செய்திகள்

முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி முழு விவரங்கள்..! How to get first graduate certificate in Tamil

How to get first graduate certificate in Tamil

How to get first graduate certificate in Tamil

முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி முழு விவரங்கள்..!

முதல் முதலில் உங்கள் குடும்பத்தில் உங்களுடைய மகள் அல்லது மகன் உயர் படிப்புக்கு செல்கிறார் என்றால் நீங்கள் கட்டாயம் முதல் பட்டதாரி சான்றிதழ் பெற வேண்டும்.

இதனால் உங்களுக்கு கல்வி கட்டணத்தில் சலுகைகள் கல்விக்கு ஊக்கத்தொகை என பல்வேறு விதமான சலுகைகளை அரசு நடைமுறைப்படுத்துகிறது.

முதல் பட்டதாரி சான்றிதழ் மிகவும் அவசியம் நீங்கள் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் மற்றும் பல்வேறு கல்வி நீங்க கற்றாலும்.

முதல் பட்டதாரி சான்றிதழ் இருந்தால் உங்களுக்கு கல்வி கட்டணத்தில் சலுகைகள் இருக்கிறது.

இந்த சான்றிதழ் படிக்காத குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்காக முதல் பட்டதாரி சான்றிதழ் என்னும் அரசாங்கத்தால் வழங்கப்படும் சான்றிதழாகும்.

இதனால் குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் கிடைக்கிறது.

குறைந்த நிதிநிலை காரணமாக உயர் கல்வியை தொடர முடியாத தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் சென்றடைகிறது.

முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கு தகுதி

இந்த முதல் பட்டதாரி சான்றிதழை பெறுவதற்கு தகுதி அளவுகோல்களை அரசு நிர்ணயம் செய்துள்ளது.

விண்ணப்பதாரர் கட்டாயம் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டை நிச்சயம் வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் தமிழக அரசு பள்ளியில் அல்லது தமிழ் வழி கல்வியை கற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் குடும்பத்தில் யாரும் முதல் பட்டதாரியாக இருக்கக் கூடாது.

உடன் பிறந்தவர்கள் இந்த சான்றிதழை இதற்கு முன்பு பெற்று இருக்கக் கூடாது.

இதற்கு தேவையான ஆவணங்கள் என்ன

ரேஷன் கார்டு (Ration card)

பாஸ்போர்ட் (Passport)

ஓட்டுநர் உரிமம் (Driving license)

பான் கார்டு  (Pan Card)

ஆதார் அடையாள அட்டை (Aadhaar Identity Card)

வாக்காளர் அடையாள அட்டை (Voter ID card)

முதல் பட்டதாரி சான்றிதழை எவ்வாறு பெறுவது

முதலில் இணையதளத்தில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் அவற்றில் வரும் என்ற TNEGA விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

இவற்றில் citizen login என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும் அதில் sign in என்பதில் உங்களிடம் உள்ள கணக்கை திறக்கவும் கணக்கு இல்லை என்றால் புதிதாக username கொடுத்து கணக்கை தொடங்கலாம்.

அதற்கு கீழே இருக்கும் Captcha-வில் எழுத்துக்களை சரியாக நீங்கள் உள்ளீடு செய்ய வேண்டும்.

கணக்கு தொடங்கிய பிறகு Revenue Department என்ற தேர்வை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.

அவற்றை கிளிக் செய்த பிறகு First Graduate Certificate என்ற தேர்வு இருக்கும் அடுத்து தேவையான ஆவணங்கள் சரியாக கொடுத்து ஒரு முறை சோதனை செய்த பிறகு Proceed என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்ததாக Register Can நம்பர் கொடுக்க வேண்டும் இந்த எண் தெரியாதவர்கள் உங்களுடைய பெயர்,அப்பா பெயரினை வைத்து Search செய்யலாம்.

அடுத்ததாக Search உள்ள Can Number சிறிய பெட்டியை கிளிக் செய்யவும் அவற்றில் Generate OTP என்ற தேர்வு கொடுக்க வேண்டும்.

அடுத்து நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு கடவுச்சீட்டு எண் OTP வரும் அந்த எண்களை உள்ள இடத்தில் OTP கொடுத்து Confirm OTP கொடுக்க வேண்டும்.

அடுத்து Proceed கொடுக்க வேண்டும் இப்போது இந்த விண்ணப்ப படிவம் புதிய பக்கம் திறக்கும் அந்த படிவத்தில் இதற்கு முன் பட்டப்படிப்பு முடித்தவர்களா என்ற இடத்தில் இல்லை என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து குடும்ப உறுப்பினர் பெயர்களை சேர்க்க வேண்டும் படிவத்தில் அப்பாவின் அப்பா பெயரினை குறிப்பிட வேண்டும்.

