
How to make home hibiscus hair oil
முடி கொட்டும் பிரச்சனைக்கு ஒரு சரியான தீர்வு செம்பருத்தி எண்ணெய்
இன்றைய காலகட்டங்களில் இளைஞர்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்சினை என்றால் அது முடி சார்ந்த பிரச்சனைகள் தான்.
இதற்கு சந்தையில் பல்வேறு வகையான எண்ணெய்கள், மாத்திரை, மருந்துகள், இருந்தாலும் அதனை முழுமையாக குணப்படுத்த முடியவில்லை.
அதற்கு இயற்கையில் கிடைக்கும் மற்றும் வீட்டுக்கு அருகில் இருக்கும் இந்த பொருட்களை பயன்படுத்தினால் எளிதில் உங்கள் முடி சார்ந்த பிரச்சனைகளை நீங்கள் தீர்க்கலாம்.
செம்பருத்தி எண்ணெய் செய்முறை, இயற்கை தாவரங்களில் ஒன்று பலவகை மருந்து தன்மைகளை கொண்டது, அதிக குளிர்ச்சி தன்மை உடையது.
மேலும் செம்பருத்தி எண்ணெயை தலைமுடி உதிர்வுக்கு, பொடுகு தொல்லைக்கு, முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர, கூந்தல் அடர்த்தியாக வளர, கூந்தல் ஆரோக்கியம், என்று பல வகையான கூந்தல் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக செம்பருத்தி எண்ணெய் இருக்கிறது.
தலைமுடி நன்கு வளர, இந்த செம்பருத்தி எண்ணெய் நல்ல பயன் அளிக்கக் கூடியதாக இருக்கிறது, அந்த செம்பருத்தி எண்ணெய் சந்தையில் பல வகைகள் உள்ளது.
இருப்பினும் அவை எல்லாம் இயற்கையான முறையில், சரியான வழிமுறைகளில் தயாரிக்கப்பட்டதாக, என்றால் கண்டிப்பாக நிச்சயம் இருக்காது.
இந்த செம்பருத்தி எண்ணெய் இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்வோம்.
எண்ணெய் தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்கள்
செம்பருத்தி இலை – 10
செம்பருத்தி பூ – 10
தேங்காய் எண்ணெய் -1/2 லிட்டர்
வேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு தோராயமாக
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு தோராயமாக
செம்பருத்தி எண்ணெய் செய்முறை
செம்பருத்தி எண்ணெய் செய்வதற்கு நல்ல தரமான 15 செம்பருத்திப்பூ பூக்களும், 15 செம்பருத்தி இலைகளும், தேவைப்படும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது பூச்சி, புழுக்கள், அரித்திரூக்ககூடாது.
இவற்றை நன்றாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு அடுப்பில் ஒரு பெரிய வாணலியை வைத்துக்கொள்ளவும் அவற்றில் உங்கள் தேவைக்கு ஏற்ப, தோராயமாக ஒரு 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேற்றவும்.
எண்ணெய் நன்றாக சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, அரைத்த கலவையை எண்ணெயில் சேர்க்க வேண்டும்.
பின்பு அதனுடன் சிறிதளவு வேப்பிலையை சேர்க்கவேண்டும் வேப்பிலை பொடுகு பிரச்சனையை சரி செய்ய பெரிதும் உதவி செய்யும்.
உங்களுக்கு பொடுகு சார்ந்த பிரச்சினைகள் இருந்தால் எண்ணெயில் சிறிதளவு வேப்பிலையை சேர்த்துக் கொள்ளுங்கள், இல்லை என்றால் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இதன் பிறகு இந்த எண்ணெயில் சிறிதளவு கருவேப்பிலை சேர்க்கவேண்டும், கறிவேப்பிலை தலைமுடி உதிர்வு பிரச்சனையை சரிசெய்து, தலைமுடி நன்கு வளர உதவி செய்கிறது.
பின்பு இந்த செம்பருத்தி எண்ணெயையே நன்றாக ஆற வைத்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக நீங்கள் கண்ணாடி பாட்டிலில் மட்டுமே இந்த எண்ணெயையே ஊற்றி வைக்க வேண்டும்.
இந்த எண்ணெய் பயன்படுத்தும் முறை
செம்பருத்தி எண்ணெயை தலையில் தேய்த்து சிறிது நேரம் நீங்கள் கட்டாயம் மசாஜ் செய்து கொள்ள வேண்டும், காலையில் தலைக்கு குளிக்க வேண்டும்.
தலைக்கு குளிப்பதற்கு முன்பு இந்த செம்பருத்தி எண்ணெய் தலையில் தேய்த்து மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து அதாவது சுமார் 45 நிமிடம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.
செம்பருத்தி எண்ணெய் தினசரி நீங்கள் உங்களுடைய தலைமுடிக்கு பயன்படுத்தலாம் இந்த எண்ணெயை வாரத்தில் இரண்டு முறையாவது கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை ஆண்களும், பெண்களும், பயன்படுத்தலாம்.
ஹோமியோபதி மருத்துவக் குறிப்புகள்
செம்பருத்தி எண்ணெய் பயன்கள்
இந்த செம்பருத்தி எண்ணெய் தலைமுடி வளர்ச்சியை சரி செய்யும், முடி உதிர்தலை தடுக்கவும், கூந்தல் பளபளப்பாகவும், மென்மையாகவும், வைக்கும்.
How to find pure oil made in Czech in tamil
தலைமுடி அடர்த்தி அதிகரிக்கும், பொடுகுத்தொல்லை சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்யும், தலை முடியில் வரும் சொறி, சிரங்கு, மற்றும் நரை முடிகளை சரிசெய்யும்.