
How to link aadhaar number with voter id card in tamil
ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது எப்படி..!
நாடு முழுவதிலும் உள்ள போலி வாக்காளர் அடையாள அட்டையை முழுவதும் நீக்க வேண்டும் அது மட்டுமில்லாமல் நாட்டை பாதுகாப்பாக மாற்ற வேண்டும்.
என இந்திய தேர்தல் ஆணையம் ஒரு முடிவை நாடு முழுவதும் இப்பொழுது அமல்படுத்தியுள்ளது.
ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதன் மூலம் நாட்டிலுள்ள அனைத்துப் போலி வாக்காளர் அடையாள அட்டைகளும் நீக்கப்படும்.
இப்பொழுது வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே ஆதார் அட்டை உடன் இணைக்காமல் இருக்கும் ஒரே ஒரு இந்திய அரசு சான்றிதழ் என்று சொல்லலாம்.
இப்பொழுது அதையும் ஆதார் எண்ணுடன் இணைத்து விட்டால் நாட்டில் உள்ள அனைத்து சான்றிதழ்களும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுவிட்டது என்றாகிவிடும்.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள் குறைகளை சரி செய்யும் நோக்கில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
இந்திய தேர்தல் ஆணையம் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை எதிர்த்து பல அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்தனர்.
ஆனால் உச்சநீதிமன்றம் கட்டாயம் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள எண்ணுடன் இணைப்பு சரி என்று உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்றம் உத்தரவு இருப்பதால் ஆதார் எண்ணை கட்டாயம் தரவேண்டும் என்று அறிவுறுத்தப்பாடாவிட்டாலும் வாக்காளர் பட்டியலில் வெளிப்படைத் தன்மையை இருக்கவேண்டுமென.
ஆதார் அல்லது குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண், உள்ளிட்ட 11 ஆவணங்களையும் இணைக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆதார் வாக்காளர் அடையாள அட்டை
நாடு முழுவதும் கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி ஆதார் இணைப்பு பணிகளை தொடங்கிய நிலையில் தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் இதுவரை 97 லட்சம் பேர் ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க பதிவு செய்துள்ளார்கள்.
அதேபோல் தேசிய வாக்காளர் சேவை அமைப்பான (https://www.nvsp.in) இணையதளத்தின் மூலம் மக்கள் இந்த பணியை மேற்கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் பொதுமக்கள் 6b படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் மற்றபடி எந்த ஆவணங்களும் தேவையில்லை.
ஆதார் வாக்காளர் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களின் நகல்களை அளிக்க வேண்டியதில்லை.
அதேபோல் தேசிய வாக்காளர் சேவை அமைப்பான வாக்காளர் சேவையின் போன்றவற்றின் மூலமாகவும் வாக்காளர்கள் இணைப்பை மேற்கொள்ளலாம்.
6b படிவத்தில் கூறப்பட்டுள்ள விபரங்களின்படி செல்போன் எண்ணை அளிக்கவேண்டும்.
பெரும்பாலான வீடுகளில் ஒரே ஒரு செல்போன் மட்டும் இருக்கும் அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த எண்ணை மட்டும் கொடுத்தால் போதும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
உங்கள் செல்போனில் டெலிட் ஆன போட்டோவை எடுப்பது எப்படி..!
ஒப்புகை சீட்டு
ஆதார் இணைப்பிற்கான 6b படிவத்திற்கு ஒப்புகை சீட்டு தரப்படுவதில்லை, ஒப்புகை சீட்டு கொடுக்காவிட்டால் ஆதார் எண் இணைப்பு குறித்து நிலை எப்படி அறிய முடியும் என மக்கள் கேள்வி எழுப்பினார்கள்.
ஆதார் இணைப்பு ஒப்புகை சீட்டு தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள்.
Free Smartphone and internet for housewives
இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் ஆதார் எண் மற்றும் ஓட்டர் ஐடி கட்டாயம் இருக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.
இதன்மூலம் போலி வாக்காளர் அடையாள அட்டை முழுவதும் நீக்கப்படும், அதுமட்டுமில்லாமல் கள்ள ஓட்டு போடுவது என்பது முடியாத நிலையாக மாறிவிடும்.