
india brought new guidelines for selling SIM cards
சிம் கார்டு விற்பனை செய்வதற்கு இனி செக் இனி காவல்துறை நேரில் வரும் மத்திய அரசின் புதிய திட்டம் என்ன..!
சிம் கார்டு விற்பனைகளில் நடக்கும் பல்வேறு மோசடிகளை தடுப்பதற்கு மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டு வர உள்ளது.
இப்போது செல்போன் மூலம் மட்டுமே மோசடிகள் அதிகமாக நடைபெற உள்ளது,நம்முடைய செல்போன்களை ஹேக் செய்யும் கும்பல் பல வகையில் மோசடி செய்து.
நுதான முறையில் பல லட்ச ரூபாயை திருடி விடுகிறார்கள் இன்னொரு பக்கம் மோசடி நபர்கள் முறைகேடான வழிகளில் புதிய சிம்கார்டு வாங்கினால்.
பல்வேறு வகைகளில் புதிய மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள், போலியான அடையாள அட்டை கொடுத்து சிம் கார்டு வாங்குவதை தவித்தால் மட்டுமே.
இணையதள மோசடிகள் தடுக்க முடியும் என்பதால் அதிரடியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
சிம்கார்டு விற்பனை செய்பவர்கள் சிலர் மொத்தமாக சிம் கார்டுகளை விற்று மோசடி நடைபெறுவதற்கு துணை போவதாக அரசுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
அதனால் மோசடிகளை தடுப்பதற்கு மொத்தமாக சிம்கார்டு விற்பனை செய்வதை தடுத்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இது குறித்து மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது நாடு முழுவதும் சிம் கார்டு விற்பனை செய்பவர்களின் விவரங்களை கட்டாயம் சரி பார்க்க வேண்டும்.
மத்திய அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
நாடு முழுவதும் 10 லட்சம் சிம்கார்டு விற்பனையாளர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்,சிம் கார்டு விற்பனை செய்பவர்களின் விவரங்களை சரி பார்க்கும் பணிகள் காவல்துறை மூலம் செய்ய வேண்டும்.
காவல்துறை சரிபார்ப்பு பணிக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது,நாட்டில் இனிவரும் காலங்களில் மொத்தமாக சிம்கார்டு விற்பனை செய்ய முடியாது.
அதனை மத்திய அரசு தடை செய்துள்ளது,இணையதள மோசடிகளை தடுப்பதற்கு இந்த நடவடிக்கைகள் அதிரடியாக எடுத்துள்ளோம்.
விதிமுறைகளை மீறும் சிம் கார்டு விற்பனையாளர்களுக்கு ரூபாய் 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்,நாடு முழுவதும் இதுவரை விதிமுறைகளை மீறியதாக 5 லட்சம் செல்போன்கள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
67,000 சிம் கார்டு விற்பனையாளர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்,அவர்கள் மீது கடந்த மே மாதத்தில் இருந்து 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
whatsapp மூலம் மோசடி செயல்பாடுகளில் ஈடுபட்ட சுமார் 66,000 கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் தற்போது முடக்கியுள்ளது.
இனிவரும் காலங்களில் வர்த்தக பணிக்காக தனியாக செல்போன் இணைப்பு வழங்கப்படும்.
விரைவில் அறிமுகப்படுத்தப்படும் வர்த்தக நிறுவனங்களின் சுய விவரங்களும்,சிம்கார்டை ஒப்படைப்பவர்களின் விவரங்களும் சேகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
PM e Bus sewa scheme details in tamil 2023..!