
How to withdraw cash from ATM using UPI
UPI மூலம் ATM மையங்களில் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி, இதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்..!
தொழில்நுட்பத்தின் அறிவியல் வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்து கொண்டே செல்கிறது.
உண்மையை சொல்லப்போனால் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை, இணையதள வங்கி சேவைகள், போன்ற டிஜிட்டல் முறை சார்ந்த சேவைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
இதற்காக ஒரு முக்கிய காரணம் UPI பயன்பாடுகள் மற்றும் டிஜிட்டல் வாலட் சேவைகள்யாகும்.
மக்களுக்கு வங்கிச் சேவைகள் மென்மேலும் மேம்படுத்த இப்பொழுது ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்யத் தொடங்கியுள்ளது.
ATM கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி சாத்தியம்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நாட்டில் உள்ள அனைத்து ஏடிஎம் களிலும் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண (UPI) இடைமுகம் மூலம் அல்லது (ATM) கார்டு இல்லாமல் பணத்தை எடுப்பதற்கான புதிய செயல்முறையை.
நாடு முழுவதும் கொண்டுவர முன்மொழிந்து உள்ளது, இந்த 2022 – 2023 நிதியாண்டிற்கான தனது முதல் நிதிக்கொள்கை அறிக்கையின்படி.
UPI ஐப் அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் நெட்வொர்க்குகள் முழுவதும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை இப்போது செய்ய முன்மொழியப்பட்டது, என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் முறை என்றால் என்ன.
கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் புதிய வசதியின் கீழ் ATM மையங்களில் இருந்து பணம் எடுக்கும் போது வாடிக்கையாளர் தனது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை நேரடியாக பயன்படுத்த தேவையில்லை.
வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண் அல்லது வங்கி செயலின் மூலம் பணம் எடுக்கும் வசதியை வங்கிகள் அனுமதிக்கிறது.
ஏற்கனவே நம் நாட்டில் ஐசிஐசிஐ வங்கி இதேபோல ஒரு புதுமையான திட்டத்தை, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
இப்பொழுது எந்த ஒரு சாத்தியக்கூறு தகவலும் இல்லை
இருப்பினும் அத்தைய வசதிகளை அளிக்கும் வங்கிகளின் எண்ணிக்கை இந்தியாவில் தற்போது மிகவும் குறைவாகவே உள்ளது.
தற்போதைய நிலவரப்படி இந்த கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் முறை இந்தியாவில் எப்படி செயல்படுத்தப்படும் என்பது குறித்து எந்த ஒரு தெளிவான தகவலும்.
இதுவரை இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை இந்த புதிய அம்சம் எப்படி செயல்பட வாய்ப்புள்ளது என்பது ஒரு அளவுக்கு கணிக்கமுடியும்.
UPI மூலம் பணம் எடுக்கும் முறை எப்படி வேலை செய்யும் என்பது குறித்து எந்த வழிகாட்டுதலை இன்னும் வெளியிடப்படவில்லை, என்பது இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
UPI இந்தப் புதிய முறை எப்படி வேலை செய்யும்
இந்த செயல்முறை எவ்வாறு கச்சிதமாக செயல்படும் என்பதில் ஒரு தெளிவு இல்லை என்றாலும் ATM களில் UPI ஐப் பயன்படுத்தி பணம் எடுப்பதற்கான விருப்பத்தை விரைவில் அறிமுகப்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பணம் எடுக்கும் முறைகள்
வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் கோரிக்கையின் விவரங்களை சரியாக உள்ளிட வேண்டும்.
ஏடிஎம் இயந்திரம் பரிவர்த்தனைக்கு தேவையான QR குறியீட்டை உருவாக்கிவிடும்.
வாடிக்கையாளர்கள் UPI பயன்பாட்டை பயன்படுத்தி QR குறியீட்டை ஸ்கேன் செய்து கோரிக்கையை அங்கீகரிக்கவேண்டும்.
அதன்பிறகு வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் இயந்திரம் பணத்தை அவர்கள் கேட்ட அளவிற்கு வழங்கும்.
தொடுதிரை ஏடிஎம்களில் எப்படி செயல்படும்
ஏடிஎம் மையங்களில் (UPI) ஐடி மற்றும் பணம் எடுக்கும் தொகை உள்ளிட பயனாளர்கள் அவர்களின் பயனர் (UPI) செல்போன் பயன் பாட்டில் கோரிக்கை பெறுவார்.
ஏற்கனவே இருக்கும் UPI செயலிகளில் கடவுச் சொல்லை பயன்படுத்தி பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்.
வெற்றிகரமான அங்கீகாரத்திற்கு பிறகு ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வழங்கப்படும்.
வாயு தொல்லை நிரந்தரமாக நீங்க வீட்டு வைத்தியம் என்ன..!
QR குறியீட்டை பயன்படுத்தி பணம் எடுக்கலாம்
இதுவரை கிடைத்த தகவலின் படி ஏடிஎம் திரையில் தோன்றும் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க வங்கிகள் அனுமதிக்கலாம்.
what are the symptoms of ulcer in tamil
QR குறியீடுகள் ஸ்கேன் செய்து UPI மூலம் பணம் எப்படி செலுத்துகிறார்களோ, அதுபோல ஏடிஎம்களில் இருந்து பணத்தை திரும்பப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.