
How to make tomato jam and Pickle in tamil
குடிசைத்தொழில் ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிக்கும் முறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
நீங்கள் ஒரு விவசாயியாக இருக்கலாம் அல்லது சுயதொழில் செய்யும் நபராக இருக்கலாம் அல்லது தொழில் செய்ய வேண்டும் என்ற ஒரு சிந்தனையில் இருக்கும் நபராக இருக்கலாம் உங்களுக்கு இந்த கட்டுரை சரியானதாக இருக்கும்.
தக்காளியை அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு சரி அதனை பயன்படுத்தும் பயனாளர்களின் சரி இனி கவலை வேண்டாம் தக்காளி அதிக விலையில் விற்பனை செய்யும் போது யாரும் தக்காளியை வீணடிக்க மாட்டார்கள்.
ஆனால் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யும்போது கண்டிப்பாக வீணடிக்கப்படும் எனவே அவற்றை அதிகமாக வாங்கி ஊறுகாய் ஜாம் செய்தால் நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை.
ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்ப காய்கறிகளின் விலை மாறுபடுகிறது சில நேரங்களில் ஒரு கிலோ 150 முதல் 100 ரூபாய் கூட விற்பனை செய்யப்படுகிறது.
சில நேரங்களில் கிலோ 2 ரூபாய்க்கு கூட விற்பனை செய்யப்படுகிறது, அதுபோன்று இருக்கும் காலத்தில் நீங்கள் அதிகமாக முதலீடு செய்து கொள்முதல் செய்து தக்காளி வாங்கி வைத்து ஊறுகாய் அல்லது ஜாம் செய்து எல்லா பருவ காலங்களிலும் விற்பனை செய்யலாம்.
தக்காளி ஊறுகாய் செய்வதற்கு தேவையான பொருட்கள்
நன்றாக பழுத்த தக்காளி தேவையான அளவு
மிளகாய்த்தூள் தேவையான அளவு
வெந்தயம் 2 டீஸ்பூன்
கடலைஎண்ணெய் ஆயில்
பூண்டு
பெருங்காயத்தூள்
கடுகு
உளுந்தம்பருப்பு
உப்பு தேவையான அளவு
தக்காளியை நன்றாக சுத்தம் செய்து மிக்ஸி அல்லது கிரைண்டரில் நன்கு கூழ் ஆகும் வரை அரைக்கவேண்டும், இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், ஆகியவற்றை சேர்த்து வாணலியில் இட்டு அடுப்பில் வைத்துச் சூடாக்க வேண்டும்.
அதன் பிறகு நன்கு கொதிக்கும் நிலையில் நீர் வற்றி கெட்டியாக மாறும் அப்போது, சூடு படுத்திய எண்ணெயை தக்காளியுடன் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
எப்பொழுதும் அடுப்பு மிதமாக எரியும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
தக்காளி கலவை கொதி வந்த பிறகு கலவையில் உள்ள, எண்ணெய் முழுவதும் பிரிந்து வரும் வரை, வேகவிட்டு பின்பு இருக்க வேண்டும்.
பிறகு வறுத்து தூளாக்கி, உளுத்தம்பருப்பு, கடுகு ,வெந்தயம், பெருங்காயம், இவற்றை தாளித்து பூண்டு சேர்த்து, நன்றாக வேகும் வரை வதக்கி தக்காளி சேர்த்து நன்றாக ஆறவிட்டு ஈரமில்லாத பாட்டிலில் நிரப்பி மூடி வைக்க வேண்டும்.
இதுபோல் செய்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும் குளிர்சாதனப் பெட்டிகளில் பாதுகாத்தால் நீண்டநாட்களுக்கு வைத்திருக்கலாம் இதை அனைத்து உணவுகளுக்கும் பயன்படுத்தலாம்.
தக்காளி ஜாம் செய்வது எப்படி
தக்காளி பழம்கூழ்
சர்க்கரை
சிட்ரிக் அமிலம் அல்லது எலுமிச்சை சாறு தேவையான அளவு
தக்காளி நன்கு சுத்தம் செய்து தோல் விதைகளை நீக்கி சதைப் பகுதிகளை சேகரித்து கொள்ள வேண்டும், இவற்றை மிக்ஸியில் நன்கு அரைத்து வடிகட்ட வேண்டும்.
சிறிதளவு தண்ணீர் எடுத்து அதில் சிட்ரிக் அமிலத்தைக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும் அரைத்த தக்காளியை பாத்திரத்தில் இட்டு சிறிது நேரம் வேகவிட்டு.
ஒரு கொதி வந்தவுடன் சர்க்கரை சேர்த்து அடுத்து சிட்ரிக் அமிலம் கலந்த தண்ணீரை ஊற்ற வேண்டும்.
நன்றாகக் கொதித்துக் கொண்டிருக்கும் கலவையை ஒரு ஸ்பூனில் சிறிதளவு எடுத்து ஒரு தட்டில் ஊற்றிப் பார்த்தால் கெட்டியாக வர வேண்டும் அது வரைக்கும் கலக்க வேண்டும்.
அந்தப் பதம் வந்தபின் பாத்திரத்தை இறக்கி வைத்துக் கொஞ்சம் ஆறவிட்டு வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் சூடாக இறக்கி வைக்க வேண்டும்.
மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் நிறைந்துள்ளதா..!
இந்த நிலையில் முழுவதுமாக விட்டு அதன்பிறகு பாட்டில்களை மூடி வைக்க வேண்டும்.
LIC Jeevan Lakshya child plan full details
சூடான கலவையை பாட்டில் நிரப்பும் போது மிகவும் கவனமுடன் கையாள வேண்டும், மரப்பலகை மீது வைத்துக் கொண்டால் சூட்டின் மூலம் பாட்டில்கள் உடைந்து போகாமல் தடுக்க முடியும்.