TECH

How to find your smartphone after stolen

How to find your smartphone after stolen

How to find your smartphone after stolen

இனி உங்களுடைய smartphone தொலைந்து விட்டால் வீட்டிலிருந்து விண்ணப்பிக்கலாம் மே 17ஆம் அன்று புதிய திட்டத்தை அமல்படுத்துகிறது மத்திய அரசு..!

இந்தியாவில் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட உங்களுடைய மொபைல் ஃபோன்களை (Last of Stolen Mobile Phone) எளிதாக கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு மே 17ஆம் தேதி புதிய தொழில்நுட்பத் திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டம் மூலம் தொலைந்து போன செல் ஃபோன்களை மக்கள் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

ஒரு வேளை உங்கள் செல்போன் தொலைந்தால் எப்படி அரசிடம் புகார் கொடுப்பது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இப்போதெல்லாம் ஸ்மார்ட் போன் பயன்பாடு பல மடங்கு அதிகரித்து விட்டது, ஸ்மார்ட் போன் இல்லாமல் ஒரு நாள் கடந்து செல்வது என்பது கண்டிப்பாக ஒரு கட்டான சூழ்நிலையை ஒவ்வொரு நபருக்கும் ஏற்படுத்தும்.

அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பல்வேறு வகையான தரவுகள் தொலைபேசியில் சேமிக்கப்படுவது.

குறிப்பாக ஆதார் அட்டை, பான் கார்டு, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முகவரி, வாகன பதிவு, போன்ற எண்ணற்ற விஷயங்கள் அனைத்தும் இப்பொழுது ஸ்மார்ட் போனில் சேமிக்கப்படுவதால்.

மிக முக்கியம் கரண்ட் பில், எரிபொருள் உருளை சிலிண்டர் பில், இன்சூரன்ஸ், போன்ற பல்வேறு முக்கிய சேவைகளும் ஸ்மார்ட்போன்கள் மூலம் பணம் செலுத்தப்படுகிறது.

இதனால் ஸ்மார்ட்போன் மிக முக்கியமாக கருதப்படுகிறது,ஆனால் அப்படிப்பட்ட ஸ்மார்ட் ஃபோன்களை எளிதாக சில திருடர்கள் திருடி விடுகிறார்கள் அல்லது பயண நேரங்களில் தொலைத்து விடுவோம்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்து மக்களை காப்பதற்கு மத்திய அரசு இப்பொழுது புதிய திட்டத்தை அறிமுகம் படுத்தியுள்ளது.

இதன் மூலம் உங்களுடைய ஸ்மார்ட் ஃபோனை தடை செய்ய முடியும் (Smartphone Block) இந்த சேவையை மக்கள் ஏன் பயன்படுத்திக் கொள்ள மத்திய தொலைதொடர்பு துறை மே 17ஆம் தேதி புதிய திட்டத்தை அறிமுகம் படுத்தப்பட உள்ளது.

இந்த திட்ட மூலம் நீங்கள் வீட்டில் இருந்தே உங்களது தொலைந்து போன ஸ்மார்ட்போனை கண்டுபிடிக்க அரசு கோரிக்கை வைக்க முடியும்.

எதிர்பாராத விதமாக உங்களுடைய ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் நீங்கள் மத்திய உபகரண அடையாள பதிவு (Central Equipment Identity Register)என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

Google Play Store மற்றும் Apple Play Storeயில் கிடைக்கும் (CEIR KYM APP) செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முன் என்ன செய்ய வேண்டும்

நீங்கள் இந்த இணையதளத்தில் புகார் அளிப்பதற்கு முன் சில நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

குறிப்பாக உங்களுடைய தொலைந்து போன ஸ்மார்ட் ஃபோனை பற்றி உங்கள் அருகில் இருக்கும் காவல்துறையிடம் புகார் அளித்து ஒரு எஃப்ஐஆர் (FIR certificate) சான்றிதழ் நகல் பெற்றிட வேண்டும்.

How to find carbide and organic mangoes in tamil

அதன் பிறகு உங்களுடைய செல்போன் நம்பர் IMEI  Number ஸ்மார்ட் போனின் மாடல் (model of smartphone) ஸ்மார்ட்போன் வாங்கியதற்கான ரசீது (Receipt of Purchase of Smartphone) Smartphone Brand தொலைந்து போன இடம், நேரம், உள்ளிட்ட தகவல்களை துல்லியமாக வைத்திருக்க வேண்டும்.

இந்த தகவல்களை வைத்து விண்ணப்பித்த பின்பு 24 மணி நேரத்திற்குள் உங்களது ஸ்மார்ட் போன் முடக்கப்படும்.

அதன்பின் யாராலும் அதை பயன்படுத்த முடியாது,அதன்பிறகு உங்களுடைய ஸ்மார்ட் போன் ட்ராக்கிங் செய்து கண்டுபிடிக்கப்பட்டு பின்பு உங்களிடம் ஒப்படைக்கப்படும்.

இந்த புதிய திட்டம் மூலம் உங்களது ஸ்மார்ட்போனை வைத்து பணம், தகவல்கள்,திருடப்படுவதை உடனடியாக தடுக்க முடியும் என்கிறது மத்திய அரசு.

What is your reaction?

Excited
3
Happy
12
In Love
4
Not Sure
1
Silly
0