
How to re appeal magalir urimai thogai 1000 scheme
கலைஞர் மகளிர் 1,000/- உரிமைத்தொகை உங்களுடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதா 62 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டது.
இதற்கு நீங்கள் எப்படி மேல்முறையீடு செய்வது,எங்கு செய்வது, எத்தனை நாட்களுக்குள் செய்வது,உங்களுக்கு மறுபடியும் எப்படி இதற்கு தீர்வு கிடைக்கும் என்பன பற்றி அனைத்து தகவல்களையும் இங்கு காணலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1 கோடியே 63 லட்சம் நபர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில்.
1.065 கோடி விண்ணப்பங்கள் தேர்வு செய்துள்ள தமிழ்நாடு அரசு இதில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தற்போது வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் ஏழை எளிய மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்மணிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும்.
வாழ்க்கை தரத்தை உயர்த்தி சமுதாயத்தில் சுயமரியாதையோடும் வாழ்வதற்கும் வழிவகுக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000/- உரிமைத் தொகை வழங்கிட தமிழ்நாடு அரசால் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடியை 65 லட்சம் விண்ணப்பங்கள்.
இதில் 65 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அதிகமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 20,000 மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் தற்போது அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள, தகவல்களுடன் ஒப்பிட்டு.
சரிபார்க்கப்பட்டு மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வு மூலம் சரிபார்க்கப்பட்டு திட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்த மகளிர் பயனாளிகளாக தேர்ந்தெடுத்துள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பதாரர்களின் தகுதிகளை சரிபார்க்கப்பட்டு அரசாணைகள் குறிப்பிட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும் தகுதியின்மைக்குள் உள்ளன.
விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டது விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்து குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்
இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள்.
இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல் முறையீடு செய்யலாம்,மேல்முறையீடு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.
அடுத்த கட்ட நடவடிக்கை என்ன
வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலக செயல்படுபவர் இணையதள மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள்.
அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்.
வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை தேர்வு செய்ய கள ஆய்வு செய்யத் தேவைப்படும்.
நேரங்களில் சம்பந்தப்பட்ட சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் வழியாக கள ஆய்வு தேவைப்படும் நேரங்களில் ஆய்வு அறிக்கை பெற்று விசாரணை செய்ய தொடங்குவார்.
இந்த மேல்முறையீட்டு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் மூலம் மட்டுமே செய்யப்படும் வருவாய் கோட்டாட்சியர் பயனாளிகளின்.
தகுதி மற்றும் தகுதியின்மைகள் தொடர்பாக தனி நபர்களின் மூலம் வரப்பெறும் புகார்கள் குறித்து விசாரணை அலுவலக செயல்படுவார், இணையதளம் வழியாக.
பெறப்படும் புகார்கள் மேல்முறையீட்டு மனுக்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகளை பின்பற்றி விசாரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
வாரிசுகளின் பெயரில் பட்டா மாற்றம் செய்வது எப்படி..!
இணையதளம் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி..!