
How to get approval for ration card quickly in tn
3 நாட்களில் ரேஷன் கார்ட் அப்ரூவல் வேண்டுமா இப்படி அப்ளை பண்ணுங்க உடனடியாக கிடைக்கும்..!
நம் நாட்டில் இன்றைய காலகட்டத்தில் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக எப்போதும் இருப்பது ரேஷன் கார்டு.
முக்கிய ஆவணமாக மட்டுமில்லாமல் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் பொருட்களை வாங்கவும் இதை அரசாங்கம் மக்களுக்கு கொடுத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் எரிவாயு சிலிண்டர் வாங்க வேண்டுமென்றால் கூட ரேஷன் அட்டை மிக அவசியமானதாக ஒன்றாக நம் நாட்டில் இருக்கிறது.
இவ்வளவு முக்கியமானதாக இருக்கும் ரேஷன் கார்டை எளிதாக விண்ணப்பித்து பெற்றுவிடலாம்.
அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கல்
நம் நாட்டினை பொருத்தவரையில் பெரும்பாலான அரசு சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது, இதன் மூலம் மக்கள் மாதக்கணக்கில் அலைந்து திரிந்து, அதிக பணம் செலவு செய்து, தங்களுக்கு தேவையானதை வாங்க வேண்டியதில்லை.
இதை டிஜிட்டல் மயமாக்குவதன்மூலம் வீட்டில் இருந்து கொண்டு ஒரு சில நிமிடங்களில் தங்களது வேலையை முடித்துக் கொள்ளலாம்.
முன்பெல்லாம் புதிதாக ஒரு ரேஷன் கார்டு வாங்க வேண்டும் என்றால், அதற்கு பல மாதம் அலைந்து திரிந்து, விண்ணப்பித்து காத்திருக்க வேண்டும்.
இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கலாம்
ஆனால் இன்று இணையதளம் மூலம் எளிதில் இந்த சேவையைப் பெற்று விட முடியும், மேலும் இதன் மூலம் மாதக்கணக்கில் செய்த வேலையை சில நாட்களில் முடித்துவிடலாம்.
அந்தவகையில் நாம் இன்று பார்க்க இருப்பது மூன்றே நாட்களில் ரேஷன் கார்டு கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான்.
இணையதளத்தில் எப்படி விண்ணப்பிப்பது
https://tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
அதில் மின்னணு அட்டை சேவைகள் என்பதன் கீழ் புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்ற விருப்பத்தை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.
அது அடுத்த பக்கத்தில் தொடங்கும் அதில் புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.
அதன்பிறகு Name of Family Head என்ற கட்டத்தின் கீழ் ஆங்கிலத்திலும் தமிழிலும் பெயரை சரியாக பதிவிட வேண்டும்.
அதன் பிறகே மற்ற விவரங்களையும் உள்ளீடு செய்ய வேண்டும், குறிப்பாக உங்களுடைய முகவரி, மாவட்டம், தாலுக்கா, கிராமம், அஞ்சல் குறியீடு, உங்களுடைய தொலைபேசி எண், இமெயில் ஐடி, என அனைத்தையும் சரியாக உள்ளீடு செய்ய வேண்டும்.
அதோடு விண்ணப்பத்தில் குடும்பத் தலைவருக்கனா போட்ட என்ற இடத்தில் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும், இது 5 எம்பி அளவில் மட்டுமே இருக்க வேண்டும்.
என்ன வகையான அட்டை தேர்வு
அட்டை தேர்வு என்ற கட்டத்தில் என்ன வகையான அட்டை வேண்டும் என்பதை கிளிக் செய்யவும், அதன்பிறகு இருப்பிடச்சான்று என்ற இடத்தில் உங்களிடம் உள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இது 1 எம்பி அளவில் மட்டுமே இருக்க வேண்டும், இதற்காக உங்களுடைய டெலிபோன் பில்,தண்ணீர் பில், வீட்டு வரி ரசீது, உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை உள்ளீடு செய்ய வேண்டும்.
உறுப்பினர்கள் சேர்க்கை
உறுப்பினர்கள் சேர்க்கை என்பதை கிளிக் செய்யவும் அதில் முதலாவதாக குடும்பத் தலைவரின் பெயரை உள்ளீடு செய்ய வேண்டும்.
அதில் ஏற்கனவே நாம் கொடுத்த விவரங்கள் வரும் அதில் இல்லாதவற்றை மட்டும் கொடுக்க வேண்டும்.
