
How to get good sleep in night 4 best tips
இரவில் நன்றாக தூக்கம் வர என்ன செயல் செய்ய வேண்டும் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக ஒரு நபருக்கு நல்ல தூக்கம் இருந்தால் தான் அடுத்த நாள் அவருடைய வேலையை சரியாக செய்ய முடியும், சரியாக சிந்திக்க முடியும், சரியாக சாப்பிட முடியும், சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
அத்தகைய தூக்கம் சரியாக இல்லை என்றால் உங்களுடைய அடுத்த நாள் வேலைகளை சரிவர செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும்.
எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் கட்டாயம் சரியாக தூங்கினால், ஒருவருடைய வாழ்க்கை எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கும்.
ஆனால் இந்த தூக்கத்தின் அளவானது வயதை பொறுத்து மாறுபடும் மற்றும் உடல் எடையைப் பொறுத்து மாறுபடும்.
அதாவது பிறந்த குழந்தையாக இருந்தால் அவர்கள் கொஞ்சம் வளரும் வரை ஒரு நாளைக்கு குறைந்தது 10 மணி நேரம் முதல் அதிகபட்சம் 15 மணி நேரம் வரை நன்றாக தூங்க வேண்டும்.
அதன்பிறகு குழந்தைகள் கொஞ்சம் விளையாட ஆரம்பித்த பிறகு தூக்கத்தில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்து விடும், அவர்களுக்கு விளையாடும் நேரமானது கொஞ்சம் அதிகரித்து விடும்.
ஆனால் அப்போது குழந்தைகள் 10 மணி நேரம் வரை நன்றாக தூங்க வேண்டும்.
அதன்பிறகு குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது, கல்லூரிக்கு செல்வது, வேலைக்கு செல்வது, என வளர வளர அவர்களுடைய நேரம் குறைய ஆரம்பித்துவிடும் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப.
இப்பொழுதெல்லாம் பல நபர்களுக்கு இருக்கும் ஒரு பொதுவான விஷயம் என்றால் தூக்கமின்மை பிரச்சனை.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, தங்களுடைய எதிர்காலத்தை பற்றி அதிகமாக சிந்திப்பது.
அவர்களுக்கு இருக்கும் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் தனிநபர் வாழ்க்கை பிரச்சனை, வாழ்க்கைத்துணை பிரச்சனை, போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அவர்கள் தூக்கமின்மை காரணங்களால் அவதிப்படுகிறார்கள்.
இது ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் கூட இரவில் தூக்கம் வராமல் இருப்பதற்கு இன்னும் பல காரணங்கள் இருக்கிறது.
அதாவது நமது உடலில் பலவகையான ஹார்மோன்கள் சுரக்கிறது அவற்றில் ஒன்றுதான் மெலடோன், ஹார்மோன் நமக்கு நல்ல தூக்கத்தை ஏற்படுத்திவிடும்.
இது இரவு நேரத்தில் மட்டும் சுரக்கக்கூடிய ஒரு தனி சிறப்பு வாய்ந்த ஹார்மோன்னாக இருக்கிறது உடம்பில், குறிப்பாக இருட்டில் மட்டுமே அதிக அளவு நமது உடலில் இந்த ஹார்மோன் சுரக்கிறது.
அதுவே நாம் உறங்கும் இடமானது நன்கு இருட்டு அறையாக இருந்தால் நல்லதாக அமையும், சரி இந்த கட்டுரையில் இரவில் நன்றாக தூங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி முழுமையாக பார்ப்போம்.
சாப்பிடும் நேரம்
நீங்கள் இரவில் தூங்கச் செல்லும் நேரத்திற்கும் உணவு எடுத்துக்கொள்ளும் நேரத்திற்கும் இடைவெளி குறைந்த பட்சம் 2 முதல் 3 மணி நேரம் இருக்க வேண்டும்.
இந்த விஷயத்தை உங்களால் பின்பற்ற முடியவில்லை என்றாலும் குறைந்தது 1 மணி நேரமாவது இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மணி நேரம் கூட இடைவெளி இல்லாத அளவிற்கு பிசியாக இருப்பவர்கள் இரவில் அதிகம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது.
நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய செயல்
சிலர் இரவு 10 மணிக்கு பிறகும் மொபைல்போன், லேப்டாப், டிவி பார்ப்பது, போன்ற செயல்களை செய்து கொண்டிருப்பார்கள் இதனால் இரவில் உறங்கும் நேரம் மாறுபடும்.
அதுமட்டுமில்லாமல் நீலக்கலர் வெளிச்சம் உங்கள் கண்களை அதிக அளவில் பாதித்துவிடும், காலப்போக்கில் உங்களுடைய தூக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகப்பெரிய விளைவுகளை உங்கள் வாழ்க்கையிலும் ஏற்படுத்திவிடும்.
குளியல்
ஒரு நாளைக்கு குறைந்தது 2 முறை குளித்தால் நல்லதாக அமையும் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு நல்லது, ஆகவே நீங்கள் இரவு தூங்க செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.
இதனால் உடல் சூடு குறையும் இதன் மூலம் உடல் நன்கு புத்துணர்ச்சி பெறும், இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கம் வர அதிகம் வழிவகுக்கும் இந்த செயல். இருப்பினும் உங்களுடைய ஆரோக்கியத்தைப் பொருத்து நீங்கள் இரவில் குளிக்கலாம்
ஹோமியோபதி மருத்துவ குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
மனதை அமைதிப்படுத்தும் பாடல்கள்
இரவில் உறங்கச் செல்லும் போது உங்களுக்கு பிடித்தமான இசை அல்லது மனதை அமைதிப்படுத்தும் பாடல்களை குறைந்த மெல்லிய சத்தத்துடன் கேட்க வேண்டும்.
How to make home hibiscus hair oil
உங்கள் மனதில் ஏதேனும் அழுத்தம் இருந்தாலும் இசை கேட்கும் பொழுது மனது ரிலாக்ஸ் ஆகிவிடும், இதன் மூலமும் மனது புத்துணர்ச்சி அடையும், இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கம் வர இது வழிவகை ஏற்படுத்தும்.