Uncategorized

How to prevent covid-19 3rd wave

How to prevent covid-19 3rd wave

How to prevent covid-19 3rd wave

இந்த கொரோனா வைரஸை பொறுத்தவரை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் சிறப்பாக இருக்கிறோம் என்று சொல்லிவிட முடியாத சூழ்நிலையில் இருக்கிறது.

தற்போது என்னதான் கொரோனா தடுப்பூசிகள் அதிவேகமாக போட்டு வந்தாலும் வைரஸ் பிறழ்வு என்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

இதனால் தான் தற்போது போடப்படும் தடுப்பூசிகள் நிச்சயம் சிறப்பாக செயல்படுமா என்ற கேள்வி மனதில் எழுகிறது, மேலும் தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வருவதோடு  அவர்களும் இந்த நோயை வெளியில் பரப்புகிறார்கள்.

இம்மாதிரியான சூழ்நிலையில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் இந்தப் போரில் நாம் ஒவ்வொருவரும் ஒரு சில விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

இந்த விதிகளை ஒருவர் தவறாமல் பின்பற்றி வந்தால் மட்டுமே வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் தீவிரமாகமால்  தடுக்கலாம் இப்பொழுது இந்த கொரோனா வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான 3 விஷயங்களை என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்

தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்து இணையதளத்தில் பல தவறான தகவல்கள் பரவி வருகிறது இதனால் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள இதுவரை தயக்கம் செய்கிறார்கள்.

இது தவிர தற்போது உலகம் முழுவதும் போடப்படும் தடுப்பூசி இந்த வைரஸ் பிறழ்வுக்கு அவ்வளவு பயனுள்ளதாக இல்லை என்ற தகவல்களும் இருக்கிறது.

ஆனால் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த நேரத்தில் தடுப்பூசி மட்டுமே உடம்பில் நோய் அபாயத்தை குறைக்கும் மற்றும் நீண்ட கோவிட் -19 வாய்ப்புகளை குறைக்கவும் செய்கிறது.

தடுப்பூசி போட்டுக் கொள்வதால் இந்த தொற்று நோயில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருப்பது மட்டுமில்லாமல் உங்கள் குடும்பம், நண்பர்கள், உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும், பாதுகாப்பு கொடுக்கிறீர்கள்.

தடுப்பூசி போட்டுக் கொள்வதைவிட மாற்றுவழி எதுவும் இதுவரை இல்லை எனவே தடுப்பூசி போட தகுதி உள்ள அனைவரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறப்பாக அமையும்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும்

இந்த பெரும் தொற்று இன்னும் இந்த உலகத்தில் முடிவுக்கு வரவில்லை எனவே கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

நோயை கட்டுப்படுத்த 5 முக்கிய விஷயங்கள் உள்ளது அவை.

முக கவசம் அணிவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது, அடிக்கடி உடல் வெப்பநிலையை சோதனை செய்வது, கைகளை சுத்தமாகக் கழுவுவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது இவற்றை கட்டுப்படுத்துவதற்கு சரியான நடவடிக்கை இது மட்டுமே.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

மற்றொரு முக்கியமான விஷயம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவது பற்றி, மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவது என்பது எளிதான விஷயம் இல்லை.

இந்த வைரஸை தடுப்பதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை 2 வழிகளில் மட்டுமே பெற முடியும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது மற்றொன்று மக்கள் தொகையில் ஒரு பெரும் பகுதி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும்.

குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு இவர்களுக்கு தான் ஆபத்து அதிகமாகவே உள்ளது.

ஆகவே இறப்பு விகிதத்தை குறைக்க தொற்று நோய்க்கு தடுப்பூசியில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி பெறுவது,இதன் மூலம் அதிகமான மக்கள் உயிரிழப்பு ஏற்படுவது தவிர்க்க முடியும்.

Click here to view our YouTube channel

சரியான வழிமுறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த மூன்று விஷயங்களை தவிர மக்கள் சமூக இடைவெளி பின்பற்றுவது, வெளியில் சுற்றாமல் வீட்டிற்குள்ளே இருப்பது முகக்கவசம் அணிவது,உடற்பயிற்சி செய்வது, போன்ற சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்றுவது முக்கியம்.

Top 10 health benefits of eating fish

குறிப்பாக குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைக்கும் வரை வீட்டில் குழந்தைகள் இருந்தால் கவனமாகப் பாதுகாப்பது என்பது உங்கள் கையில் உள்ளது.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
1