
How to reapply kalaignar magalir urimai thogai thittam
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிப்பதற்கு என்ன வழி, எங்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்..!
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இன்று முதல் மறு விண்ணப்பம் செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பிக்கும் முறையும் நடைமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தனது தேர்தல் வாக்குறுதியான மாதம்தோறும் குடும்ப தலைவிகளுக்கு 1,000/- உரிமைத் தொகை வழங்கும் என அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு இரண்டு ஆண்டுகள் ஆகியும் செயல்படாமல் வெறும் அறிவிப்பாக இருப்பதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தது.
பெண்களுக்கு இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என காத்திருந்தார்கள்.
மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி செயல்படுத்துவதாக ஸ்டாலின் அறிவித்தார்.
ஆனால் எல்லா பெண்களுக்கும் இந்த உரிமை தொகை வழங்கப்படவில்லை இதற்காக சில விதிகள் வகுக்கப்பட்டது அதாவது உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் வருமான வரி செலுத்தக்கூடாது.
ஆண்டுக்கு வருமானம் 2.5 லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது அதேபோல் ஒரு ஆண்டுக்கு 3,600 யூனிட்கள் மின் கட்டணம் செலுத்தக்கூடாது.
கார்,வேன்,டிராக்டர்,உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருக்கக் கூடாது குறிப்பாக அரசு வேலையில் இருக்கக் கூடாது வருமான வரி தாக்கல் செய்யும் நபராக இருக்கக்கூடாது.
இதற்காக வீடு தோறும் ரேஷன் கடை ஊழியர்கள் கலைஞர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை கொடுத்திருந்தனர் அதன்படி ஒரு கோடியை 63 லட்சம் நபர்கள் விண்ணப்பம் செய்தார்கள்.
அவர்களில் ஒரு கோடியே 6 லட்சம் பேர் தகுதியானவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டது இந்த நிலையில் இந்த திட்டத்தை அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15ஆம் தேதி அவருடைய பிறந்த.
மாவட்டமான காஞ்சிபுரத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் இந்த திட்டத்திற்கு ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டது முதல்வருடன் அந்த வங்கிகளின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.
இந்த தொகை இனி மாதம் வரவுவைக்கப்படும் இந்த நிலையில் இந்த திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் மறு விண்ணப்பம் செய்யலாம் என அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி இ-சேவை மூலம் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிராகரிக்கப்பட்ட 50 லட்சத்துக்கு மேலான நபர்கள் வரும் 18ம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் எனவும்.
நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் அறிந்து கொள்ள முடியாதவர்கள் கோட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்