
How to sweet potato cultivation in tamil
இயற்கை விவசாயம் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்வது எப்படி..!
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கிழங்கு வகைகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு எப்பொழுதும் தனி சிறந்ததாக விளங்குகிறது, சர்க்கரைவள்ளிக்கிழங்கு உடலின் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கவும் மிகவும் பயன்படுகிறது.
மேலும் சர்க்கரை வள்ளி கிழங்கில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
சரி இப்பொழுது இயற்கை விவசாயம் பகுதியில் சர்க்கரைவள்ளி கிழங்கு சாகுபடி குறித்து முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு இது ஒரு கொடி வகை சார்ந்த செடியாகும் அதுமட்டுமில்லாமல் இது மண்ணுக்குள் இருப்பதால் இது வேர் வகை காய்கறியை சார்ந்தது.
ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த கிழங்குகளில் முதன்மையாக எப்பொழுதும் தனி சிறந்ததாக இருக்கிறது சர்க்கரைவள்ளிக்கிழங்கு.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு ரகங்கள்
சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி பொறுத்தவரை கோ 1,கோ 2,கோ 3 மற்றும் கோ -சிஐபி 1,ஐஜி எஸ் பி -14,வி 6,வி 8,வி 12, மற்றும் தமிழ்நாட்டில் சில ரகங்கள் எஸ்பி உள்ளூர்,முசிறி தண்டால்,எஸ்பி 4,எஸ்பி 13,எஸ்பி 18 ஆகிய பல்வேறு ரகங்கள் உள்ளன.
பருவகாலங்கள்
சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி பொருத்தவரை நீர்ப்பாசன வசதிகள் உள்ள இடங்களில் ஜூன், ஜூலை, மாதங்களில் மற்ற இடங்களில் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்கள் வரை சர்க்கரைவள்ளி கிழங்கு சாகுபடி செய்ய சிறந்த காலமாக இருக்கிறது.
விதை அளவு
சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி பொருத்தவரை ஒரு எக்டருக்கு 80,000/- தண்டுகள் நடவு செய்ய தேவைப்படும்.
நில மேலாண்மை
சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாகுபடிக்கு ஏற்ற நிலத்தை தேர்வு செய்த பின்பு இரண்டு அல்லது மூன்று முறை உழுது பயன்படுத்திய பிறகு ஒரு எக்டருக்கு 25 டன் என்ற அளவில் தொழு உரம் இட்டு 60 சென்டிமீட்டர் அளவில் பார்கள் அமைக்கவேண்டும்.
சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி செய்ய தேவையான நிலம்
சாகுபடி பொருத்தவரை நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த செம்மண், கரிசல் மண், நிலங்களில் நன்கு வளரும் தன்மை கொண்டது.
களிமண் பூமி ஏற்றதல்ல மண்ணின் கார அமிலத்தன்மை 5.6 % முதல் 6.7 % வரை கட்டாயம் இருக்க வேண்டும்.
விதைத்தல்
சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி பொருத்தவரை இந்தியாவில் நுனி கொடிகள் மூலம் இது பயிரிடப்படுகிறது, நடவு செய்ய துணி கொடிகளை தேர்ந்தெடுத்து அதை 20 சென்டி மீட்டர் நீளத்திற்கு துண்டுகளாக்கி நடவு செய்ய வேண்டும்.
கொடியின் மத்தியில் உள்ள பக்க கிளைகளை உபயோகிக்கலாம் நடுவதற்கு முன்னர் தண்ணீர் கட்டி நுனிக்கொடி துண்டுகளை 20 சென்டி மீட்டர் நீளத்திற்கு தயார்செய்து பாரின் பக்கவாட்டில் 15 முதல் 30 சென்டி மீட்டர் இடைவெளியில் வரிசையாக நடவு செய்ய வேண்டும்.
மத்தியில் உள்ள கொடி துண்டுகளை பயன்படுத்தலாம், நுனி அடி இரண்டும் வெளியே இருக்கும்படி மத்தியில் மட்டும் மண்ணில் புதைத்து நடவேண்டும்.
நீர் மேலாண்மை
நடவு செய்த பின்பு மூன்று நாள் நீர்ப்பாசனம் தொடர்ந்து இடவேண்டும், பிறகு மண்ணின் ஈரப்பதத்திற்கு ஏற்ப நீர் பாசனத்தை மாற்றியமைக்க வேண்டும்.
வளர்ச்சி ஊக்கிகள்
சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி பொருத்தவரை கிழங்கு நல்ல முறையில் வளர்ச்சி அடைய நடவு செய்த 15 நாட்கள் கழித்து எத்ரல் என்ற பயிர் ஊக்கியை 15 நாட்கள் இடைவெளியில் 5 முறை தெளிக்கலாம்.
உரங்கள்
நடுவதற்கு முன் ஒரு எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல் சத்து, அடியுரமாக இட்டால் நல்லதாக அமையும்.
பின்பு 15 நாட்கள் கழித்து திரும்பவும் அதே தழை, மண், சாம்பல் சத்துக்களை, இட்டு மண் அணைக்க வேண்டும்.
எக்டருக்கு 20 கிலோ அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் உரத்தை அளித்தால் பரிந்துரைக்கப்படும் தழைச்சத்தில் மூன்றில் இரண்டு பங்கை குறைத்திட வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவது கட்டாயம் களை எடுக்கவேண்டும் நடவு செய்த 60 நாட்கள் கழித்து செடிகளை அடிக்கடி தூக்கி புரட்டி போட்டு நல்ல வேர்கிழங்குகள் உண்டாகும்படி கட்டாய வேலை செய்ய வேண்டும்.
அழுகல் நோய்
சாகுபடி பொருத்தவரை அழுகல் நோய் அதிகமாக இருக்கும், இந்த அழுகல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு கிராம் கார்பன்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.
அறுவடை
சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி பொருத்தவரை அறுவடைக்கு தயாராக உள்ள கொடிகளில் அடிப்பக்கம் பழுப்பு நிறமாக மாறும் கொடிகளின் அடிப்பக்கத்தில் நீளத்தில் விரிசல் ஏற்பட்டுவிடும்.
சில கொடிகளை அகற்றி கிழங்குகள் நன்கு முற்றி விட்டனவா என்று பார்த்த பின் அறுவடை செய்ய வேண்டும் கிழங்கை வெட்டி பார்த்தால் பால் போன்ற திரவம் வரும்.
காளானின் அற்புத மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…!
அது விரைவில் முதிர்ச்சி அடைவதற்கான அறிகுறியாகும் அறுவடைக்கு மூன்று நாட்களுக்கு முன் தண்ணீர் பாய்ச்சினால் கிழங்குகளை சேதப்படுத்தாமல் எளிதாக அறுவடை செய்ய முடியும்.
top 9 health benefits list in vasambu
மகசூல்
சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி பொருத்தவரை ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 20 முதல் 30 டன் வரை கிழங்குகள் மகசூலாக கிடைக்கும் நல்ல முறையில் விளைச்சல் இருந்தால்.