உதாரணத்திற்கு பிறந்த தேதி, ஆண், பெண், வருமானம், ஆதார் அட்டை, மொபைல் எண், உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
கடைசியாக ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்த பிறகு, உறுப்பினர் சேர்க்கை சேமி என்ற விருப்பத்தை கிளிக் செய்து விட வேண்டும்.
குழந்தைகளின் பெயர் பட்டியல்
குடும்ப அட்டையில் குழந்தைகளின் பெயர் சேர்க்க வேண்டும் என்றால் குடும்ப தலைவருக்கு என்ன உறவு அதாவது அவரின் மகள், மகன், மனைவி, என்பதை உள்ளீடு கொடுக்க வேண்டும்.
அவருடைய விவரங்களை முழுமையாக பதிவேற்றம் செய்ய வேண்டும், ஆதார் கார்டு பதிவேற்றம் செய்ய வேண்டும், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தை எனில் பிறப்புச் சான்றிதழ் கொடுத்தால் போதுமானது.
அதனை பதிவேற்றம் செய்து உறுப்பினர் சேர்க்கை சேமி என்பதைக் கிளிக் செய்து கொள்ள வேண்டும், இதில் திருத்தம் எனில் அதனை கிளிக் செய்து மறுபடியும் திருத்திக்கொள்ள முடியும்.
எரிவாயு சிலிண்டர் விவரம்
அதன்பிறகு எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்கள் கொடுக்க வேண்டும், நீங்கள் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தியிருந்தால் பதிவு செய்யப்பட்ட நபரின் பெயரை கொடுக்க வேண்டும்.
எரிவாயு சிலிண்டர் யார் பெயரில் உள்ளது, எத்தனை இணைப்பு உள்ளது, என்பதையும் கொடுக்கவேண்டும்.
எரிவாய்வு நிறுவனத்தின் பெயரை கொடுக்கவும்,ஒவ்வொன்றிலும் எத்தனை சிலிண்டர் என்பதை கொடுக்க வேண்டும்.
அதனை கொடுத்த பிறகு நீங்கள் கொடுத்த விவரத்தில் சரியானதா என ஒருமுறைக்கு இருமுறை சோதனை செய்து கொள்ளுங்கள், அதன் பிறகு உறுதிப்படுத்துதல் என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
உள்ளீடு செய்வது சரியானதா
நீங்கள் உள்ளீடு செய்த அனைத்து விவரங்களும் சரியானதா என்பதை நன்கு சோதனை செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் கொடுத்த விவகாரத்தில் ஏதேனும் தவறு இருந்தால் அது சிவப்பு நிறத்தில் காண்பிக்கும், அதனைச் சரியாக கொடுத்த பதிவு செய்யுங்கள்.
அதன் பிறகு நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியானவை எனில் அதனை உறுதி என்ற விருப்பத்தினை கிளிக் செய்யவும்.
என்ன வகையான குறிப்பு எண்
உங்களது மின்னணு அட்டை விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது என வரும் அதில் குறிப்பு எண்ணும் வரும், அதனை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
இதை வைத்து உங்களுடைய ரேஷன் கார்டு எந்த கட்டத்தில் உள்ளது என தெரிந்து கொள்ளலாம்.
உங்களது ஆதார் கார்டு, போட்டோ, இணையதளத்தில் விண்ணப்பிக்கப்பட்ட ஆவணம் விண்ணப்பத்தை தாலுகா அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
ஒரு ஏக்கர் என்பது எத்தனை சதுர அடி எப்படி அளவிடப்படுகிறது.
அப்போதுதான் விரைவில் உங்களுடைய விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.
உங்களுடைய விண்ணப்பத்தின் நிலை என்ன
இதே இணையதளத்தில் முகப்பு பக்கத்தில் உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் பார்த்துக்கொள்ள முடியும்.
Meen kulambu seivathu eppadi in tamil 2022
நீங்கள் விண்ணப்பித்த பிறகு ஆவண சரிபார்ப்பு துறை, சரிபார்ப்பு தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகள் இருக்கிறது.
உங்களுடைய அனைத்து ஆவணங்கள் சரியாக இருப்பின் மூன்று நாட்களில் உங்களுடைய ரேஷன் கார்டு கிடைக்கும் 15 நாட்களில் பெற்றுவிட முடியும்.