
How to remove toxins from the lungs in tamil
நுரையீரலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும் சில அற்புத மூலிகைகள்..!
சமீபத்திய ஆண்டுகளில், இயற்கை வைத்தியம் மற்றும் “நச்சு நீக்கம்” உணவுகள் உங்கள் உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதற்கான விரைவான மற்றும் நவநாகரீகமான வழியாக பிரபலமடைந்துள்ளன.
புகைபிடித்தல் நுரையீரலுக்கு இரண்டு வகையான நீண்டகால சேதத்தை ஏற்படுத்துகிறது.
எம்பிஸிமா மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி,இவை அனைத்தும் சேர்ந்து, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி) என்று அழைக்கப்படுகின்றன.
எம்பிஸிமாவில், ஆக்ஸிஜனை பரிமாறும் சிறிய காற்றுப் பைகள் அழிக்கப்படுகின்றன.
நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சியில், காற்றுப் பைகளுக்கு வழிவகுக்கும் காற்றுப்பாதைகளின் வீக்கம் உள்ளது,காற்றுப் பைகள் அழிக்கப்பட்டவுடன், அவற்றை மாற்ற முடியாது.
சிகரெட் புகைப்பதால் ஏற்பட்ட பல வருட சேதத்தை உங்களால் முழுமையாக செயல்தவிர்க்க முடியாது,என்றாலும்,நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம் உங்கள், நுரையீரலை மேலும் சேதமடையாமல் பாதுகாப்பதே.
காய்ச்சல் மற்றும் நிமோனியா தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதன் மூலமும், அடிக்கடி உங்கள் கைகளை கழுவுவதன் மூலமும், மூக்கடைப்பு அல்லது பிற நோய் உள்ளவர்களுடன்.
தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பதன் மூலமும் உங்கள் நுரையீரலை மேலும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும்.
நுரையீரலில் இருக்கும் சளி வெளியேறுவதற்கு நீங்கள் இந்த மருத்துவ முறைகளை பயன்படுத்தலாம்.
நுரையீரலை பலப்படுத்தும் உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் நுரையீரல் உங்களுடைய உயிரை ஒவ்வொரு நிமிடமும் காப்பாற்றுகிறது.
நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற நீங்கள் பாட்டி வைத்தியத்தையும் பின்பற்றலாம்.
நுரையீரல் பலம் பெற மூலிகை உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது பற்றி எப்பொழுதும் கவனமுடன் இருங்கள்.
துளசி
இந்தியாவைப் பொறுத்தவரை துளசி என்பது ஒரு மூலிகை இது அற்புதமானது துளசையில் ஆண்டி ஆக்சிடென்ட்கள், துத்தநாகம், வைட்டமின் சி, போன்ற நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
துளசியில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் நிறைய அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளது.
இது சுவாசம் மண்டலத்தை பலப்படுத்தவும் மூச்சு குழாய் அலர்ஜி, ஆஸ்துமா காய்ச்சல், இருமல் மற்றும் சளித்தொலைகளை நீக்க உதவுகிறது.
துளசி இலைச்சாற்றை தேனுடன் கலந்து சாப்பிட்டு வரலாம் இதனால் நுரையீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது சுவாச பிரச்சனைகளை தீர்க்கிறது.
அதிமதுரம் வேர்
அதிமதுரம் வேர் தொண்டை ஆஸ்துமா மூச்சுக் குழாய் அலர்ஜி நிமோனியா மற்றும் பல நாள்பட்ட நோய்களிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
சுருங்கி இருக்கும் மூச்சுக் குழாய் தசைகளை விரிவடைய செய்யும் செய்கை இதில் உள்ள வேதிப்பொருளுக்கு இருக்கிறது என சித்த மருத்துவ தெரிவிக்கிறது.
இதில் உள்ள கிளைசரைசின், டானின்கள்,ஆகியவை நுரையீரல் திறனை அதிகரிக்க உதவும் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவும்.
சுக்கு
உலர் இஞ்சி அல்லது சுக்கு ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது முக்கியமாக, இது தொண்டை தொற்றுக்கு பயனளிக்கும்.
நுரையீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் திறன் கொண்டது, இஞ்சி வேரில் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு போன்ற பண்புகள் காணப்படுகிறது, இது சளி இருமல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
மஞ்சள்
சமையலறையில் இருக்கும் மஞ்சள் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது, ஏனெனில் இதில் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஆன்ட்டி செப்டிக் பண்புகள் உள்ளன.
மறுபுறம் மஞ்சள் ஆன்ட்டி வைரல் ஆகும், இது நமது நுரையீரலை தொற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது.
சருமத்தை இயற்கையாக பளபளப்பாக மாற்றுவது How to get glow skin tips in tamil
எனவே உங்கள் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் விரும்பினால் மஞ்சள் பால் தினமும் குடிக்க தொடங்குங்கள், அதை தொடர்ந்து உட்கொள்ளுவதன் மூலம் நுரையீரல் வலுவடைகிறது.
தேன்
உலகில் கெட்டுப்போகாத பொருள் என்றால் அது தேன், நீங்கள் சுத்தமான தேனை தினமும் அதிக அளவில் உட்கொண்டு வந்தால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் குணமாகிவிடும்.
உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும், எனவே முடிந்தவரை தேனை எடுத்துக் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.