
How to start gas agency dealership business in tamil
உங்களது ஊரில் கேஸ் ஏஜென்சி தொடங்குவது எப்படி எவ்வளவு வருமானம் கிடைக்கும்..!
எப்பொழுதும் நஷ்டமே நடைபெறாத தொழில் என்றால் அது எரிவாயு சம்பந்தமான தொழில்கள் என்று சொல்லலாம் ஏனென்றால் இதனுடைய தேவை தினம்தோறும் அதிகரிக்கிறது.
மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, இதன் மீது அதிகப்படியான மறைமுக வரி, நேரடி வரி, என விதித்து அதிக பணம் சம்பாதிக்கிறது அதுமட்டுமில்லாமல் இந்த கேஸ் ஏஜென்சிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.
இந்த கேஸ் ஏஜென்சி தொழில் தொடங்குவதற்கு என்ன செய்ய வேண்டும், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், எங்கு செய்யவேண்டும்.
எப்படி செய்யவேண்டும், போன்ற அனைத்து வகையான தகவல்களையும் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
LPG,Gas,சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள்
இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனங்களாக இந்தியன் ஆயில் இன்டென், பாரத் பெட்ரோலியம் பாரத் கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எச்பி கேஸ், நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஏஜென்டுகள் உதவியுடன் சமையல் எரிவாயு சிலிண்டர்களை மக்களுக்கு விநியோகம் செய்கின்றன.
இந்த கேஸ் ஏஜென்சி தொழில் தொடங்க பல்வேறு விதிகள் உள்ளன, அதனை நீங்கள் சரியாக பின்பற்றினால் போதும், இந்த நிறுவனங்கள் உங்களுக்கு உரிமம் கொடுத்துவிடும்.
விண்ணப்பிக்கும் முறை எப்படி
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கேஸ் ஏஜென்ட் தொடங்க விருப்பம் உள்ள நபர்கள்.
இணையதளம் அல்லது நேரடியாக விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்த பிறகு சம்பந்தப்பட்ட நபர் தேர்வு செய்யப்பட்டால் அவர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்.
கேஸ் ஏஜென்சி உரிமையாளர் அதற்கான அளவுகளின்படி தேர்வு செய்யப்படுவார்.
ஒருவர் நேர்காணலுக்கு பின் அவரது பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பட்டியல் இணையதளத்தில் வெளியாகும்.
அதன்பின்னரே ஆவணங்களை சரி பார்ப்பதற்கான பணிகளும் தொடங்கும்.
நிறுவனங்கள் நேரடியாகவே ஆய்வுசெய்யும்
உங்களுடைய விண்ணப்பங்களை ஆய்வு செய்த பிறகு நிறுவனத்திலிருந்து மேலதிகாரிகள் உங்களுடைய அலுவலகம் அமைய உள்ள இடம்.
சேமிப்புக் கிடங்கு போன்ற இடங்களில் ஆய்வு செய்வார்கள் நீங்கள் குடோன் சொந்தமாக கட்ட வேண்டும்.
அப்படி இல்லை என்றால் 15 ஆண்டுகள் குத்தகைக்கு குடோன் அமைக்க உள்ள இடத்தை நீங்கள் பெற வேண்டும்.
எப்படி முன்னுரிமை வழங்கப்படுகிறது
50 சதவீத விண்ணப்பதாரர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் உரிமம் வழங்கப்படுகிறது.
எஸ்சி, எஸ்டி, இட ஒதுக்கீடும் உண்டு, சட்ட விதிகளின்படி சுதந்திர போராட்ட வீரர்கள்.
முன்னாள் ராணுவ வீரர்கள், ஆயுதப் படை வீரர்கள், காவல் துறையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், தேசிய விளையாட்டு வீரர்கள், சமூக மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு உள்ளது.
இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி
எல்பிஜி ஏஜென்ட் தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் செய்தித்தாள்களில் அவ்வப்போது அறிவிக்கப்படுகிறது இதுதொடர்பான தகவல்கள் https://www.lpgvitarakchayan.in/ என்ற இணையதளத்திலும் கிடைக்கும்.
எவ்வளவு வருமானம் கிடைக்கும்
கேஸ் ஏஜென்ட்கள் 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரை விற்பனை செய்தால் குறைந்தபட்சம் 61 ரூபாய் 84 காசுகள் கமிஷனாக கிடைக்கும் 5 கிலோ சிலிண்டர் என்றால் 30 ரூபாய் 9 பைசா கமிஷனாக கிடைக்கும்.
பல் வலி, பல் சொத்தை, பல் கூச்சம், வராமல் தடுக்க சிறந்த வழிகள்..!
எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்
நகரம், புறநகர், பகுதிகளில் கேஸ் ஏஜென்சி தொடங்க குறைந்தபட்சம் 35 லட்சம் முதல் 45 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
Heart attack symptoms jaw pain in tamil
இதுவே கிராமப்புற பகுதி என்றால் 20 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தால் போதும்.