
How to renew your old Passport in online 2023
காலாவதியான பாஸ்போர்ட்டை அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து புதுப்பிப்பது எப்படி..!
நீங்கள் வெளிநாடு செல்ல விரும்பினால் கட்டாயம் பாஸ்போர்ட் அவசியம் என்பது அனைவரும் அறிந்தது,வெளிநாட்டு பயணம் மட்டுமின்றி வேலை தொடர்பான பல விஷயங்களுக்கு.
உங்களுக்கு அடையாளம் ஆவணமாக பாஸ்போர்ட் பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனவே ஒவ்வொருவரின் அத்தியாவசிய தேவையான பாஸ்போர்ட் பெற்றுக்கொள்வதும் அது காலாவதியானதும் புதுப்பித்து கொள்வதும் அவசியமானதாகும்.
காலாவதியான பாஸ்போர்ட்டை எப்படி புதுப்பிப்பது
பாஸ்போர்ட் என்றதும் மற்ற ஆவணங்களைப் போல் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட காலம் செல்லுபடி ஆகும்,எனவே பாஸ்போர்ட் காலாவதி தேதிக்கு முன்னதாக புதுப்பிக்கப்பட வேண்டும்.
உங்கள் பாஸ்போர்ட்டை பாஸ்போர்ட் அலுவலகம் செல்லாமல் இணையதளம் மூலம் புதுப்பிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.
இணையதளம் மூலம் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது எப்படி
முதலில் https://www.passportindia.gov.in/என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவா இணையதளத்தில் சென்று முதலில் புதுப்பித்தலுக்கு நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.
ஏற்கனவே இந்த இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்திருந்தால் நேரடியாக பயனர் உள் நுழைக்க என்ற உங்களுடைய பழைய கணக்கு மூலம் உள் நுழையலாம்.
நீங்கள் ஏற்கனவே புதிய கணக்கு தொடங்காவிட்டால் புதிய கணக்கு தொடங்குவதற்கு சென்று பதிவு செய்து உங்களுடைய கணக்கை நீங்கள் உருவாக்க வேண்டும்.
இதன்பிறகு உங்கள் முகவரின் அடிப்படையில் அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
பிறந்த தேதி, பெயர் போன்ற அடிப்படை விவரங்களை நீங்கள் முழுவதும் பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் புதிய கடவுச்சொற்கள் (Create New Password) ஆகியவற்றை நீங்கள் உருவாக்க வேண்டும்.
இதன் பிறகு உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு இணைப்பு அனுப்பப்படும் அந்த இணைப்பை பயன்படுத்தி கணக்கை நீங்கள் செயல்படுத்த தொடங்கலாம்.
நீங்கள் பாஸ்போர்ட் கணக்கில் உள் நுழைந்ததும் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பிக்கவும் அல்லது பாஸ்போர்ட் புதுப்பித்தல் என்ற பகுதிக்கு செல்ல வேண்டும்.
பாஸ்போர்ட் புதுப்பிக்க தேவையான ஆவணங்கள் என்ன?
பாஸ்போர்ட் புதுப்பிக்க நீங்கள் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பப் படிவத்துடன் கூடுதலாக ஒரு சில ஆவணங்களையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த ஆவணங்களை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.
உங்களுடைய பழைய பாஸ்போர்ட்
பாஸ்போர்ட்டின் முதல் இரண்டு மற்றும் கடைசி இரண்டு பக்கங்களின் நகல் இணைக்க வேண்டும்
வெளிநாடுகளுக்கு சென்ற காசோலை தேவை (ECR/ECR) அல்லது பக்கத்தின் சுய சான்று அளிக்கப்பட்ட நகல்.
பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி?
நீங்கள் கணக்கை உருவாக்கிய பிறகு நீங்கள் இணையதள படிவத்தை முழுவதும் நிரப்ப வேண்டும்.
புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும் கடவுச்சீட்டை மீண்டும் வழங்கவும் என்ற இணைப்பை கிளிக் செய்து படிவத்தை முழுவதும் நிரப்ப வேண்டும்.
படிவம் முறையாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் படிவத்தின் நகலை சேமிக்க சரி பார் என்ற தேர்வை நீங்கள் கட்டாயம் கிளிக் செய்ய வேண்டும்.
நீங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஒரு முறைக்கு இருமுறை நன்றாக சரிபார்த்த பின் பதிவேற்றி சமர்ப்பி என்ற கிளிக் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
உங்கள் வசதிக்கு ஏற்ப உங்கள் ஸ்லாட்டை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதளத்திலும் அல்லது நேரடியாகவும் புதுப்பித்தலுக்கு உரிய கட்டணத்தை கட்டாயம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்தின் ரசிதை நீங்கள் கட்டாயம் நகல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
tn rs 1000 scheme how to get form in tamil
How Check PAN card Misuse in tamil 2023