
Indian government announced digital currency
இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி எதற்கு எப்படி இயங்கும் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்..!
விரைவில் இந்தியாவில் புதிய நாணயங்கள் அல்லது பண நோட்டுகள் டிஜிட்டல் முறையில் அறிமுகம் செய்யப்படுகிறது.
டிஜிட்டல் நிதியில் சேவைகளை அனைத்து வழிகளிலும் விரிவாக்கம் செய்ய வேண்டும், அதேவேளையில் பாதுகாப்பான பணப் பரிமாற்றம் மற்றும் நிர்வாகத்தை நாணய சந்தையில் கொண்டு வர வேண்டும்.
என்பதற்காக உலகின் பல நாடுகள் காகித நாணயத்தை டிஜிட்டல் நாணயமாக அறிமுகம் செய்ய முயற்சி செய்து வருகிறது.
உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் இப்போது அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய அளவில் வெற்றியை கண்டுள்ளது அல்லது தொழில்நுட்பத்தை தன்னுள் வைத்துள்ளது.
உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் டிஜிட்டல் கரன்சி உருவாக்க திட்டமிட்டு வருகிறது, இது குறித்து குளிர்கால கூட்டத்தில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது.
சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி
இப்பொழுது இந்திய அரசால் வெளியிடப்படும் டிஜிட்டல் கரன்சியை சென்ட்ரல் பாங்க் டிஜிட்டல் கரன்சி என அழைக்கப்படும்.
இது ரூபாய் நோட்டு போலவே இந்திய அரசால் அறிமுகம் செய்யப்படும் டிஜிட்டல் பணம்.
இந்த பணத்தை தற்போது நாம் பயன்படுத்தும் வகையில் பயன்படுத்தலாம்.
அதேபோல் முழுக்க முழுக்க அரசு கட்டுப்பாட்டில் இயங்க கூடியது என்பதால் 100% பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும் என்பதில் உத்தரவாதம் கொடுக்கிறது நம்முடைய அரசு.
டிஜிட்டல் கரன்சி மசோதா
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் டிஜிட்டல் கரன்சி மசோதா ஒப்புதல் பெற்றபின், ரூபாய் நோட்டு, சில்லரை காசுகள், காசோலைகள், பத்திரங்கள், போன்ற அனைத்தும் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சியாக மாற்றப்படும் என எதிர்பார்க்கலாம்.
தற்போது ஒரு கடையில் எப்படி பணத்தை கொடுத்து பொருட்களை வாங்குகிறார்கள், அதேபோல் இந்த டிஜிட்டல் கரன்சி, டிஜிட்டல் மூலம் பரிமாற்றம் செய்து பொருட்களை வாங்க முடியும்.
இந்த டிஜிட்டல் கரன்சி ஸ்மார்ட்போனில் எளிமையான முறையில் சேமிக்க வேண்டியது அவசியமாகிறது, உலக நாடுகளில் டிஜிட்டல் கரன்சி இணையதள சேவை இல்லாமல் செலுத்தப்படுகிறது.
அதேபோல் சேவை இந்தியாவிலும் வந்தால் இந்தியா கிராமங்களில் எளிதாக டிஜிட்டல் முறையில் பணம் பரிமாற்றம் சேவையை விரிவாக்கம் செய்ய முடியும்.
கருப்பு பணம்
அனைத்திற்கும் மேலாக இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி பணப்புழக்கத்தை எளிதாக நிர்வகித்தாள், கருப்பு பணம் போன்றவற்றை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
ஒவ்வொரு ரூபாய்க்கும் டிஜிட்டல் ட்ராக்கிங் இருக்கும் காரணத்தால் இந்த பணம் யாருக்கு செல்கிறது என்பதை விரிவாகவும் எளிமையாகவும் கண்டுபிடிக்க முடியும்.
பணத்தை அச்சிடும் செலவுகள், நிர்வாகிக்கும் செலவுகள், அரசுக்கு பெரிய அளவில் குறைந்து விடும், இதனால் பணத்தை நம்பி இருக்க தேவையில்லை.
பணப் பரிமாற்றத்தை குறைந்த செலவில், வேகமாகவும் உள்நாட்டு பரிமாற்றம் முதல் வெளிநாட்டு பரிமாற்றம் வரை சுலபமாகவும் செய்துவிடமுடியும் விரைவாக.
பணம் இல்லாத பொருளாதாரம்
பிரதமர் நரேந்திர மோடி அரசு 2016இல் பணமில்லாத பொருளாதாரத்தை உருவாக்க வேண்டுமென, அறிவித்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தது.
