
How to get Lost school college certificates
தொலைந்து போன பள்ளி, கல்லூரி, சான்றிதழ்களை மறுபடியும் பெறுவது எப்படி முழு தகவல்கள்..!
பள்ளி மற்றும் கல்லூரி மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள், தொலைந்து விட்டால் எவ்வாறு புதிய சான்றிதழ்களை பெறுவது, என்பதற்கான முழு விளக்கங்கள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரி சான்றிதழ்கள் மாற்று சான்றிதழ்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் உங்களுடைய வாழ்நாள் முழுவதும் கட்டாயம் உங்களுக்கு தேவைப்படும்.
வங்கிகளில் கடன் உதவி பெறுவதற்கு, அரசு வேலை பெறுவதற்கு, வெளிநாடு செல்வதற்கு, அரசு வழங்கும் மானியங்கள் பெறுவதற்கு, உள்ளிட்ட அனைத்து விதமான சேவைகளுக்கும் கட்டாயம் உங்களுடைய இந்த சான்றிதழ்கள் தேவை.
இந்த சான்றிதழ்களை நீங்கள் எப்பொழுதும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் ஆனால் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக இந்தச் சான்றிதழ்கள் சில நேரங்களில் தொலைந்து விட்டால் அல்லது சேதம் அடைந்து விட்டால்.
இதனை எவ்வாறு பெறுவது என்பது பற்றி சில நபர்களுக்கு தெரிவதில்லை,சில நபர்கள் இந்த சான்றிதழ்களை பெறாமல் விட்டு விடுகிறார்கள்.
இதனால் அவர்களுடைய வாழ்க்கை பாதிக்கப்படுகிறது,இதற்கு தமிழக அரசு சிறந்த நடைமுறையை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.
அதனை நீங்கள் பின்பற்றி உங்களுடைய தொலைந்து போன சான்றிதழ்களை எளிமையாக பெறலாம் அதை பற்றி இந்த கட்டுரையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தொலைந்து போன சான்றிதழ் பெறுவது எப்படி
முதற்கட்டமாக சான்றிதழ்கள் எப்படி எங்கு தொலைந்தது அல்லது சான்றிதழ்கள் எதிர்பாராத ஏதாவது ஒரு அசம்பாவித காரணமாக கடுமையாக சேதமடைந்தால்.
அதனை அப்படியே வைத்திருந்து காவல் துறையிடம் புகார் அளிக்க வேண்டும் https://eservices.tnpolice.gov.in என்கின்ற இணையதள முகவரியின் மூலம் புகார் அளிக்கலாம்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தொலைந்து போன இடத்தில் சான்றிதழ் குறித்து விசாரணை நடத்துவார்கள் அல்லது சான்றிதழ்கள் சேதமடைந்தது குறித்து நேரடியாக விசாரணை நடத்துவார்கள்.
இதன் பின்னரும் சான்றிதழ் கிடைக்காத பட்சத்தில் நான் டிரேசபில் (Non Traceable) என்கின்ற சான்றிதழ்கள் தற்காலிகமாக வழங்கப்படும்.
அவசர சூழ்நிலைக்காக இந்த சான்றிதழ்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் நேர்காணல் வேலை வாய்ப்பு ஆகியவற்றிற்கு இந்த சான்றிதழ்களை பயன்படுத்த முடியாது எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்பின்ன தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் சென்று சான்றிதழ் குறித்து புகார் கொடுக்க வேண்டும்,இதன் பின்னர் சான்றிதழ்கள் இருக்கும் முக்கிய விவரங்களை கூறிய பிறகு.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து தொலைந்து போன ஆவணங்களை மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைப்பார்கள்.
பின்னர் குறிப்பிட்ட சில நாட்களுக்குள்ளாகவே தொலைந்து போன சான்றிதழ்களை திரும்ப பெற்றுக் கொள்ள முடியும்.
சான்றிதழ்களை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்
ஒருவேளை எதிர்பாராத விதமாக உங்களுடைய சான்றிதழ்கள் தொலைந்து விட்டால் அதனை திரும்ப பெற்றுக் கொள்ள முடியும் ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அதை அவ்வளவு எளிதில் திரும்ப பெற்றுக் கொள்ள முடியாது, காரணம் அதற்கு நடைமுறை என்பது மிகக் கடுமையாக இருக்கிறது.
காவல்துறையிடம் நீங்கள் புகார் கொடுக்க வேண்டும் அதற்கு காவல்துறையினர் முதற்கட்ட அறிக்கை அதாவது FIR பதிவு செய்ய வேண்டும்.
அதன்பிறகு தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று உங்களுடைய சான்றிதழ்கள் குறித்த விவரங்களை கொடுக்க வேண்டும் அல்லது நகல்களை கொடுக்க வேண்டும்.
எந்த ஆண்டு, எங்கு எந்த கல்லூரி அல்லது பள்ளிகளில் படித்தீர்கள் அதற்கான சான்றிதழ்களை கொடுக்க வேண்டும்.
இதன்பிறகு தாசில்தார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு உங்கள் புகார் குறித்து தகவல்களை தெரிவிப்பார்,அதன்பிறகு மாவட்ட கல்வி அலுவலர் உங்களுடைய புகார் குறித்து நீங்கள் படித்த கல்லூரி அல்லது பள்ளியில் புகார் கொடுத்து.
அதன் பிறகு உங்களுடைய சான்றிதழ்களை திரும்ப பெறுவதற்கு சில மாதங்கள் தேவைப்படும்.
இதற்கு இத்தனை நடைமுறை இருப்பதால் நீங்கள் உங்களுடைய பள்ளி கல்வி சான்றிதழை எப்போதும் பத்திரமாக வைத்திருப்பது மிக நன்று.
இ-சேவை மையம் தொடங்குவதற்கு வாய்ப்புகள்
அசல் சொத்து பத்திரம் தொலைந்து விட்டால்
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்