Uncategorized

Indian household average wealth is just

Indian household average wealth is just Rs 66,280

Indian household average wealth is just

இந்தியாவில் 50% குடும்பங்களின் சராசரி சொத்து மதிப்பு வெறும் 66,280 ரூபாய் வெளியிடப்பட்டுள்ள அதிர்ச்சி ரிப்போர்ட்..!

எல்லோரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தை பார்த்து இருப்போம் அதில் ஒரு மிக சிறந்த டயலாக் வரும்.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழையாகவும் மாறி வருகிறார்கள் என்று.

அது உண்மையில் இந்தியாவில் இப்போது இந்த காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

அதுவும் நோய்த்தொற்றுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார மாற்றத்தால், அதிகப்படியான நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளார்கள், வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளார்கள்.

பலர் வர்த்தகம் வேலை வாய்ப்பை முற்றிலும் இழந்து, மோசமான பொருளாதார நிலைக்கு சென்று, மீளவே முடியாத சூழ்நிலையில் தவித்து வருகிறார்கள்.

இப்பொழுது இந்தியாவின் பொருளாதாரத்தை பற்றி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை 80 சதவீத மக்களின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது.

மக்கள் எப்படி வாழ்க்கையை வாழ்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் தங்களுடைய குடும்ப பொருளாதாரத்தை எப்படி சமாளிக்கிறார்கள் என்பது ஒரு அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்யாக  இருக்கிறது.

Indian household average wealth is just Rs 66,280

1 சதவீத மக்களின் ஆதிக்கம்

இந்தியாவில் வெறும் 1 சதவீத மக்களிடம் (பணக்காரர்கள்) நாட்டின் மொத்த வருமானத்தில் 5ல் ஒரு பங்கு சுமார் 22% உள்ளது.

இதுவே உயர்ந்த 10 சதவீத மக்களிடத்தில் 57 சதவீத வருமானம் உள்ளது.

இதேபோல் பொருளாதார அடிப்படையில் கடைசியில் இருக்கும் 50 சதவீத மக்களிடத்தில் வெறும் 13 சதவீத வருமானம் மட்டுமே உள்ளது என World Inequality Report 2022 ஒரு அதிர்ச்சி தகவலை இப்போது வெளியிட்டுள்ளார்கள்.

உலக சமத்துவமின்மை புதிய ஆய்வறிக்கை

உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் துணைத்தலைவர் லூகாஸ் சேன்சல் மற்றும் பிரான்ஸ் பொருளாதார வல்லுநர் தாமஸ் பிக்கெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர் இந்த ஆய்வறிக்கை.

இந்தியாவில் பணம் இருப்பவர்கள் மற்றும் பணம் இல்லாதவர்கள் எண்ணிக்கை எந்த அளவிற்கு உயர்கிறதோ.

அதே அளவிற்கு இருதரப்பு மத்தியிலான இடைவெளியும் மிகக் கடுமையாக அதிகரித்து வருகிறது, என அந்த ஆய்வு அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மிக மோசம்

இந்த ஆய்வறிக்கையின் படி இந்தியா ஆதிக்கம் நிறைந்த பணக்காரர்களையும், அதிகமான ஏழை மக்களையும் கொண்ட சமத்துவம் இல்லாத நிறைந்த நாடாக உள்ளது, என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூபாய் 66,280/-ஆண்டு வருமானம்

இந்தியாவில் பொருளாதாரத்தில் பின் தங்கிய 50 சதவீத குடும்பங்களின் சராசரி சொத்து மதிப்பு, வெறும் 66,280/- என மட்டுமே என்பதுதான் இந்த ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தரும் ஒரு தகவலாக இருக்கிறது.

அதேபோல் பணக்காரர்களாக இருக்கும் 1 சதவீத குடும்பங்களின் சராசரி சொத்து மதிப்பு 32,449,360/- ரூபாய் ஆயிரம் கோடிக்கும் வித்தியாசம் மிகப்பெரிய அளவில் மாறியுள்ளது.

நடுத்தர குடும்பம் மக்கள்

இதேபோல் இந்தியாவில் நடுத்தர குடும்பம் எனப்படும் பொருளாதாரத்தில் சற்று மேம்பட்ட ஏழைக் குடும்பங்களின் சராசரி சொத்து மதிப்பு 7,23,930/- ரூபாய்.

மேலும் உயர்ந்த 10 சதவீத பணக்கார குடும்பங்களின் சராசரி சொத்து மதிப்பு 6,354,070 ரூபாயாக அதிகரித்துள்ளது.

தாராளமயமாக்கல் கொள்கை

இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கைகள் தான் மக்கள் மத்தியில் பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் சமத்துவமின்மை அதிகரிக்க மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

போக்சோ சட்டம் என்றால் என்ன

அதேவேளையில் இந்த பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் பணக்காரர்களுக்கு பெரிய அளவில் நல்ல முறையில் உதவியுள்ளது.

Use these 9 tips to whiten teeth in tamil

இந்த ஆய்வறிக்கை கண்டிப்பாக நம் நாட்டு மக்களிடத்தில் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி தரும் ஆய்வு அறிக்கையாக இருக்கிறது.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0