
How to make samosa recipe in tamil
சுவையான வெங்காய சமோசா செய்வது எப்படி..!
நண்பர்களுக்கு வணக்கம் நாம் இன்று பார்க்கப் போகிறது என்னவென்றால் எல்லோருக்கும் பிடித்த அறுசுவை நிறைந்த வெங்காய சமோசா செய்வது எப்படி தான்.
இது குழந்தைகளுக்கு மட்டும் மட்டும் பிடித்த ஒன்று இல்லை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியதாக வெங்காய சமோசா இருக்கிறது.
இது செய்வதே பெரிய விஷயம் இல்லை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இதனை எளிமையாக செய்து விடலாம்.
தமிழ்நாட்டில் அதிக அளவு விற்பனை ஆகக்கூடிய தின்பண்டங்களில் சமோசா எப்போதும் முதன்மையாக இருக்கிறது.
சமோசா செய்வதற்கு தேவையான மூலப்பொருட்கள்
மைதா மாவு – 3 கப்
கோதுமை மாவு – 2 கப்
எண்ணெய் – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 5
இஞ்சி சிறிதளவு – நன்கு இடித்தது
மஞ்சள்தூள் – தேவையான அளவு
மிளகாய்த்தூள் -1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
சோம்பு – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்
சமோசா செய்வது எப்படி
மைதா மாவு 3 கப், கோதுமை மாவு 2 கப், தேவையான அளவு உப்பு, சிறிதளவு நல்லெண்ணெய், அதனுடன் தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பிசைவதுபோல் நன்கு பிசைந்து கொள்ளவும், பிறகு 10 நிமிடம் அல்லது 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
ஊற வைத்த மாவை உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள் பிறகு சப்பாத்தி செய்யும்படி விரித்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அதில் நாம் எடுத்து வைத்த சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
சமோசா போல் சுருட்டிக் கொள்ள வேண்டும், பின்பு அதில் தயாராக வைத்துள்ள மசாலாவை வைத்துக் கொள்ளவும்.
இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்கவும் அதன் பிறகு அதில் செய்து வைத்துள்ள சமோசாவை எண்ணெயில் போட்டு பொரிக்கவும், இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
சில முக்கிய குறிப்புகள்
இதனை செய்வதற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய சமையல் எண்ணெய் ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்று சோதனை செய்து கொள்ளுங்கள் அல்லது மரச்செக்கில் ஆற்றிய சுத்தமான கடலை எண்ணெய் பயன்படுத்துங்கள்.
ஏனென்றால் சமோசா எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ளக் கூடிய ஒரு உணவுப் பொருள், இதை அதிகமாக சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
மீன்களில் எந்த வகையான மீன் அதிக சுவை கொண்டது..!
சுத்தமான கடலை எண்ணெய் பயன்படுத்தினால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதனை நீங்கள் ஒரு தொழிலாக கூட செய்து கொள்ளலாம் இதன் மூலம் உங்களுக்கு அதிகமான வருமானமும் கிடைக்கும்.
Meen kulambu seivathu eppadi in tamil 2022
சமோசாவை நீங்கள் அதிக அளவு விற்பனை செய்ய வேண்டுமென்றால் சுவை கூட்டுவது என்பது முக்கியமானதாக இருக்கிறது, அதுமட்டுமில்லாமல் அடுத்தபடியாக விற்பனை செய்யும் திறனைப் பொருத்து.
சமோசாவில் கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, போன்றவையும் சேர்த்து செய்தால் அதிக சுவை உள்ளதாக இருக்கும்.