Uncategorized

How to make mushroom biryani in tamil

How to make mushroom biryani in tamil

How to make mushroom biryani in tamil

காளான் பிரியாணி வீட்டிலிருந்து செய்வது எப்படி எளிமையான குறிப்பு..!

பிரியாணி என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவாகும் பிரியாணியில் பலவகைகள் இருக்கிறது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பிரியாணி பிடிக்கும்.

இப்பொழுது இருக்கும் அதி நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் காய்கறிகளை வைத்து பல்வேறு விதமான பிரியாணி தயார் செய்து விடப்படுகிறது.

அதில் சுவையும் பலமடங்கு கூட்டப்படுகிறது அனைத்து வகையான பிரியாணி விட காளான் பிரியாணி மிகவும் சுவையானதாக இருக்கிறது, இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

How to make mushroom biryani in tamil

தேவையான மூலப்பொருட்கள்

காளான் – 1/2 கிலோ

பாசுமதி அரிசி அல்லது பிரியாணி அரிசி – 2 கப்

வெங்காயம் ஒன்று – 2நறுக்கிய

தக்காளி – 2 சிறிதாக நறுக்கியது

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்

கொத்தமல்லி – (1/4 நறுக்கிய)

புதினா (1/4 நறுக்கிய)

பச்சை மிளகாய் – 3 வெட்டப்பட்டது

எண்ணெய் – (3 டேபிள் ஸ்பூன்)

நெய் – (3 டேபிள்ஸ்பூன்)

தேங்காய் பால் -1/2 கப்

தயிர் மிளகாய் -(2 டேபிள் ஸ்பூன்)

மல்லி தூள் -(2 டேபிள் ஸ்பூன்)

சோம்பு தூள் -(1/2) 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – (1/4) டீஸ்பூன்

பிரியாணி இலை – 1

ஏலக்காய் – 3

லவங்கம் – 2

கிராம்பு – 5

தண்ணீர் -3கப்

உப்பு- தேவையான அளவு

How to make mushroom biryani in tamil

காளான் பிரியாணி செய்முறை விளக்கம்

செய்முறை 1

1/2 முதலில் காளானை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை 2

அரிசியை நன்கு கழுவி நீரில் ஊற வைக்க வேண்டும்.

செய்முறை 3

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து நெய் ஊற்றி நன்கு சூடேறியதும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், இலவங்கம், கறிவேப்பிலை, கடுகு சேர்த்து, தாளிக்க வேண்டும்.

செய்முறை 4

பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

செய்முறை 5

அதன் பின்பு நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், கொத்தமல்லி, மற்றும் புதினா சேர்த்து வதக்க வேண்டும்.

செய்முறை 6

அதன் கூட தக்காளி மற்றும் இஞ்சி, பூண்டு பேஸ்ட், சேர்த்து கொள்ள வேண்டும்.

செய்முறை 7

தக்காளி நன்கு வதங்கியதும் சுத்தம் செய்து உள்ள காளானை சேர்த்து கிளறவேண்டும் நன்கு, அதன் பிறகு மல்லி தூள், சோம்பு தூள், மிளகாய் தூள், தயிர், தேங்காய் பால், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிரேவி போன்று வரும்வரை கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

அரசு வழங்கும் 90 சதவீத மானியத்துடன் ஆடு வழங்கும் திட்டம்..!

செய்முறை 8

அதேநேரத்தில் குக்கரை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் அரிசியைக் கழுவி போட்டு, அந்த கிரேவியை ஊற்றி 3 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

How to make special chicken biryani in tamil

செய்முறை 9

இவ்வாறு செய்தால் அருமையான சுவையில் காளான் பிரியாணி வீட்டில் ரெடியாகிவிடும், இதன் கூட தயிர்ப்பச்சடி சேர்த்துக் கொண்டால் இன்னும் நன்கு சுவை கூடி விடும்.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0