
How to get new passport in tamil 2023
எளிமையாக பாஸ்போர்ட் பெற மத்திய அரசு இப்பொழுது புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது ஆவணங்கள் சமர்ப்பிப்பதில் புதிய மாற்றம்..!
புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது இனி டிஜிட்டல் முறையில் ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்கலாம் என வெளியூர் துறை தெரிவித்துள்ளது.
ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது மிக அவசியம்.
நாம் நேரடியாக பாஸ்போர்ட் பெறுவதற்கு இந்திய அரசமைப்பு பல்வேறு வழிமுறைகளை செய்துள்ளது.
பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்பொழுது இணையதளத்தில் மாறிவிட்டது.
புதியதாக நிறுவப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவக் கேந்திரா (Passport Sevak Kendra) என்கின்ற செயல்பாட்டின் மூலம் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களுக்கு பாஸ்போர்ட்டை மத்திய அரசு கொடுத்து விடும்.
முன்பெல்லாம் பாஸ்போர்ட் எடுக்க ஆவணங்களை காகித வடிவில் சமர்ப்பிக்க வேண்டும்.
இப்பொழுது டிஜிட்டல் முறையில் அதுவும் குறிப்பாக டிஜிட்டல் லாக்கர் பாஸ்போர்ட் சேவை நிறுவப்பட்டுள்ளது.
இனி பாஸ்போர்ட் பெறுவதற்கு தேவையான ஆவணங்களை காகிதம் இல்லாமல் முறையில் டிஜிட்டல் ஆவணங்களாக மக்கள் சமர்ப்பிக்கலாம்.
டிஜிட்டல் லாக்கர் என்றால் என்ன?
டிஜிட்டல் லாக்கருடன் பாஸ்போர்ட் சேவை இணைக்கப்பட்டுள்ளது, இனி பாஸ்போர்ட் பெறுவதற்கு தேவையான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் நாட்டு மக்கள் சமர்ப்பிக்கலாம்.
பாஸ்போர்ட் சேவக் கேந்திரா (Passport Sevak Kendra) நாட்டில் பாஸ்போர்ட் சேவை வழங்குவதில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் வழங்கப்படும் பாஸ்போர்ட் வகைகள்
உங்கள் பாஸ்போர்ட்டை இணையதளத்தில் நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும் பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறைகளை இப்போது பார்ப்போம்.
நாட்டில் நான்கு விதமான பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும் பாஸ்போர்ட் (ordinary citizens Passports).
அரசாங்க ஊழியர்களுக்கும் Official,பாஸ்போர்ட் முதல்வர் பிரதமர் போன்ற உயர்மட்ட தலைவர்களுக்கும் (Diplomatic Passport) பாஸ்போர்ட் வியாபார நிமிர்த்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கு வழங்கப்படுகிறது (Jumbo)
பாஸ்போர்ட் பெறுவதில் உள்ள முறைகள்
பாஸ்போர்ட் பெறுவதில் இரண்டு முறையில் ஒன்று ஆர்டினரி (ordinary) மற்றொன்று தட்கல் Tatkal ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டை 10 வருடங்களுக்கு பயன்படுத்தலாம்.
மீண்டும் அதை அதற்கான கட்டணத்தை கட்டி புதுப்பித்துக் கொள்ளலாம் 9 வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும் இப்படி புதுப்பிக்கும் போது 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.
பாஸ்போர்ட்க்கு தேவையான ஆவணங்கள்
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான இரண்டு முக்கிய ஆவணங்கள்.
இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவது இரண்டு)
குடும்ப அட்டை
பான் கார்டு
வாக்காளர் அடையாள அட்டை
வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்க வேண்டும்).
தொலைபேசி ரசீது உங்கள் பெயரில் கட்டாயம் இருக்க வேண்டும்.
எரிவாயு இணைப்பிற்கான ரசீது உங்கள் பெயரில் இருக்க வேண்டும்.
2.பிறப்பிடச் சான்றிதழ் (ஏதாவது ஒன்று)
விண்ணப்பதாரர் 26.01.1989 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்கு பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையரால் அல்லது பிறப்பு இறப்பு பதிவாளர்.
அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு,இறப்பு சான்றிதழ் ஏற்றத்தக்கதாகும் (என்றால் அரசாங்கத்தால் கொடுக்கப்படும் பிறப்புச் சான்றிதழ்)
பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
கெஜட்டடு (நோட்டரி பப்ளிக் ஆபிஸர் மூலம் வாங்க வேண்டும்)
எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது
புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பிக்க ரூபாய் 1500/- (சாதாரண முறை)
காணாமல் போன அல்லது சேதம் அடைந்தால் ரூ.1500/- பாஸ்போர்ட் முடிந்திருந்தால் Expired
காணாமல் போனால் அல்லது சேதம் அடைந்தால் ஒரு 3,000/- பாஸ்போர்ட் காலாவதியாகவில்லை எனில் Not Expired
60 பக்கங்கள் வேண்டுமெனில் 500/- ரூபாய் சேர்த்துக் கொள்ளவும்.
தட்கல் முறையில் பெற 2000/- ரூபாய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
புதிய பாஸ்போர்ட் எப்படி
பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல்துறையிடம் புகார் கொடுத்து எஃப் ஐ ஆர் (FIR) பெற வேண்டும் அவர்கள் Non Traceable சான்றிதழ் கொடுப்பார்கள்.
அதை பாஸ்போர்ட் வழங்கும் அலுவலகத்தில் ஒப்படைத்தால் உங்களுக்கு பாஸ்போர்ட் நகல் வழங்கப்படும் அதாவது (Duplicate Passport) வழங்கப்படும்.
இதற்கு ordinary Passport 2,500/- ரூபாய் மற்றும் தட்கல் (Tatkal) 5,000/- ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
Pan card aadhar card link Status 2023
How to change address in PAN card