
How to reduce belly fat quickly in tamil
இடுப்பை சுற்றி கொழுப்பு அதிகமாக இருக்கிறதா அதை வேகமாக குறைக்க இந்த விஷயத்தை செய்யுங்கள் போதும்..!
உடல் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் மிகப்பெரிய வில்லனாக எப்போதும் இருப்பது இடுப்பை சுற்றி இருக்கும் தேவையற்ற ஊளைச் சதைகள் தான்.
குறிப்பாக இடுப்பை சுற்றி மட்டும் தேங்கு கொழுப்பு மிக அதிகம் ஆபத்தானதாக கூட மாறிவிடும் சில நேரங்களில் இந்த கொழுப்பு உருவாகுவதற்கு நம் உடலின் உள்ளுறுப்புகளில் கொழுப்பு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
தொப்பை குறைக்க பல்வேறு முயற்சிகள் செய்கிறோம் இதையெல்லாம் விட்டுவிட்டு எதனால் தொப்பை ஏற்படுகிறது சரியான வழியில் பக்கவிளைவுகள் எதுவும் இன்றி.
எப்படி இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பை குறைக்க வேண்டும் என்று சிந்தித்து செயல்பட்டால் போதும் எளிமையாக உடலில் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து விடலாம்.
அதற்கு என்ன வழி என்று இந்த கட்டுரையில் முழுமையாகப் பார்க்கப்போகிறோம்.
தொப்பை பிரச்சினை பெரும் பிரச்சினையாக இன்றைக்கு இருக்கும் மக்களிடத்தில் தலைவழியாக, தீராத பிரச்சினையாக இருக்கிறது, கடினமாக முயற்சி செய்து கொஞ்சம் லேசாக தொப்பை குறைந்தாலும் மனசு அவ்வளவு சந்தோஷபடுகிறது.
அதுவும் தொப்பை வராமல் ஆரோக்கியமான முறையில் வைத்துக் கொள்வது என்பது மிக மிகக் கடினம் அப்படி சில வழிமுறைகளை தான் இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்க போகிறோம்.
ஆபத்து ஏற்படுமா
எல்லா வகையான தோலுக்கு அடியிலும் தேங்கும் கொழுப்புகள் உள் உறுப்புகளுமே ஆபத்தானவை என்று தெளிவாக சொல்லிவிட முடியாது.
குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது மிக மிக அவசியம் உதாரணத்திற்கு, உடலில் உள்ள கொழுப்பின் அளவில் 10 சதவீதம் அளவு வரை தோலின் உட்புறத்தில் கொழுப்பு திசுக்கள் இருக்கும்.
இந்தக் கொழுப்பு வகைகள் ஒரு வகையில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்புகள் அதைவிட அதிகமாக உடலில் கொழுப்புகள் சேரும் போது.
நோய் ஏற்பட அது முக்கியமானதாக அமைந்து விடுகிறது,இதை ஆரோக்கியமான வழியில் வேகமாக எப்படி குறைப்பது என்பது மிக முக்கியமான ஒரு செயல்.
உள்ளுறுப்பு கொழுப்பு என்றால் என்ன
இந்த உள்புறமாக இருக்கும் கொழுப்பு என்பது வழக்கமாக தொப்பையாக அடி வயிற்றின் அடி பகுதியில் தேங்கும் கொழுப்பை போன்றது அல்ல இது சற்று கடினமான கொழுப்பு வகையாக இருக்கும்.
இது மனித தோலின் அடிப்படையில் லேயராக தொடங்குகின்ற கொழுப்பு அதாவது மனிதனுடைய வயிற்று தசைக்கும் உடலின் உள்ளுறுப்புகளுக்கு இடையில்.
ஒரு மெத்தை போல தோலுக்கு அடியில் இந்த கொழுப்புகள் படிந்து இருக்கும், நாளடைவில் இதுவும் ஒரு உடல் உறுப்பு போலவே பெரிதாக வளர்ந்து விடும்.
எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்
நன்றாக தூங்கினால் கொழுப்பு குறைந்து விடுமா இது ஒரு சராசரியான சந்தேகம் பல நபர்களுக்கு இதைக் கேட்கவே நன்றாக இருக்கிறது.
