
How to increase life of food products in tamil
உணவுகள் மற்றும் காய்கறிகள் அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..!
தற்போது உள்ள காலகட்டங்களில் உணவுப் பொருட்களின் விலை என்பது உச்சகட்டத்தில் இருக்கிறது,உணவுப் பொருட்களை சேமித்து வைப்பது என்பது மிகப் பெரிய ஒரு சவாலாக இருக்கிறது.
தற்போது உணவுகள் மற்றும் சமைக்கும் பொருட்களின் ஆயுட்கலத்தை நீடிப்பது மூலம் உணவின் புத்துணர்ச்சியை மற்றும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை தக்க வைக்க முடியும்.
ஆனால் குளிர்சாதன பெட்டிகள் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு உணவுகள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா.
உணவை பதப்படுத்துவதற்கு பழங்காலத்தில் அதன் ஆயுளை நீட்டிப்பதற்கும்,பயன்படுத்தப்பட்ட விசித்திரமான பழக்க வழக்கங்கள் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
நொதித்தல் செயல்முறை
நொதித்தல் என்பது உணவுகளின் அடுக்கு ஆயிலை நீட்டிப்பதற்கும் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை பல மடங்கு அதிகரிப்பதற்கும், பயன்படுத்தப்பட்ட ஒரு பழமையான வழிமுறையாகும்.
செயல்முறை நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு வழிவகை செய்கிறது,இது பானங்கள், காய்கறிகள், பழங்கள், போன்ற உணவுப் பொருட்களை முற்றிலும் பாதுகாக்கிறது.
தேன்
தேன் என்பது ஒரு இயற்கையான பாதுகாப்பை அளிக்கும் பொருளாகும்,இது உணவை பாதுகாக்கும் பாரம்பரிய வழிமுறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
இதன் குறைந்த நீர் உள்ளடக்கம் மற்றும் அமிலத்தன்மை காரணமாக சில பழங்கள் மற்றும் புதிய காய்கறிகளை பாதுகாக்க இன்றும் பழங்குடி மக்கள் மற்றும் காடுகளில் வாழும் மக்களால் பாதுகாக்கப்படுகிறது.
இது தவிர தேனில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள்,பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியை தடுக்கும்.
ஊறுகாய்
உப்பு மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்கள் போன்ற உணவின் சுவையை அதிகரிக்க கூடுதல்பொருட்களுடன் கூடிய காரத்தன்மை வாய்ந்த அமிலம், வினிகர்,எண்ணெய்கள் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றையும்.
உணவு பொருட்களை ஊற வைப்பது,பழங்கால செயல்முறையாகும், ஊறுகாய் பல மாதங்கள் எளிதில் கெட்டுப் போகாத உணவாகும்.
கருவாடு
கருவாடு என்பது அனைவரும் அறிந்த ஒரு உணவுப் பொருளாகும் கடல்களில் பிடிக்கப்படும்,சிறியதாக மீன்களை நன்றாக வெயிலில் உலர்த்தி பதப்படுத்தினால்,நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் அதனுடைய ஊட்டச்சத்து மாறாமல் இருக்கும்.
ஆட்டு இறைச்சி
பழங்காலங்களில் ஆட்டு இறைச்சியை உப்புடன் சேர்த்து நன்றாக வெயிலில் உலர்த்தி அதை நீண்ட நாட்கள் கழித்து பயன்படுத்தலாம்.
உப்பு சேர்த்து நன்றாக உளர்த்தப்படுவதால் இது கெட்டுப் போவதற்கான வாய்ப்பை முற்றிலும் இழந்து விடுகிறது,இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் பாதுகாக்கப்படுகிறது.
உலர வைத்தல்
ஆரம்பகால மற்றும் எளிதான அறியப்பட்ட நடைமுறைகளில் இதுவும் ஒன்றாகும்,உலர்த்துதல் என்பது உணவுகளை நீரிழிப்பு செய்வதை குறிக்கிறது.
ஈஸ்ட் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கும் மற்றும் உணவு பாதுகாக்க உதவும் உணவில் உள்ள அனைத்து ஈரப்பதத்தையும் அகற்றுவது இதன் நோக்கம்.
சூரியன் மற்றும் காற்று உலற்றுதல் மிகவும் பிரபலமான செயல்முறைகள் என்றாலும் உலர்த்துதல் ஓவன்கள் மற்றும் மைக்ரோவேன்களை பயன்படுத்தி செய்யலாம்.
உப்பு
உப்பை பயன்படுத்தி உணவை பாதுகாப்பது என்பது உணவுகளின் புத்துணர்ச்சியை தக்கவைக்க மற்றொரு பாரம்பரிய வழிமுறையாகும்.
இது உணவு மற்றும் பொருட்களில் இருந்து ஈரப்பதத்தை வெளியேற்றுவதற்கும் மற்றும் பல வகையான பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்ய ஒரு தடையை ஏற்படுத்துகிறது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Airtel launch xstream fiber offers 5G speed 2023
Redmi 5G smartphone specifications price
1000 fine if you have two PAN cards in tamil