
How to make delicious garlic pickle in tamil
சுவையான பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி..!
ஊறுகாய் என்றாலே பல நபர்களுக்கும் பிடித்த சைடிஸ் ஒரு சில நபர்களுக்கு சாப்பாட்டிற்கு சைடிஸ் இல்லை என்றால் இந்த ஊறுகாய் இருந்தால் போதும் என்று சொல்வார்கள்.
ஊறுகாய் பிரியர்கள் உலகில் பல நபர்கள் இருக்கிறார்கள், ஊறுகாயில் பலவிதமான ஊறுகாய் வகைகள் உள்ளது அதில் மிகவும் பிரபலமடைந்த என்றால்.
இஞ்சி பூண்டு ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய், பூண்டு ஊறுகாய், நார்த்தங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய், தக்காளி ஊறுகாய், போன்ற பல வகைகள் இருக்கிறது.
இந்த சமையல் குறிப்பு பகுதியில் கூடுதலாக சாப்பிடத் தூண்டும் பூண்டு ஊறுகாய் வீட்டிலிருந்தே ஈசியாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
பூண்டு ஊறுகாய் செய்ய தேவையான மூலப்பொருட்கள்
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – தேவையான அளவு
புளி – ஒரு எலுமிச்சை அளவு ஊறவைத்த கரைசல்
வெல்லம் – 2 டீஸ்பூன்
கடுகு தாளிக்க – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
வறுத்த வெந்தயப் பொடி – 1 டீஸ்பூன்
உரித்த பூண்டு – 1/4 கிலோ
பூண்டு ஊறுகாய் செய்முறை விளக்கம்
குறிப்பு 1
பூண்டு ஊறுகாய் செய்ய முதலில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி பொரித்து வைத்துள்ள பூண்டை அதில் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும், அதன் பிறகு பூண்டு நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்து விடலாம்.
குறிப்பு 2
பூண்டு நன்றாக ஆறியதும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பு 3
பூண்டு வறுத்த அதே வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சிறிதளவு கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பு 4
கடுகு நன்றாக பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும், அதனுடன் வெந்தயப்பொடி கொஞ்சமாக அல்லது தேவையான அளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.
குறிப்பு 5
அதன்பிறகு மிக்ஸி ஜாரில் ஆற வைத்து அரைத்து வைத்துள்ள பூண்டு விழுதினை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
குறிப்பு 6
அதன்பிறகு கொஞ்சமாக பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
குறிப்பு 7
அடுத்ததாக உங்களுக்கு பிடித்த அளவு மிளகாய் தூள் சேர்த்து வதக்கி விட வேண்டும், இப்பொழுது ஊற வைத்துள்ள புளி கரைசலை அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
குறிப்பு 8
அதன் பிறகு தேவையான அளவிற்கு உப்பு, வெல்லம், சேர்த்து கிளறவும் எண்ணெய் மேலே பிரிந்து வரும், அளவிற்கு இதை நன்றாக செய்ய வேண்டும்.
குறிப்பு 9
நல்லெண்ணெயை நன்றாக மேலே பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து கொள்ள வேண்டும், இப்பொழுது சுவையான பூண்டு ஊறுகாய் ரெடி ஆகிவிட்டது.
எப்போதும் சூடாக மூடிவைத்து விடாதீர்கள், தனியாக ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளலாம்.
நண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்..!
இதனை குறைந்தது ஒரு வருடம் வரை வைத்து சாப்பிடலாம் நன்றாக சுவையாக இருக்கும்.
ஊறுகாய் சுவை என்பது சாப்பிடுபவர்களுக்கு உணவை இன்னும் அதிக அளவு சாப்பிட தூண்டும் அளவிற்கு இருக்க வேண்டும்.
Tips to get high yields from mushroom cultivation
நம் தமிழ்நாட்டில் பூண்டு ஊறுகாய் அதிகம் பிரசித்தி பெற்றது இதற்கு அதிக வரவேற்பு இருக்கிறது, இதனை நீங்கள் ஒரு தொழிலாக செய்து வந்தால் கூட அதிக வருமானத்தை பெற முடியும்.
இப்பொழுது பன்னாட்டு நிறுவனங்களும் அனைத்து வகையான ஊறுகாய் களையும் விற்பனை செய்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.