
How to peace of mind training details in tamil
ஐந்து நிமிடத்தில் மகிழ்ச்சியாக மாற வேண்டுமா அப்போ இதை பின்பற்றுங்கள்..!
மனித வாழ்க்கையில் வாழ்வில் உயரமும், தாழ்வும், மகிழ்ச்சியும், துக்கமும், சேர்ந்து வரக்கூடியது, எல்லோருடைய வாழ்க்கையிலும் தினசரி புதுப்புது சவால்களை சந்தித்து எதிர்நீச்சல் போடும் மனிதர்களுக்கு மன அமைதி மிக எளிதாக கிடைப்பதில்லை.
ஒருவருக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் பொழுது அவர் மிக ஆக்ரோசமாக கோபத்தை வெளிப்படுத்துவார், சிலர் அவர்களது பிரச்சினைகளை ஆல்மனதிற்குள்ளே, வைத்துக்கொண்டு மிகவும் மன இறுக்கத்துடன் இருப்பார்கள்.
இப்பொழுது மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு ஆங்கில முறைப்படி பல மருந்து மாத்திரைகள் ஏராளமாக மார்க்கெட்டில் இருக்கிறது.
மன அழுத்தத்தை குறைப்பதற்கு தனியாக வகுப்புகளும் நடத்தப்படுகிறது அதற்கு பல ஆயிரக்கணக்கான ரூபாய் கட்ட வேண்டும்.
உளவியல் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றாலும், மன அழுத்தத்தை மிக விரைவில், 5 நிமிடத்தில் குறைத்து மிகவும் சந்தோசமாக மாறுவதற்கு எப்பொழுதும் சில வழிகளை வைத்துக்கொள்ளுங்கள்.
இத்தகைய மன அழுத்தம் பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபட நீங்கள் தியானம் அல்லது யோகா பயிற்சிகளை செய்யலாம் இதனால் உங்களது மனம் அமைதிபெறும் இதனை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.
மன அமைதி பயிற்சி
மன அழுத்தப் பிரச்சினையால் தினமும் அவதிப்பட்டு வரும் நபர்களுக்கு மிகச் சிறந்த வழி என்னவென்றால் யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம்.
இது போன்ற விஷயங்களை பின்பற்றுவதுதான், அந்த வகையில் மன அழுத்தத்திற்கு நீங்கள் தியானம் செய்வது எப்படி என்று முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
தியானம் செய்யும் வழிமுறைகள்
தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை ஒதுக்கி விடுங்கள் காலை 5 மணி முதல் 6 மணி வரை, மாலை 6:30 முதல் 7;30 மணிக்குள் முடிந்தவரை இந்த நேரத்தில் தியானம் செய்வது மிக சிறந்ததாக அமையும்.
இதற்காக உங்கள் வீட்டில் ஒரு சுத்தமான இடத்தை ஒதுக்கி விடுங்கள், அது மனதிற்கு அமைதி தரக்கூடிய இடமாக இருக்க வேண்டும்.
அங்கு பாய் விரித்து அதில் அமரவும் தலை, கழுத்து, மற்றும் முதுகெலும்பு, நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும் கைகளை மடி மீது இருக்கட்டும் கண்களை மூடிக் கொள்ளவும்.
நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள், எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்துகொள்ளவும், இது உங்கள் உடலையும் உள்ளத்தையும், தளர்த்தி அமைதிப்படுத்த உதவும்.
இப்பொழுது உங்களுக்கு பிடித்தமான ஒரு விஷயத்தை கற்பனை செய்து கொள்ளவும்.
இப்போது உடல் அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம்,ஆகியவற்றிற்காக பிராத்திக்கவும் 5 முதல் 10 நிமிடங்கள் தியானத்தில் அமர்ந்தால்.
மனம் அங்கும், இங்கும், ஓடினாலும், அதை ஒருநிலை படுத்துங்கள் இவ்வாறு செய்வதால் விரைவில் மனம் அமைதி பெற்று விடும்.
பூக்கள் பயன்படுத்தலாம்
ஒரு சில நேரங்களில் மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தத்தால் தலை வலி ஏற்பட்டு விடும், இதனை உடனடியாக போக்குவதற்கு மல்லிகைப்பூவை முகர்ந்து பார்த்தாள் சரியாகிவிடும்.
உங்களுக்கு பிடித்தமான பூக்கள், வாசனை திரவியங்கள், நகைச்சுவை காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், போன்றவற்றை மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் பொழுது அனுபவித்தாள் உடனடியாக நிவாரணம் பெறலாம்.
உங்களுக்கு பிடித்தமான புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இருந்தால் மன அழுத்தத்தை நீக்கி விடலாம்.
Kerpotta nivarthi meaning in tamil 2022
இன்றைய காலகட்டங்களில் மன அழுத்தத்தால் மட்டுமே 80 சதவீத நோய்கள் உருவாகிறது, என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள், நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும் வாழ்நாள் முழுவதும்.