
How to get full refund on tatkal ticket cancellation
தட்கல் டிக்கெட்டை ரத்து செய்து முழுப் பணத்தையும் பெற இப்படி செய்யுங்கள்..!
என்னதான் பல முறை முயற்சி எடுத்தும் ரயில் டிக்கெட் புக் செய்தாலும் சில அசாதாரண நேரங்களில் உங்களால் குறித்த நேரத்தில் பயணிக்க முடிவதில்லை.
அதனால் நீங்கள் செலுத்திய பணம் வீணாகிவிடுகிறது, ஆனால் இனி அப்படி பயப்படாமல் தட்கல் டிக்கெட்களை ரத்து செய்து முழு அல்லது பாதி அளவு தொகையை பெற்று விட முடியும்.
தட்கல் டிக்கெட் முன்பதிவு ரத்து செய்யப்பட்டால் எவ்வளவு பணத்தை திரும்ப பெறுகிறது என்பதும் பெரும்பாலும் மக்களுக்கு தெரியாது.
எனவே ரயில் டிக்கெட் விலை முன்பதிவு செய்வதற்கு முன் நீங்கள் தட்கல் டிக்கெட்டை ரத்து செய்தால் உங்களுக்கு எவ்வளவு பணம் திரும்ப பெற முடியும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வது மிக முக்கியம்.
அதிக பண இழப்பை சந்திக்காமல் டிக்கெட்டை ரத்து செய்யலாம் அதனை எப்படி என்பது பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி
இந்தியா ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிங் கார்ப்பரேஷன் (IRCTC) தட்கல் டிக்கெட் முன்பதிவு சேவையை வழங்கி வருகிறது.
இது பயணிகளை பயணத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது.
IRCTC இணையதள மூலம் தட்கல் டிக்கெட்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
முதல் வகுப்பு ஏசி மற்றும் எக்ஸிகியூடி வகுப்புகள் தவிர அனைத்து வகுப்புகளுக்கும் தட்கல் டிக்கெட் முன்பதிவு அனுமதிக்கப்படுகிறது.
தட்கல் முன்பதிவு ஏசி வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கு ஏசி இல்லாத வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கு பயணத்தின் உண்மையான தேதிக்கு ஒரு நாள் முன்னதாக திறக்கப்படும்.
பயணிகள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய தகவல்
ஒரு நபர் கடைசி நிமிடத்தில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டிய பல நிகழ்வுகள் ஏற்படுகிறது,மேலும் தட்கல் டிக்கெட்களுடன் செல்வதை தவிர வேறு வழியில்லை என்ற சூழ்நிலை இருக்கிறது.
இது போன்ற சூழ்நிலைகளில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு டிக்கெட்டை ரத்து செய்தாலும்,அதிக நிதி இழப்பை சந்திக்காமல் இருக்க ரயில்வே பல விதிமுறைகளை வகுத்துள்ளது.
எனவே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் நீங்கள் தட்கல் டிக்கெட்டை ரத்து செய்தால் உங்களுக்கு எவ்வளவு பணம் திரும்ப பெறப்படும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வது மிக முக்கியம்.
IRCTC திருத்தப்பட்ட விதிகள் என்ன
பயணிகள் பயணம் செய்யும் இடத்தில் ரயில் 3 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக இருந்தால் பயணிகளின் பயணம் தொடங்கும் புள்ளியும் ஏறும் புள்ளியும் வேறுபட்டால் முழு பணத்தையும் திரும்ப பெறலாம்.
திசை மாறிய பாதையில் ரயிலை இயக்கினால் பயணிகள் பயணிக்க தயாராக இல்லை என்றால் முழு பணமும் திரும்ப கொடுக்கப்படும்.
ரயில் திசை மாறிய பாதை மற்றும் போர்டிங் ஸ்டேஷன் அல்லது சேரும் இடம் அல்லது இரண்டு நிலையங்களும் திசை திருப்பப்பட்ட பாதையில் இல்லை என்றால் முழு பணம் திரும்ப அளிக்கப்படும்.
தட்கல் தங்குமிடம் ஒதுக்கப்பட்டு அதே வகுப்பில் பயணிகளுக்கு தங்கும் வசதி வழங்கப்படாத ரயில் பெட்டி இணைக்கப்படவில்லை என்றாலும் முழு பணமும் கிடைக்கும்.
பயணி குறைந்த வகுப்பில் தங்கி இருந்தால் அவர் பயணம் செய்ய விரும்பவில்லை பயணிகள் கீழ் வகுப்பில் பயணம் செய்தால் பயணிகளுக்கு கட்டண வித்தியாசம் மற்றும் தட்கல் கட்டண வித்தியாசம் ஏதேனும் இருந்தால் திருப்பி தரப்படும்.
ஒரு தட்கல் டிக்கெட் காத்திருப்பில் இருந்தால் சில தொகை கழிக்கப்படும் மீதமுள்ள தொகை வாடிக்கையாளர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படும் தட்கல் இ-டிக்கெட்ட்களில் பகுதி ரத்து அனுமதிக்கப்படுகிறது.
விபத்து வெள்ளம் போன்ற காரணங்களால் ரயில் ரத்து செய்யப்பட்டால் ரயில் புறப்பட்ட மூன்று நாட்களுக்குள் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் முழு பணத்தையும் திரும்ப பெறலாம்.
இனி நீங்கள் உங்கள் தட்கல் டிக்கெட் களை ரத்து செய்யும் முன் இவற்றை கவனத்தில் வைத்து ரத்து செய்து முழு பணத்தையும் திரும்ப பெற்று இடுங்கள்.
யூடியூபில் 500 சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தால் போதும்
எங்களுடன் டெலிகிராம் குழு இணைப்பில் சேரவும்
நஷ்டம் ஏற்படாத உணவு தொழில் வகைகள்..!