Uncategorized

implementation of single Window system from may 1

implementation of single Window system from may 1

implementation of single Window system from may 1

தமிழகத்தில் வரும் மே 1 ஆம் தேதி முதல் ஒற்றைச்சாளர முறை அமல் புதிய அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு..!

தமிழகத்தில் தானியங்கி ஒற்றைசாளர கட்டட அனுமதி முறை வருகின்ற மே மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்.

தானியங்கி ஒற்றை ஒற்றைசாளர கட்டட அனுமதி முறை மே 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும், இது மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் முதல்கட்டமாக செயல்முறைக்கு வருகிறது எனவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கட்டிட அனுமதி முறை

கட்டட பிரிவில் சாலைக்காக ஒதுக்கப்படும் இடம் தவிர 10% இடத்தை பொழுதுபோக்கிற்கு, 1 சதவீத இடத்தை பொது பயன்பாட்டிற்கு மற்றும் 0.5 சதவீத இடத்தை மின்சார வாரியத்திற்கு கட்டாயம் வழங்க வேண்டும்.

கடந்த 2019 ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இந்த விதிகளின் மனைப்பிரிவுக்கு  அனுமதி பெறும் நடைமுறை எளிமைபடுத்துமாறு கிரெடாய் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.

அதில் கட்டடம் கட்ட அனுமதி கேட்கும் மனைப்பிரிவு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர் கட்டிடம் கட்ட அனுமதி தரப்படும்.

கட்டிட கட்ட சாலை, திறந்தவெளி, அதற்கு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஒதுக்கப்படும் இடத்தை உறுதி செய்து அதற்கான ஆவணங்களை உள்ளாட்சி அமைப்பிடம் சரியாக ஒப்படைக்கவேண்டும்.

குடிதண்ணீர், மழைநீர் வடிகால் வாரியம், சாலை மற்றும் தெருவிளக்குகளுக்கான கட்டணத்தை மனைப் பிரிவினர் உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

அதன்பிறகு இந்த அடிப்படை வசதிகள் அனைத்தும் இருப்பது உறுதியானால் மட்டும் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்படும்.

அப்படி இல்லை என்றால் மனைப் பிரிவினர் கட்டடம் கட்ட அனுமதி கிடையாது, என்று தமிழக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மக்கள் கட்டடக் அனுமதி வாங்க சிரமப்படுகிறார்கள், என்ற ஒரு முக்கிய காரணத்தால் தமிழக அரசு மக்களின் வசதிக்கு ஏற்ப தானியங்கி முறையில் பதிவு செய்து வாங்குவதற்கான புதிய வசதியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கண்ட கட்டிடம் கட்ட அனுமதி வேண்டி பொதுமக்கள் நேரில் வரத் தேவையில்லை என்று உரிய ஆவணங்களை இணையதளத்தில் சமர்ப்பித்தால்.

தானியங்கி முறையில் அனுமதி பெற்று விடலாம், அனைத்து அனுமதிகளையும் ஒரே நேரத்தில் ஒற்றைசாளர முறையில் வழங்க மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த திட்டம் வருகின்ற மே மாதம் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டம் மூலம் எளிமையாக வீட்டு மனைகளில் வீடு கட்டிக் கொள்வதற்கு அனுமதி கிடைக்கும், அதுமட்டுமில்லாமல் கட்டிட பணி என்பது முன்பு இருந்ததை விட இப்பொழுது வேகமாக நடைபெறும்.

வாயு தொல்லை நிரந்தரமாக நீங்க வீட்டு வைத்தியம் என்ன..!

குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், ஓசூர், போன்ற தொழிற்சாலைகள் நிறைந்த இடத்தில் காலிமனையில் கட்டிடம் கட்டுவதற்கு பல்வேறு விதிமுறைகள் தேவைப்படுகிறது.

ஏனென்றால் மழைக் காலங்களில் ஏற்படும் சிரமம் இதற்கு முக்கியமானதாக இருக்கிறது.

How to withdraw cash from ATM using UPI

இந்த திட்டம் அமல் படுத்தினால் வீட்டிலிருந்தே தேவையான ஆவணங்களை இணையதளத்தில் சமர்ப்பித்து,10 நிமிடத்திற்குள் வீடு கட்டுவதற்கான அனுமதியை எளிமையாக பெற்றுவிடலாம்.

இதனை இப்பொழுது தமிழக அரசு உறுதி செய்துள்ளது.

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0