆனால் அதேநேரம் இயந்திரங்கள் மூலம் எடுக்கப்படும் எண்ணெய் வகைகள் அதிக நாட்கள் வைத்து பயன்படுத்த முடியும்.
ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பட்டியலை பார்க்கவும்
ஒரு பொருளுக்கு தேவை அதிகரிக்கும் போது அதில் முறைகேடுகளும் அதிகரிக்கும். இதனால் கலப்பட எண்ணெய், செக்கு எண்ணெய் என்று மார்க்கெட்டுகளில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
இதற்கான புகார்களும் வந்து கொண்டே இருக்கிறது சரி ஒரிஜினல் செக்கு எண்ணெய் எப்படி கண்டுபிடிப்பது.
பாட்டில்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஊட்டச்சத்து விவரங்கள் அடங்கிய பட்டியலில் ஃபினாலிக் கன்டென்ட் என்று குறிப்பிட்டு அதன் அளவு குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த அளவு ஒவ்வொரு எண்ணெய் வகைகளுக்கு மாறுபடும் இந்தப் பொருள் கண்டிப்பாக எண்ணெய்ல் இருக்கும் அதனை பார்த்து வாங்கலாம்.
எண்ணெய் கண்டுபிடிப்பது எப்படி
லேபிளில் ஊட்டச்சத்து விவரங்களும் இல்லை ஆனால் நமக்கு தெரிந்த இடத்தில் நம் கண்ணெதிரிலேயே செக்கில் ஆட்டி தருகிறார்கள் என்றால் நம்பி வாங்கலாம்.
நீங்கள் வாங்கும் சமையல் செக்கு எண்ணெய் எங்கு தயாரிக்கப்பட்டது, எப்போது தயாரிக்கப்பட்டது, அதனுடைய ஊட்டச்சத்து காலம் எவ்வளவு, அந்த தொழில்சாலை உரிய முறையில் அரசிடம் அனுமதி பெற்று உள்ளதா, இதையெல்லாம் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கிராமங்களில், நகர்ப்புறங்களிலும், சிறிய கடைகளில் செக்கில் தயாரிக்கப்பட்ட சுத்தமான சமையல் எண்ணெய் என்று விற்பனை செய்கிறார்கள்.
8 வடிவ நடைப்பயிற்சி நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
ஆனால் அது அனைத்தும் உண்மை கிடையாது உங்களுக்கு செக்கில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால்.
10 Simple Tips to Reduce Snoring in tamil
சிறிய தொழில்சாலையில் அல்லது ஆயில் மில்லில் நேரடியாக சென்று நீங்கள் வாங்கினால் மட்டுமே உங்களால் சுத்தமான எண்ணெய் பயன்படுத்த முடியும்.