
How to make egg fried rice recipe in tamil 2022
ஹோட்டல் சுவையில் வீட்டில் எக் ரைஸ் செய்வது எப்படி..!
இந்த பதிவில் அனைவருக்கும் பிடித்த ஹோட்டல் சுவையில் எக்ரைஸ் வீட்டிலிருந்தபடியே செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
முட்டை சாதம் என்றாலே அனைவருக்கும் பிடித்தது அதை எப்படி செய்யலாம் என்ற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலில் தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழகத்தில் இன்று சிற்றுண்டி வகை உணவுகளில் முதல் இடத்தில் இருப்பது எக் ரைஸ் அதிக அளவில் விற்பனையாகிறது.
எக் ரைஸ் செய்வது எப்படி
தேவையான பொருட்கள்
முட்டை – 6
உப்பு – சிறிதளவு
மஞ்சள்தூள் – சிறிதளவு
கான்ஃபிளவர் மாவு – 3 டீஸ்பூன்
அரிசி மாவு – 1 டீஸ்பூன்
மிளகாய்தூள் – சிறிதளவு
கரம் மசாலா – சிறிதளவு
பெரிய வெங்காயம் – 1 தட்டை வடிவில் நறுக்கியது
பூண்டு – 10 பொடியாக நறுக்கியது
இஞ்சி – சிறிதளவு சீவீயது
கேரட் பெரிய – 1 பொடியாக நறுக்கியது
பெரிய குடைமிளகாய் – 2 தட்டை வடிவில் நறுக்கியது
கொத்தமல்லி – தேவையான அளவு
பெப்பர் தூள் – சிறிதளவு
முட்டைகோஸ் – 100 கிராம் பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 3நறுக்கியது
பாஸ்மதி அரிசி – 2 கப்
தண்ணீர் – தேவையான அளவு
முதலில் ஒரு வாணலியில் 6 முட்டையை உடைத்து எடுத்துக் கொள்ளவும் இதில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவேண்டும் மஞ்சள்தூள் கொஞ்சமாக சேர்த்துக்கொள்ளுங்கள்.
இவற்றை எல்லாம் நன்றாக கலந்து கொள்ளவேண்டும் நன்றாக கலந்த பிறகு தனியாக ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெயை தடவிக் கொள்ளுங்கள்.
எண்ணெய்னை தழுவிய வானொலியில் கலந்த முட்டையை சேர்க்க வேண்டும், அடுத்து இட்லி பாத்திரம் அல்லது தனியாக பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் வைத்து அடியில் பிளேட் வைத்துக் கொள்ளவும்.
குறிப்பு 2
அந்த தட்டின் மேல் எண்ணெய் தடவி பாத்திரத்தில் கலந்த முட்டையை இதன் மேல் வைக்கவும் அதை மூடி 10 நிமிடம் வேக வைக்க வேண்டும் நன்றாக வெந்தபிறகு ஆற வைக்க வேண்டும்.
ஆறிய பிறகு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் எந்த வடிவில் உங்களுக்கு தேவையோ அது போன்று கட் செய்து கொள்ளுங்கள்.
எல்லாவற்றையும் உங்களுக்கு பிடித்த வடிவில் கட் செய்து தனியாக ஒரு வானொலியில் கான்ஃபிளவர் மாவு – 3 டீஸ்பூன் ,உப்பு – சிறிதளவு,அரிசி மாவு – 1 டீஸ்பூன் ,மிளகாய்தூள் – சிறிதளவு,கரம் மசாலா – சிறிதளவு தேவையான அளவு சேர்த்த பிறகு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்தக் கலவையில் நறுக்கிய முட்டையை இதில் சேர்த்து கலக்க வேண்டும்.
அடுத்த தனியாக ஒரு கடாயில் நறுக்கிய முட்டை கலவையை பொரித்தெடுக்க தேவையான அளவிற்கு எண்ணெயை சூடு செய்து கொள்ளவும்.
குறிப்பு 3
எண்ணெயில் முட்டைய ஒவ்வொன்றாகப் போட்டு சிவந்து வந்தவுடன் எடுக்கவேண்டும், அடுத்ததாக தனியாக ஒரு கடாயை சூடு செய்து 3 டீ ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பெரிய வெங்காயம் – 1 தட்டை வடிவில் நறுக்கியது,எண்ணெயில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்து பச்சை மிளகாய் – 3நறுக்கியது,சேர்த்துக் கொள்ளவும் இதை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
இதனுடன் இஞ்சி மற்றும் பூண்டு 10 பொடியாக நறுக்கியது சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பு 4
அடுத்ததாக முட்டைகோஸ் 100 கிராம் பொடியாக நறுக்கிய சேர்த்துக்கொள்ள வேண்டும்,இதையெல்லாம் வதக்கிக்கொள்ளவும்.
நன்றாக வதங்கிய பிறகு கேரட் 1 பொடியாக நறுக்கியேதை சேர்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்து பெரி குடைமிளகாய் 1 தட்டை வடிவில் நறுக்கியதை இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும், இப்பொழுது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளுங்கள்.
அடுத்த 2முட்டை உடைத்து இதில் சேர்க்க வேண்டும், முட்டை சேர்த்த பிறகு பெப்பர் தூள் சேர்த்து, வெந்த பிறகு கரண்டியால் முட்டையை நன்றாக கிளறி விட வேண்டும்.
குறிப்பு 5
இதை அனைத்தையும் நன்றாக கலந்துகொள்ளவேண்டும் இதனுடன் மிளகாய் தூள் 1/2,கரம் மசாலா 1/2,பெப்பர் தூள் 1/2 உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
சொட்டை விழுந்த இடத்தில் முடி வேகமாக வளர வேண்டுமா..!
2 கப் அளவிற்கு பாஸ்மதி அரிசி வேக வைத்துக் கொள்ள வேண்டும், சாதம் வடிக்கும் போது தண்ணீரில் 1 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பு 6
அதன் பிறகு வடித்த சாதத்தை வானொலியில் இருக்கும் மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்த சாதத்தில் முதலில் கட் செய்த, பொரித்த முட்டையை சாதத்தில் சேர்க்கவேண்டும்.
Borewell scheme subsidy full details in tamil
இதையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும், பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி சேர்க்கவேண்டும். அவ்வளவுதான் ஹோட்டல் சுவையில் எக் ரைஸ் தயாராகிவிட்டது கண்டிப்பாக வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.