செய்திகள்

புதிதாக திருமணமானவர்கள் ரேஷன் கார்டு வாங்குவதற்கு How to get new ration card in tamil nadu

How to get new ration card in tamil nadu

How to get new ration card in tamil nadu

புதிதாக திருமணமானவர்கள் ரேஷன் கார்டு வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் என்ன..!

புதிதாக திருமணம் செய்தவர்கள் தங்கள் உறுப்பினர் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

ரேஷன் கார்டு என்பது ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, போன்ற மிக முக்கிய ஆவணமாகும்.

அனைத்து சலுகைகளும் பெற வேண்டும் என்றால் அதற்கு ரேஷன் கார்டு கட்டாயம் தங்களிடம் இருக்க வேண்டும்.

வீட்டு முகவரி ஆவணமாக பல இடங்களில் ரேஷன் கார்டு எடுத்துக் கொள்ளப்படுகிறது,இத்தகைய முக்கியமான ஆவணத்தை புதுப்பித்து வைத்திருப்பது மிக மிக அவசியம்.

அதாவது ரேஷன் அட்டையில் வீட்டு முகவரி, வயது விவரம், பெயர் சேர்த்தல், நீக்குதல், என எல்லா நடைமுறைகளையும் செய்திருக்க வேண்டும்.

அதிலும் புதிதாக திருமணமானவர்கள் குடும்ப உறுப்பினர் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும், அதேபோல் குழந்தைகளின் பெயரை ரேஷன் கார்டில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.

ரேஷன் கார்டுக்கு என்ன தேவை

திருமணத்திற்கு பிறகு ஒரு உறுப்பினர் குடும்பத்திற்கு புதிதாக வந்தால் அவரது பெயரை ரேஷன் கார்டில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.

அல்லது தனி ரேஷன் கார்டு கணவன் மனைவி இருவரும் புதிதாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

ஏற்கனவே உங்கள் பெயர் ரேஷன் கார்டில் இருந்தால் அதில் இருந்து நீக்க வேண்டும், உங்கள் பெயரை நீக்கிய பிறகு புதிய கார்டில் உங்கள் பெயரை சேர்க்க முடியும் இணையதளம் மூலம் எளிமையாக செய்யலாம்.

ஆதார் கார்டு புதுப்பித்தல்

அதேபோல் ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும், முகவரியும் மாற்ற வேண்டியிருக்கும், ஆதார் அட்டையில் புதுப்பித்து செய்த பிறகு, திருத்தப்பட்ட ஆதாரமாக சமர்ப்பித்து ரேஷன் கார்டில் பெயரை சேர்க்கலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்றால் ரேஷன் கார்டு மாற்றங்கள் பெயர் சேர்த்தல் நீக்குதல் போன்ற அனைத்து சேவைகளை இடம்பெற்றிருக்கும்.

இது தமிழக உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகும் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் (1967) அல்லது (1800-425-5901) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

குழந்தைக்கு ஆதார் கார்டு கட்டாயம் தேவை

அதேபோல் முன்பெல்லாம் குழந்தைகளின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும் எனில் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் மட்டும் இருந்தால் போதுமானதாக இருந்தது.

ஆனால் தற்போது குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெற்றுக்கொண்டு ரேஷன் கார்டில் அவர்கள் பெயரை சேர்க்கலாம்.

புதிய ரேஷன் அட்டை வழங்கும் நடைமுறைகள்

புதிதாக திருமணம் செய்து கொண்ட நபர்கள் புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு சில நடைமுறைகள் இருக்கிறது கட்டாயம் அதனை அவர்கள் பின்பற்ற வேண்டும்.

உங்களுக்கு புதிதாக திருமணம் நடைபெற்றிருந்தால் உங்களுடைய பெயர் ஏற்கனவே உங்களுடைய குடும்ப ரேஷன் அட்டையில் இருக்கும் அதனை முதலில் நீங்கள் நீக்க வேண்டும்.

பிறகு உங்களுடைய முகவரிக்கு ஏற்ப ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்திருக்க வேண்டும்.

இப்பொழுது விட்டு வரி ரசீது பெற்று, புகைப்படம் இரண்டு, ஆதார் அட்டை, ரேஷன் அட்டையில் பெயர் நீக்கியதற்கான நகல், போன்றவற்றை அடிப்படையாக வைத்து புதிய ரேஷன் அட்டைக்கு நீங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அல்லது உங்களுடைய மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களிலும் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் விண்ணப்பித்த பிறகு சிறிது நாட்களுக்கு கழித்து அரசு அலுவலர்கள் நேரடியாக நீங்கள் வசிக்கும் வீட்டிற்கு வந்து உங்களுடைய வீட்டை ஆய்வு செய்து அதன் பிறகு புதிய ரேஷன் அட்டை வழங்குவார்கள்.

Joining our WhatsApp group

எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

இ-பாஸ்போர்ட் அறிவிப்பு வந்தாச்சு

TN rs 1000 scheme ration card list details

தலை முடி உதிர்வதை 7 நாட்களில் தடுப்பது எப்படி

Tamil Nadu ITI Colleges courses list

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
2
Silly
0