
How to new join tn 1000 rupees scheme in tamil
வெற்றி வெற்றி மிகப்பெரிய வெற்றி 1.06 கோடி பெண்கள் வங்கி கணக்கிற்கு ரூபாய் 1000/- செலுத்தப்பட்டு விட்டது தமிழக அரசு வெளியிட்ட முக்கிய செய்தி என்ன.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 1,000/- வழங்கும் உரிமை தொகை திமுக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருந்தது.
இது இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது,கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் தகுதியான பெண்களின் வங்கி கணக்குகளில் தலா 1,000/- செலுத்தப்பட்டு விட்டதாக தமிழக அரசு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
2023-2024 நிதியாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த ரூபாய் 7,000/- கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த நிதியாண்டில் ரூபாய் 12,000/- கோடி ஒதுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திமுக அரசு அறிவித்த இந்த திட்டத்தை இன்று நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தில் பயன்பெறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து 1 கோடியை 63 லட்சம் குடும்பத் தலைவிகள் விண்ணப்பித்திருந்தார்கள்.
1 கோடியே 6 லட்சத்து 50000 நபர்கள் இந்த திட்டத்தின் பயனாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.
இதன் அடையாளமாக பயனாளிகளுக்கு அவர் ஏடிஎம் அட்டை வழங்கினார்.
தகுதியான குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் நேற்று பிற்பகல் முதல் படிப்படியாக ரூபாய் 1,000/- செலுத்தப்பட்டுவருகிறது.
இந்த திட்டத்தால் அன்றாடம் தின கூலி வேலைக்கு செல்லும் பெண்கள்,வீட்டை கவனித்துக் கொள்ளும் தாய்மார்கள்,அனைவரும் பயன்பெறுவார்கள்.
குறிப்பாக கணவனால் கைவிடப்பட்டவர்களும்,சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் பெண்களுக்கும்,ஒருவேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் குடும்ப தலைவிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
கை செலவுக்கு ஆண்களை எதிர்பார்க்காமல் பெண்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இந்த பணம் உதவிகரமாக இருக்கும்.
பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி சமுதாயத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இது பெண்களுக்கான நிதி உதவி மட்டுமில்லாமல் பெண்களுக்கான உரிமை திட்டம் என கூறி மகிழ்ச்சி கொள்கிறேன் என திரு ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.
தமிழக அரசு மகளிர் சமூக பொருளாதார நிலையை உயரச் செய்து பெண்கள் சுயமரியாதையும் பொருளாதார விடுதலையும் பெற வழி வகுக்கும் என்பதால்.
இதற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பெயர் வைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்ததும்,இந்த மாதத்திற்கான உரிமை தொகை தகுதியான அனைத்து குடும்ப தலைவர்களின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது.
அடுத்த மாதம் முதல் மாதம் தோறும் 15ஆம் தேதி உரிமை தொகை வங்கி கணக்குகளுக்கு செல்லும் வகையில் ஏற்படுகிறது.
வருங்காலத்தில் திட்டம் பற்றிய தகவல்கள்
தமிழக அரசு வகுத்துள்ள வழிமுறைகளின் அடிப்படையில் இந்த திட்டத்தில் நீங்கள் தற்போது தகுதி பெற்றுள்ளீர்கள் வருங்காலத்தில் உங்களுடைய பொருளாதார உயர்ந்தால்.
உங்களுக்கு இந்த திட்டம் நிறுத்தப்படுமா புதிதாக இந்த திட்டத்தில் இணைவது எப்படி அதற்கான நடைமுறை என்ன,இந்த திட்டம் எத்தனை ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.
என்பது பற்றிய சில தகவல்களை இன்னும் தமிழக அரசு வெளியிடவில்லை.
வருங்காலத்தில் இந்த திட்டம் தொடர்ந்து அனைத்து பயனாளர்களுக்கும் செயல்படுத்தப்படுமா.
அல்லது பயனாளர்களின் பொருளாதாரத்தை பொறுத்து நிறுத்தப்படுமா,என்பது குறித்து இனிவரும் காலங்களில் தமிழக அரசு வெளியிடும்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
How to check passport status in tamil