
How to Get Varisu certificate in Tamil
வாரிசு சான்று வாங்க தேவையான ஆவணங்கள் என்ன..!
இன்றைய காலகட்டங்களில் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், கட்டாயம் அனைத்து நபர்களுக்கும் தேவைப்படுகிறது.
ஏனென்றால் நிலம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இந்த சான்றிதழ் மிக அவசியம் என அரசாங்கம் செய்தியை வெளியிட்டு இருக்கிறது வாரிசு சான்றிதழ் என்பது சட்டப்பூர்வமான ஒரு ஆவணமாகும்.
உரிய வாரிசுகளிடம் முறையான விசாரணை நடத்தி சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை தாசில்தார் வழங்குகிறார்.
வாரிசு சான்றிதழ் இருந்தால் மட்டுமே உங்களுடைய பூர்விகா சொத்து திறுக்கு நீங்கள் உரிமை கூற முடியும்.
உங்களுடைய பூர்வீக சொத்தில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அதற்கு அடிப்படை தீர்வு கொடுப்பது வாரிசு சான்றிதழ் மட்டுமே.
உங்களுடைய தந்தை அல்லது தாயார் திடீரென்று உயிரிழந்து விட்டால் அவர்களுடைய வங்கி கணக்கில் இருக்கும் பணம் அல்லது நகைகளை நீங்கள் பெறுவதற்கு நிச்சியம் உங்களுக்கு வாரிசு சான்றிதழ் தேவை.
இந்த வாரிசு சான்றிதழ் அனைத்து இடங்களிலும் நிச்சயம் உங்களுடைய தந்தை அல்லது தாயிற்கு அரசாங்க சேவைகளைப் பெற நீங்கள் கட்டாயம் பயன்படுத்தியாக வேண்டும்.
இந்த கட்டுரையில் வாரிசு சான்றிதழ் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை படுகிறது என்பதைப் பற்றி முழுமையாக பார்க்க போகிறோம்.
வாரிசு சான்றிதழ் என்றால் என்ன
ஒரு குடும்பத்தில் ஒரு நபர் உயிரிழந்து விட்டால் அவருடைய சொத்துக்களை அல்லது பணத்தை பெறுவதற்கு உங்களுடைய வட்டாட்சியர் அலுவலகம் மூலம் பெறப்படும் சான்றிதழ் தான் வாரிசு சான்றிதழ் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு நபர் உயிரிழந்த பிறகு அவரின் சொத்துக்களை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அவருடைய வாரிசுகள் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் மிகவும் அவசியமாக கட்டாயம் தேவைப்படுகிறது.
வாரிசு சான்றிதழ் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை படுகிறது
உயிரிழந்த நபரின் முகவரி சான்று
இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை அல்லது ரேஷன் கார்டு
பரிந்துரை விண்ணப்ப படிவம்
விண்ணப்ப படிவத்தை நிரப்பப்பட்டு கையொப்பமிட்ட விண்ணப்பப் படிவம் தேவைப்படும்.
விண்ணப்பதாரரின் அடையாளங்கள் மற்றும் முகவரி சான்றிதழ் நகல்கள்.
குடும்பத்தில் உள்ள அனைத்து சட்ட வாரிசுகளின் பிறந்த தேதி சான்றிதழ்.
அவர்கள் எண்ணிக்கையில் நான்கு பேருக்கு மேல் இருந்தால் மீதமிருக்கும் உறுப்பினர்களின் பெயர் பட்டியல்.
அனைத்து விண்ணப்பதாரர்களின் புகைப்படங்கள்.
சுய உறுதிமொழி பத்திரம் மற்றும் சுய அறிவிப்பு படிவம் இறந்தவரின் இறப்புச் சான்றிதழ்.
வாரிசு சான்றிதழ் யார் விண்ணப்பிக்க முடியும்
உயிரிழந்த நபரின் துணைவியார்
உயிரிழந்த நபரின் குழந்தைகள் மற்றும் மகன் மகள் வழி குழந்தைகள்
உயிரிழந்த நபரின் உடன் பிறந்த சகோதரர்கள் சகோதரிகள்
உயிரிழந்த நபரின் பெற்றோர்கள்
வாரிசு சான்றிதழ் எப்படி எங்கே பெற வேண்டும்
உங்கள் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகம் அல்லது மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் இருந்து நீங்கள் சட்டபூர்வமாக வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம்.
சட்டபூர்வமான வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
உதாரணத்திற்கு சிறிய தொகை நீங்கள் செலுத்த வேண்டும் வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு கிட்டத்தட்ட 30 நாட்கள் ஆகும்.
How to Patta Name Transfer Online in tamil
அசல் சொத்து பத்திரம் தொலைந்து விட்டால்