இது தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி உருவாக்கப்பட்டு வருகிறது.
வருகின்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் முதல் நாளில் மத்திய அரசு டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்வது குறித்து ஏதேனும் திட்டம் உள்ளதா என்று.
அதற்கான விளக்கத்தை குறித்து கேள்விகள் நாடாளுமன்றத்தில் சரமாரியாக கேட்கப்பட்டது, இந்த முக்கியமான கேள்விக்கு தான் அனைத்து தரப்பினரும் பதிலை எதிர்பார்த்து இருந்த வேளையில் மத்திய அரசு அதற்கு பதில் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் கரன்சி
அக்டோபர் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்காகவும் அதற்கான பணிகளை செய்ய வேண்டும் என்பதற்காகவும்.
இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934ல் வங்கி நோட் என்பதற்கான விளக்கத்தை சற்று மாற்றம் செய்ய அனுமதி கோரி டிஜிட்டல் வாயிலான பணம் என்பது கூடுதலாக சேர்த்தது.
இதைத் தொடர்ந்து தற்போது ரிசர்வ் வங்கி தலைமையிலான ஒரு நிபுணர் குழு சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்வதற்கான திட்டத்தை வேகமாக முன்னெடுத்து வருகிறது.
இந்த சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி எப்படி பயன்படுத்துவது அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது மத்திய அரசு.
காகித பணம்
இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்ய மிக முக்கியமான காரணம் காகித பணத்தை மட்டுமே இந்திய முழுவதும் நம்பியிருக்கும் நிலையில் இருந்து.
மீண்டு வருவது குறைவான கட்டணத்தில் நிதி பரிமாற்றத்தை செய்வது, பண பரிமாற்றத்தில் ஆபத்தை குறைப்பதற்கு, என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் இப்பொழுது வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சந்தையில் இந்த டிஜிட்டல் கரன்சி மூலம் அதிகப்படியான சந்தை வாய்ப்புகளை எளிமையாக உருவாக்க முடியும்.
அதேபோல் நாணய நிர்வாகத்தை மிக சிறப்பான முறையில் செய்ய முடியும் என மத்திய அரசு நம்பியிருக்கிறது.
இப்பொழுது இருக்கும் ஆபத்துகள்
இப்பொழுது மிக எளிதாக இணையதளம் மூலம் ஒருவரின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை விரைவாக திருடி விட முடியும் இதனை எப்படி தடுப்பது என்பது குறித்து மிகத் தீவிரமாக ஆலோசித்து வருகிறது மத்திய அரசு.
தினந்தோறும் சமூக ஊடகங்கள், யூட்யூப், செய்தித்தாள்கள், செய்திகளில், ஒரு நபரின் தொலைபேசிக்கு சில குறுஞ்செய்திகள் அனுப்பிவிட்டு அதன்மூலம் பணம் திருடப்படுகிறது என்ற செய்தி வெளிவருகிறது.
பணமில்லாத நிதிப் பரிவர்த்தனையில் இந்தியா இப்பொழுது முதலிடத்தில் உள்ளது, வருங்காலத்தில் இதனுடைய வளர்ச்சி என்பது அதிவேகமாக இருக்கும்.
இந்தியாவில் இப்பொழுது சிறிய பெட்டிக் கடை முதல் பெரிய சூப்பர் மார்கெட், மால்கள் வரை அனைத்திலும் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது.
மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ள டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்துவதற்கு எந்த ஒரு இணையதள சேவை மற்றும் மூன்றாம் நிறுவனங்கள் பங்கீடு தேவையில்லை.
வீட்டில் செய்யக்கூடிய அருமையான சுயதொழில் வாய்ப்புகள்..!
குறுஞ்செய்திகள் மூலம் ஒருவரின் மொபைலில் இருந்து அடுத்தவரின் மொபைலுக்கு இந்த டிஜிட்டல் பணத்தை மாற்றிக்கொள்ள முடியும்.
அதற்கென தனியாக சில விதிமுறைகளை பல்வேறு வழியில் ஆலோசித்து வருகிறது, இந்திய ரிசர்வ் வங்கி மிக விரைவில் இந்த டிஜிட்டல் கரன்சி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும்.
Red Banana health benefits list in tamil
இந்த டிஜிட்டல் கரன்சி மூலம் வரும் காலங்களில் பணப் பரிமாற்றம் என்பது இப்பொழுது இருக்கும் சதவிகிதத்தை விட பல மடங்கு உயர்ந்து விடும், அதுமட்டுமில்லாமல் அரசுக்கும் பணத்தை கையாளும் செலவுகள் குறையும்.