அப்படி என்றால் எந்த சிரமமுமின்றி தூங்கி கொழுப்பை குறைத்து விடலாம் என்று நீங்கள் கேட்கலாம் இப்படித்தான் நிறைய தவறு செய்கிறோம்.
தூக்கம் எப்படி கொழுப்பை குறைக்க உதவும் என்பதை முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதனுடைய உடலின் செயல்பாடுகள் சீராகவும் எப்பொழுதும் இருக்க, ஹார்மோன் சுரப்பிகள் சரியாக செயல்படவும் தூக்கம் மிக முக்கியமான ஒரு செயல்.
நன்றாக தூங்கும் போது உடலின் மெட்டபாலிசம் சீராக இருக்கும் உடலின் ஹார்மோன் செயல்பாடுகளும் சரியாக நடக்கும்.
முறையான தூக்கம் இல்லாமல் போனால் எப்பொழுதும் மன அழுத்தம் அதிகமாகும், இதனால் ஹார்மோன் சுரக்கும் வீதம் அதிகமாகும், அதிகமாக பசியைத் தூண்டி விடும்.
பல்வேறு செயல்களால் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாகவும் முறையற்ற பசியாலும் அதிகமான உணவுகள் சாப்பிட தூண்டும் இதனால் உடலுக்கு தேவையில்லாத.
உணவுகள் சாப்பிடும் போது பல்வேறுவகையான தேவையற்ற கொழுப்புகள் உருவாகிவிடுகிறது, அதனால் ஒரு நாளைக்கு குறைந்தது 6 மணி முதல் 8 மணி நேரம் தூங்கினால் நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
உணவுகளின் வகைகள்
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எப்பொழுதும் எடுத்துக்கொள்வது உடலின் உள்ள அதிகப்படியான கொழுப்பை நிச்சயம் குறைக்கும் உணவு கட்டுப்பாட்டில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் அதிகமாக இருந்தால்.
நீங்கள் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் உங்களுக்கு தோன்றும், என்ன மாதிரியான உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது இங்கு முக்கியம்.
பீன்ஸ் வகைகள்
அவகோடா
முழு தானியங்கள்
கோழி இறைச்சி
மீன் இறைச்சி
பழங்கள்
சிவப்பு இறைச்சி
ஆகிய உணவுகளில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.
உடற்பயிற்சி கட்டாயம் தேவை
உடற்பயிற்சி செய்வதை உங்களுடைய வேலையில் ஒன்றாக எப்பொழுது வைத்துக்கொள்வது மிக அவசியம், முறையான மற்றும் தொடர்ச்சியான உடற்பயிற்சி மூலம் மட்டுமே.
உடலில் தேவையற்ற கொழுப்புகளை குறைக்க முடியும் இதை எப்போதும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
வாரத்தில் 6 நாட்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் குறைந்தது 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக்கி கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி செய்வதை மகிழ்ச்சியுடன் செய்ய பழகி கொண்டால் அதன் மீது ஒரு ஈர்ப்பு விசை உங்களுக்கும் உண்டாகிவிடும்.
மூக்கின் வழியே செலுத்தினால் போதும்
இந்த வழக்கமான உடற்பயிற்சிகளைக் தாண்டி நீண்ட நேரம் யோகா, நடைப்பயிற்சி, விளையாட்டு, நீச்சல், ஸ்கிப்பிங், போன்றவற்றை செய்யலாம் இதுபோன்ற செயல்பாடுகள் வேகமாக உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும்.
How to make special chicken biryani in tamil
முக்கியமாக தவிர்க்க வேண்டியவை
எவ்வளவுதான் உடற்பயிற்சி சரியான தூக்கம் இருந்தாலும் உணவு கட்டுப்பாடு என்பது மிக மிக முக்கியம் அதிகமாக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லதாக அமையும்.
தேவையற்ற பேக்கரி உணவுகள், கார உணவுகள், பலகாரங்கள், எண்ணெயில் வறுத்த உணவுகளை ,அதிகமாக சாப்பிட்டால் கொழுப்பு அதிகமாகும்.