
How to get token for magalir urimai thogai scheme
மகளிர் உரிமைத் தொகை 1,000/- பெற டோக்கன் விண்ணப்பத்தை நகல் எடுக்க முடியாது உசார் மக்களே உங்களை ஏமாற்றம் சமூகவிரோதிகள்..!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்ப படிவங்கள் இப்பொழுது எப்படி வழங்கப்படும் என்று தெரியுமா?.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த 1000 ரூபாய் உரிமை தொகை என்று சொல்லலாம் இந்த திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும்.
இதுவரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் இதுவரை அமல்படுத்தவில்லை எனவே இந்த திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படுவதால்.
இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக இருக்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை என திமுக தரப்பு தெரிவிக்கிறது.
இந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்தப்படுவது என்பது குறித்து.
மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவ்வபோது ஆலோசனை நடத்தி வருகிறார் மாதம் 1,000/-உரிமை தொகை பெறும் பயனாளிகளை கண்டறிவது தொடர்பாக அவர்களுக்கு முதல்வர் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கு தகுதிகளை தமிழக அரசு வரையறை செய்து வெளியிட்டுள்ளது,அதில் பெண்கள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தான் இந்த உரிமை தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அதற்கு பயனாளிக்கு 21 வயது பூர்த்தியகி இருக்க வேண்டும் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்கு கீழ் இருக்கும் குடும்பத்தினருக்கு மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். ஆனால் இதற்கு வருமான சான்றிதழ் இணைக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த திட்டத்திற்கு ரூபாய் 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தமிழக முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான பணிகளை தொடங்கியுள்ளார்கள்.
ஒரே ரேஷன் கடை எல்லைக்கட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்களில் எத்தனை பயனாளிகள் மகளிர் உரிமை தொகையை திட்டத்திற்கு தகுதியானவர்கள் என்பதை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது,ஒவ்வொரு குடும்பத்தினர் குடும்ப அட்டைகளை ஆய்வு செய்து தனிப்பட்டியலில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் தகுதியான பயனாளிகளை கண்டுபிடிக்க முடியும் என திட்டமிடப்பட்டுள்ளது,இது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் தெரிவிக்கையில்.
ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தனித்தனி எண்களுடன் விண்ணப்பம் தயாரித்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அச்சடிக்க கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்கள்.
அச்சடித்து முடித்ததும் அவை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அங்கு விண்ணப்பங்கள் படிவங்களை சரி பார்த்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் தனித்தனியாக பிரிப்பார்கள்.
பின்னர் அந்த விண்ணப்ப படிவங்கள் வீடு வீடாக வழங்கப்படும் விண்ணப்ப படிவங்களில் ரேஷன் கார்டு என்னும் கொடுக்கப்பட்டிருக்கும்.
அத்துடன் ஒரு டோக்கன் வழங்கப்படும் அதில் எந்த தேதியில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து திருப்பிக் கொடுக்க வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
எனவே விண்ணப்பங்களை கொடுக்க முந்த வேண்டிய அவசியம் இல்லை விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் போதே தங்களுக்கு ரூபாய் கிடைக்குமா கிடைக்காதா என்பது தெரிந்துவிடும்.
இந்த விண்ணப்பங்களில் எவையெல்லாம் மாதம் ஒரு 1,000/- பெற தகுதி இருக்கு என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஒரு குடும்பத்திற்கு வழங்கும் படிவத்தை மற்ற குடும்பத்தினர் பயன்படுத்த முடியாது ஏனென்றால் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ஒரு எண் வழங்கப்பட்டிருக்கும்.
எனவே ஒரு விண்ணப்பத்தை ஜெராக்ஸ் எடுத்து அதை மற்றவர்கள் பயன்படுத்த இயலாது எந்த ஒரு பொருளும் வேண்டாம் என எழுதி கொடுப்பவர்களில் யாராவது உரிமைத்தொகை பெற விரும்பினால் அவர்களுக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம்.
இவையெல்லாம் ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும் விண்ணப்பங்களை வாங்கி தருகிறேன் என்று சமூக விரோதிகள் யாராவது உங்களிடம் பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம்.
இது குறித்து தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாலும் நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
High mileage two wheelers in india 2023