
How to message on WhatsApp without saving number
செல்போன் நம்பரை சேவ் பண்ண வேண்டாம் அப்படியே மெசேஜ் அனுப்பலாம் வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் எப்படி செய்வது..!
வாட்ஸ் அப்பில் ஏதாவது ஒரு புதிய எண்ணுக்கு மெசேஜ் செய்வதற்கு இனி அந்த எண்ணை உங்களுடைய தொலைபேசியில் சேமித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆண்ட்ராய்டு,ஆப்பிள் போன தெரியாத நபர்களின் எண்களை இனி சேவ் செய்யாமலே நேரடியாக வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை அனுப்ப முடியும்.
whatsapp தொடங்கப்பட்டது முதல் அவ்வப்போது பல்வேறு அப்டேட்களை பயனாளர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது.
முதலில் மெசேஜ் இன் தளமாக இருந்த வாட்ஸ் அப் குரூப் சாட், வாய்ஸ் கால், வீடியோ கால், யுபிஐ பேமென்ட் வசதி, என அடுத்தடுத்த பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை பயனாளர்களுக்கு கொடுத்து வருகிறது whatsapp நிறுவனம்.
whatsapp பயனளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட வசதி என்னவென்றால் மொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் கூட நாம் வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்ப முடியும்.
முன்னதாக யாராவது வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால் அவரது தொலைபேசி எண்களை கட்டாயம் சேமிக்க வேண்டியது.
தற்போது ஒரு நபரின் தொலைபேசி எண்களை சேமிக்காமலே whatsapp செயலில் மெசேஜ் செய்யலாம்.
எண்ணை சேமிக்காமல் நேரடி மெசேஜ் செய்வது எப்படி
வாட்ஸ் அப் மெசஞ்சரை ஓபன் செய்து கொள்ளுங்கள்
வலது புறம் கீழே இருக்கும் நியூ சாட் பட்டனை ஓபன் செய்யுங்கள்.
மேலே லென்ஸ் வடிவில் உள்ள பட்டனை கிளிக் செய்து தங்கள் மெசேஜ் செய்ய விரும்பும் தொலைபேசி எண்ணை அழுத்த வேண்டும்.
அந்த எண்ணுக்கு அருகில் சாட் என்ற தேர்வு ஆப்ஷன் வரும்.
அதை கிளிக் செய்தால் போதும் அந்த எண்ணுக்கு நேரடியாக மெசேஜ் செய்யலாம்.
மிகுந்த கவனமுடன் நீங்கள் இருக்க வேண்டும்
வாட்ஸ் அப் மூலம் உங்களுடைய தகவல்களைத் திருடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என META நிறுவனமும் பலமுறை பயனாளர்களுக்கு எச்சரிக்கை செய்தது.
இணையதளத்தில் நீங்கள் உலா வரும்போது அல்லது சமூக வலைத்தளங்களை நீங்கள் பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் உங்களுக்கு தெரியாமல் உங்களுடைய தொலைபேசியை ஒட்டு கேட்பது போன்றவை நடைபெறும்.
இதனால் உங்கள் வங்கிகளில் உள்ள பணத்தை திருடுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்,திடீரென்று உங்கள் தொலைபேசிக்கு வரும் எந்த ஒரு குறு செய்தி லிங்கையும் நீங்கள் அழுத்தக் கூடாது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Foods that prevent heart disease in tamil
TN provides loan assistance to start business
How to download e PAN card in tamil 2023