
How to make special chicken biryani in tamil
சுவையான சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..!
பிரியாணி உணவை பிடிக்காத நபர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் சிக்கன், மட்டன், மாட்டிறைச்சி, மீன்,பன்றி இறைச்சி, எதுவென்றாலும் பிரியாணி உணவுக்கு ஈடு இல்லை என சொல்லலாம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும் பிரியாணி உணவு இப்பொழுது ஒரு வழக்கமான உணவாக மாறி வருகிறது, பிரியாணி உணவை உங்கள் வீட்டில் எளிமையாக செய்து உங்கள் சுவைக்கேற்ப ரசிக்கலாம்.
பிரியாணி உணவு என்பது அதிக அளவில் மக்களை கவர்ந்துள்ளது, இதனுடைய சுவை, மணம் மற்றும் நிறம் என்பது அட்டகாசமாக இருக்கும்.
பிரியாணியில் பல வகையாக இருக்கிறது செட்டிநாடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, தம் பிரியாணி, தலப்பாக்கட்டு பிரியாணி, ஜாலி பிரியாணி, சுவைக்கேற்ப பிரியாணியின் தரம் மாறுபடும் மற்றும் விலையும் மாறுபடும்.
இதற்கு தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி தோராயமாக – 1கிலோ
சிக்கன் – 1 கிலோ
கடலெண்ணெய் – 100 கிராம்
நெய் – 150 கிராம்
வெங்காயம் – அரை கிலோ
தக்காளி – தேவைக்கேற்ப
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்
பட்டை பிரியாணி இலை – 1
கிராம்பு, ஏலக்காய் – 4
மல்லித்தழை – ஒரு கப்
புதினா – ஒரு கப்
பச்சை மிளகாய் – 6
தயிர் – ஒரு கப்
மிளகாய்தூள் – தேவையான அளவு
மஞ்சள்தூள் – சிறிதளவு
மல்லித் தூள் -ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை பழம் – 1
சுவையான பிரியாணி செய்யும் முறை
முதலில் குக்கரில் எண்ணெயும், நெய்யும் ஊற்றி, பட்டை பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், போட்டு பொரியவிடவும் அதன் பிறகு அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவேண்டும்
வெங்காயம் போட்டு, நன்றாக கிளறவும், இத்துடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி போட்டு நன்றாக வதக்கவேண்டும், இவையெல்லாம் நன்றாக வதங்கிய உடன், பாதி கொத்தமல்லி புதினா இலையைப் போட்டு நன்றாக கிளறி விட வேண்டும்.
பின் அதில் பச்சை மிளகாய், மல்லி தூள், மஞ்சள் தூள், போட்டு வதங்கியவுடன் சிக்கன் சிறிதளவு உப்பு, தயிர் ஊற்றி, நன்றாக சிறிது நேரம் கிளற வேண்டும்.
தானிய பொடி அல்லது கொத்தமல்லி தூள்,1/2 மூடி எலுமிச்சை சாறு விட்டு நன்றாக வேக விட வேண்டும், சுத்தப்படுத்தி வைத்துள்ள சிக்கன் நன்கு வெந்த உடன் எண்ணைய் மேல் வரும் போது ஒரு கப் அரிசி ஒன்றரை கப் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் நன்கு கொதித்த பிறகு ஊற வைத்துள்ள அரிசியை கழுவி போட்டுவிடவேண்டும், மீத முள்ள கொத்தமல்லி புதினா தழை போட்டு நன்றாக வேக விட வேண்டும்.
இத்துடன் சரியான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும் விசில் போட வேண்டாம்.
பல் வலி குணமாக பாட்டி வைத்தியம்
அரிசி பாதி வேகும் வரை தீயை நன்றாக ஏறி வைக்கவேண்டும் முக்கால் பாதி வெந்தவுடன் ஸ்டவ்வை சிம்மில் வைத்து எலுமிச்சை சாறு பிழிந்து போட்ட பின்னர் விசில் போட்டு தம்மில் போட வேண்டும்.
Best health nutrition for pregnant women in tamil
இதனால் கோழி இறைச்சி நல்ல மென்மையாக வெந்திருக்கும் குழைய வாய்ப்பில்லை 10 நிமிடம் அல்லது 15 நிமிடம் கழித்து விசில் எடுத்து விடலாம் சுவையான உங்களுக்கு பிடித்தமான பிரியாணி ரெடியாகிவிடும்.