செய்திகள்

Voter ID உடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி..! How to link voter ID card and Aadhar card online

How to link voter ID card and Aadhar card online

How to link voter ID card and Aadhar card online

Voter ID உடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி அலைச்சல் வேண்டாம் தொலைபேசி போதும்..!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எளிய வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரி செய்யவும் அதில் குழப்பங்களை நிவர்த்தி செய்யவும்,இந்திய தேர்தல் ஆணையம் இந்த பணியை தற்போது தொடங்கி உள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை உடன் ஆதார் அட்டை இணைப்பதன் மற்றொரு நோக்கம் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்குப்பதிவு செய்து இருந்தால் அடையாளம் காண்பதற்கான நோக்கம்.

நீதிமன்ற உத்தரவு இருப்பதால் ஆதார் இணைப்பு கட்டாயம் என குறிப்பிடப்படவில்லை,இருப்பினும் இதில் என்ன பிரச்சனை இருக்கு அதையும் செய்து விடுவோம் என பலரும் ஆர்வமுடன் இணைத்து வருகிறார்கள்.

தொலைபேசி மூலமாகவே எளிதாக இணைத்து விடலாம்

ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பதற்கான பணி ஏற்கனவே தொடங்கி விட்டது.

வீட்டில் இருந்தபடியே வாக்காளர் அடையாள அட்டை உடன் ஆதார் அட்டை இணைக்கும் பணியை நீங்கள் மேற்கொள்ளலாம்.

இதற்கு தேர்தல் ஆணையம் 6பி என்ற படிவத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

இந்த இணைப்பை மேற்கொள்வதற்கு இ-சேவை மையம் தேடி அலைய தேவையில்லை,உங்கள் தொலைபேசி மூலமாகவே எளிதாக இந்த பணியை மேற்கொள்ளலாம்.

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்

உங்கள் தொலைபேசியில் ஒரே ஒரு செயலி (Mobile Application) டவுன்லோட் செய்து எளிதாக வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கலாம் இதில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம் இருக்கிறது.

ஆதார் அட்டையில் எந்த ஒரு பணியை மேற்கொண்டாலும் அதற்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் மிகக் கட்டாயம் தேவை.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை இணைப்பது

கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் பிளே ஸ்டோரில் (Voter Helpline) என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.

பின் Voter Helpline செயலியை ஓபன் செய்து I Agree என்ற தேர்வை கிளிக் செய்து Next என்ற விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

அதில் Voter Registration என்ற தேர்வை கிளிக் செய்து விட்டு பின் Electoral Artistication Form என்ற தேர்வை தேர்ந்தெடுத்தவும்.

Let’s Start என்ற விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளவும் உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடவும் குறிப்பு ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் கட்டாயம் இருக்க வேண்டும்.

நீங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு கடவுச்சொல் OTP எண்  அனுப்பப்படும் அதை சரியாக பதிவிட்டு Verify என்ற தேர்வை கிளிக் செய்யவும்.

பின் வாக்காளர் அடையாள அட்டை இருக்கின்ற என்ற தேர்வை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்,தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டை எண்களை உள்ளீடு வேண்டும்.

பின் உங்கள் மாநிலத்தை தேர்வு செய்து கொண்டு Fetch Details என்பதை கிளிக் செய்து கொள்ளவும் தொடர்ந்து Proceed என்ற தேர்வை கிளிக் செய்யவும்.

திரையில் காட்டப்படும் உங்கள் விவரங்களை சரி பார்த்துக் கொண்டு Next என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.

இப்போது உங்கள் ஆதார் எண், தொலைபேசி எண், விண்ணப்பிக்கும் இடம், ஆகியவற்றை உள்ளிட்டு பின் Done என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.

Done என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்த உடன் உங்கள் திரையில் 6B படிவம் திறக்கும்,அதில் காட்டப்படும் அனைத்து விவரங்களையும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்து confirm என்ற விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

இப்பொழுது உங்களுடைய ஆதார் அட்டை,வாக்காளர் அடையாள அட்டை உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

How to change minor PAN card to Major PAN card

How to apply new voter id online in tamil

New privacy feature in WhatsApp 2023

எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

ரூ 1000 உரிமைத் தொகை இப்படித்தான் கிடைக்குமா

புதிய ரேஷன் கார்டு வாங்கப்போகிறீர்களா?

What is your reaction?

Excited
0
Happy
2
In Love
0
Not Sure
0
Silly
1