பொது அறிவு

வாக்காளர் அடையாள அட்டையில் பிழைகளை திருத்தம் செய்வது எப்படி How to Voter Id Edit in Tamil

How to Voter Id Edit in Tamil

How to Voter Id Edit in Tamil

வாக்காளர் அடையாள அட்டையில் பிழைகளை திருத்தம் செய்வது எப்படி..!

நம் நாட்டில் இந்திய குடிமகன் என்பதற்கு முக்கியமான ஒரு சான்றாக இருப்பது வாக்காளர் அடையாள அட்டை தேர்தல் திருவிழா வரும் போது ஒவ்வொருவரும் வாக்குகள் அளிப்பதற்கு முக்கியமான ஆவணமாக இது தேவைப்படுகிறது.

வாக்காளர் அட்டையை நீங்கள் பாதுகாக்கவும் அவசியம் வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் திருத்தம் அதாவது உங்களுடைய பெயர், தந்தையின் பெயர், அல்லது பிறந்த தேதி ஏதேனும் பிழை இருந்தால்.

இ-சேவை மையத்தை அணுகி உங்களுடைய வாக்காளர் அட்டையை திருத்தம் செய்து கொள்ளலாம்.

வெளியில் செல்ல முடியாதவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள தவறுகளை சுலபமாக திருத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.

அடையாள அட்டை திருத்தம் செய்வது எப்படி

முதலில் NVSP என்று அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

அதன் பிறகு Search in Electoral Roll என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.

அவற்றில் உங்களுக்கான தாய் மொழியை தேர்வு செய்யவும் தேர்வு செய்த பிறகு select state என்ற இடத்தில் நீங்கள் இருக்கக்கூடிய state Tamil Nadu என்பதை குறிப்பிடவும்.

மாநிலம் தேர்வு செய்த பிறகு உங்களுடைய பகுதியை குறிப்பிட வேண்டும்.

அதன் பிறகு Application Details என்பதில் உங்களுடைய பெயர் கீழே இருக்கக்கூடிய surname என்பதில் சரியான பெயரை நிரப்ப வேண்டும்.

நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்தால் பக்கத்தில் பெயரானது தமிழ் மொழியில் தானாக தோன்றும்.

கீழே ஸ்கோர்ரல் செய்து Part Number of Electoral Roll என்பதில் உங்களுடைய Electoral Roll எண்களைக் குறிப்பிட வேண்டும் அடுத்த உங்களுடைய Serial Numbers குறிப்பிட வேண்டும்.

அதன் பிறகு உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கக்கூடிய Voter ID கார்டு எண்ணை நிரப்ப வேண்டும்.

அதன்பிறகு கீழே ஸ்க்ரோல் செய்தால் உங்களுக்கு எந்த பிழையினை மாற்ற வேண்டும் என்று கேட்கும்.

வாக்காளர் அட்டையில் என்ன பிழை இருக்கிறது அதனை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு உங்களுடைய பெயர் தவறுகளாக உள்ளது என்றால் Name என்றத் தேர்வு செய்து கீழே உள்ள surname கட்டத்தில் பெயர் கொடுக்க வேண்டும்.

பிறகு கீழே Upload Supporting Document என்பதில் உங்களுடைய புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும், அடுத்து வயது சான்றிதழ், முகவரி சான்றிதழ், என இணைக்க வேண்டும்.

அடுத்ததாக உங்களுடைய Email-ID மற்றும் தொலைபேசி எண்ணை டைப் செய்ய வேண்டும்.

அடுத்து Place என்ற இடத்தில் நீங்கள் எந்த இடத்தில் இருந்து Apply செய்கிறீர்கள் என்று இடத்தைக் குறிப்பிடவும் மற்றும் தேதியினை மறைக்காமல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இறுதியாக நீங்கள் கொடுத்துள்ள தகவல் அனைத்தையும் ஒரு முறை சரி பார்த்த பிறகு சப்மிட் என்பதை கொடுக்க வேண்டும் submit கொடுத்த பிறகு உங்களுடைய Application Number Generate ஆகிவிடும்.

வாக்காளர் அடையாள அட்டையில் ஏதாவது தவறுதலாக பிழை இருந்தால் அதனை நீங்கள் வீட்டில் இருந்து எளிமையாக தவறுகளை திருத்தம் செய்து கொள்ள தேர்தல் ஆணையம் பல்வேறு வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது.

உங்களுக்கு எப்படி பிழைகளை சரி செய்வது என்று தெரியவில்லை என்றால் தேர்தல் ஆணையம் அதற்காக தனியாக இணையதளம் மற்றும் யூடியூப் போன்ற தளங்களை இயக்கி வருகிறது.

அதன் மூலம் நீங்கள் தெரிந்து கொண்டு உங்களுடைய பிழைகளை எளிமையாக நீக்கலாம்.

ஜூலை 1ம் தேதி முதல் ஆதார் கார்டு பயன்படுத்த முடியாது

பான் கார்டு விதிமுறைகளில் புதிய மாற்றம்

பெண் குழந்தைகளுக்கான அரசின் திட்டங்கள்

வாழ்நாள் முழுவதும் பென்ஷன் கிடைக்கும்

12ம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட்

What is your reaction?

Excited
1
Happy
6
In Love
0
Not Sure
0
Silly
0