அவர்களின் வயது, தகுதி, கல்வி தகுதி, உறவுமுறை, அடுத்து அப்பாவின் அப்பா உயிருடன் இருக்கிறார்கள் என்றால் ஆம் அல்லது இல்லை என்ற தேர்வை சரியாக கொடுத்து Add செய்யவும் இது போன்ற குடும்பத்தின் அனைத்து நபர்களையும் சேர்க்க வேண்டும்.

அடுத்து கல்வி தகுதி என்ற இடத்தில் உங்களுடைய சரியான கல்வி தகுதியை நீங்கள் நிரப்ப வேண்டும்,அதன்பிறகு கல்வி பயின்ற வருடத்தை சரியாக உள்ளீடு செய்ய வேண்டும்.

அதன்பிறகு Current Course என்ற தேர்வில் Graduate என்பதை நீங்கள் உள்ளீடு செய்ய வேண்டும் Institute என்பதில் நீங்கள் தேர்வு செய்து வைத்த கல்லூரியின் பெயர் மற்றும் முகவரியை சரியாக குறிப்பிட வேண்டும்.

அனைத்து கல்லூரிகளுக்கும் இந்த சான்றிதழை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் இறுதியாக செய்த பிறகு Submit என்பதை நீங்கள் உள்ளீடு கொடுக்க வேண்டும்.

அடுத்து விண்ணப்ப படிவத்தினை நீங்கள் பதிவிறக்கம் செய்யவும் பதிவிறக்கம் செய்த பிறகு உங்களுடைய கையெழுத்தை (Signature) இடவேண்டும் அடுத்து Select என்ற விருப்பத்தில் உங்களுடைய புகைப்படத்தை இணைக்க வேண்டும்.

புகைப்படத்தின் அளவானது 50kb அளவில் இருந்தால் மட்டுமே அடுத்ததாக ஆதார் அட்டை/வாக்காளர் அடையாள அட்டை/பான் கார்டு அடையாள அட்டை கொடுக்கலாம்.

விண்ணப்பதாரரின் மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம் இணைக்க வேண்டும் சான்றிதழ் அனைத்தும் ஒரிஜினல் உள்ளவற்றை இணைக்க வேண்டும்.

அதன்பிறகு Current Academic Year Certificate என்பதில் உங்களுக்கு சகோதரி இருந்தால் அவர்களின் மதிப்பெண் சான்றிதழ் அல்லது Transfer Certificate பதிவேற்றம் வேண்டும்.

பிறகு உங்களுடைய அப்பா அம்மாவின் Transfer Certificate சான்றிதழ் இருந்தால் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதன் பிறகு Self Declaration of Application என்ற தேர்வு உள்ளதை பதிவிறக்கம் செய்ய வேண்டும் Self Declaration of Application இவற்றில் உங்களுடைய பெற்றோர் கல்வி கற்கவில்லை என்றால் அவர்களின் கையெழுத்தினை இணைக்க வேண்டும்.

அடுத்து ஸ்மார்ட் கார்டு அட்டாச் செய்ய வேண்டும் சான்றிதழ் விவரம் கொடுத்த பிறகு சோதனை செய்துவிட்டு (Make Payment) என்ற தேர்வை கொடுக்க வேண்டும்.

கட்டணமாக நீங்கள் ரூபாய் 60 செலுத்த வேண்டும் அதன் பிறகு கீழே உள்ள சிறிய கட்டட்டத்தில் டிக் செய்த பிறகு (Make Payment) என்ற தேர்வை கொடுக்க வேண்டும்.

Credit Card,Debit Card,Internet Banking,OR Code,UPI Payment, இவற்றில் ஏதேனும் ஒரு கணக்கில் தொகையினை செலுத்த வேண்டும்.

பணம் செலுத்திய பிறகு ரசீது ஒன்று வரும் அந்த ரசீதில் உங்களுடைய சான்றிதழ் எண் இணைக்கப்பட்டு இருக்கும்.

அதன்பிறகு இந்த ரசீது எண்களை வைத்து நீங்கள் உங்களுடைய முதல் பட்டதாரி சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Joining our WhatsApp group

எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

30000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு முதல்வர் ஸ்டாலின்

Pathiram Pathivu Seiyum Pothu Kavanikka Vendiya Visayam

How to get new ration card in tamil nadu

பிரதான்மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்

கட்டுமான பொருட்களின் விலைப்பட்டியல்..!

What is your reaction?

Excited
2
Happy
3
In Love
3
Not Sure
4
Silly
2