செய்திகள்

நீங்கள் இந்தப் பான் கார்டு மோசடி மற்றும் திருட்டியில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வது..!How to secure your pan card in tamil 2023

How to secure your pan card in tamil 2023

How to secure your pan card in tamil 2023

இந்தியாவில் பிரபலமான தொழிலதிபர்கள் முதல் மாத சம்பளம் வாங்கும் நபர்கள் வரை என அனைவருக்கும் தேவைப்படும் மிக முக்கியமான ஆவணமாக கருதுவது பான் கார்டு.

இந்தியாவில் நிதி பரிவர்த்தனை செய்ய வேண்டும் அல்லது வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் இந்த பான் கார்டு அனைவருக்கும் தேவை.

ஆனால் சமீபத்தில் சைபர் குற்றவாளிகள் சிலர் பிரபலமான விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்களை, குறி வைத்து இந்த பான் கார்டு மோசடிகளில் ஈடுபடுகிறார்கள்.

நீங்கள் இந்தப் பான் கார்டு மோசடி மற்றும் திருட்டியில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பான் கார்டு மோசடிகள் என்றால் என்ன?

கடந்த சில மாதங்களாகவே பான் கார்டு மோசடி வழக்குகள் பற்றி செய்திகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளிவருகிறது.

பல நபர்கள் பான் கார்டு மோசடிகளால் நிதி இழப்பு திருட்டுப் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.

திருடப்படும் பான் கார்டு விவரங்களை என்ன செய்கிறார்கள்?

நீங்கள் பான் கார்டு வெளியில் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் முக்கியமாக ஜெராக்ஸ் எடுப்பதற்கு நீங்கள் அதிக அளவில் உங்களுடைய பான் கார்டு பயன்படுத்துவீர்கள்.

நீங்கள் உங்கள் பான் கார்டு விவரங்களை மூன்றாம் நபரிடம் தெரிவித்தால் அல்லது பான் கார்டு தவறுதலாக தொலைத்து விட்டால் அது மோசடி கும்பல் கைகளில் சிக்கிக் கொள்ளும்.

உங்கள் விவரங்களை வைத்து அவர்கள் பணத்தை திருடவும் வாய்ப்புகள் உள்ளது, குறிப்பாக நீங்கள் பான் கார்டுகளை மிக முக்கியமாக பாதுகாக்க வேண்டும்.

பிரபலமான நபர்களின் பான் கார்டு திருட்டு

பிரபலமான அரசியல்வாதிகள், நடிகைகள், தொழிலதிபர்களின், பான் கார்டு விவரங்களை திருடிய சைபர் குற்றவாளிகள் அதன் மூலம் பண மோசடிகளில் ஈடுபடுகிறார்கள்.

மோசடி செய்த நபர்கள் google மூலம் பிரபலங்களின் GSTIN எண்ணை கண்டறிந்துள்ளனர் அந்த எண்ணில் முதல் இரண்டு இலக்க மாநிலக் குறியீடு என்றும்.

அடுத்த பத்து இலக்க PAN எண் எனவும் அவர்கள் தெரிந்துள்ளனர் மேலும் பிரபலங்களின் பிறந்த தேதி இணையதளத்தில் எடுத்துள்ளார்கள்.

இதன் மூலம் அவர்கள் தங்கள் அடையாளங்களையும் பிரபலங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கிரெடிட் கார்டுகளை பெற்று மோசடிகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பான் கார்டு பயன்பாடுகள் என்றால் என்ன?

நீங்கள் பான் கார்டை தொலைத்து விட்டால் அல்லது உங்கள் விவரங்கள் மோசடி செய்யும் கும்பலிடம் கிடைத்துவிட்டால் அவர்கள் உங்கள் பால்கார்டை பயன்படுத்தி.

வங்கிகளில் கடன் பெற முடியும் ஆனால் அதற்கான முழு பொறுப்பையும் நீங்கள் தான் ஏற்க வேண்டும்.

பான் கார்டு மூலம் சட்டவிரோதமான பண பரிவர்த்தனைகள் நடைபெறும் வாய்ப்புகள் இருக்கிறது.

தங்க நகைகள் வாங்கவும், சொகுசு விடுதிகளில் அறை எடுத்து தங்குவதற்கும், போன்ற மோசடிகளுக்கு எளிமையாக உங்களுடைய பான் கார்டு பயன்படுத்தலாம்.

உங்களுடைய பான் கார்டை எப்படி பாதுகாப்பது

முதலில் உங்கள் தொலைபேசி எண்ணில் பான் கார்டு புகைப்படத்தை வைத்திருப்பதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்,அதை (PDF FOLDER) முறையில் ஏதேனும் பாதுகாப்பாக வைப்பது சிறந்ததாக இருக்கும் அனைவருக்கும்.

நீங்கள் அனைத்து இடங்களிலும் பான் கார்டை பயன்படுத்துவதை தவிர்க்கலாம் பான் கார்டுக்கு பதிலாக உங்கள் ஓட்டுனர் உரிமம், அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை பயன்படுத்தலாம்.

உங்களுடைய பான் கார்டு நகல்களை ஏதேனும் ஒரு அரசாங்க அலுவலகங்களில் சமர்ப்பிக்கும் போது அதில் அன்றைய தேதி மற்றும் வருடம் விவரங்களுடன் கையொப்பம் இடுவது மிக அவசியம்.

உங்களுடைய கிரெடிட் கார்டு ஸ்கோர் அல்லது CIBIL SCORE களை சரி பார்ப்பதன் மூலம் உங்கள் பான் கார்டு ஏதேனும் மோசடி நடந்துள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம் அடிக்கடி உங்களுடைய CIBIL SCORE களை சரி பாருங்கள்.

பான் கார்டு மோசடி குறித்து புகார் அளிப்பது எப்படி

உங்களுடைய பான் கார்டில் ஏதேனும் மோசடி நடைபெற்றிருந்தால் நேரடியாக உங்களுடைய மாவட்ட வருமான வரி அலுவலகத்திற்கு சென்று நீங்கள் புகார் அளிக்கலாம்.

உங்கள் பான் கார்டு அவர்களிடம் நீங்கள் கொடுத்தால் அவர் சோதனை செய்து அதில் ஏதேனும் மோசடி நடைபெற்றிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள்.

இணையதளத்திலும் இது குறித்து நீங்கள் புகார் அளிக்கலாம்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

Morning drinks to lower bad cholesterol

How to change Passport photo in tamil

How to renew your old Passport in online 2023

tn rs 1000 scheme how to get form in tamil

How Check PAN card Misuse in tamil 2023

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0