
Indian Railways 2.50 Job Vacancy Announced
இந்தியன் ரயில்வே வாரியத்தில் 2.50 லட்சம் வேலை வாய்ப்புகள் 10th கல்வித் தகுதி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள் என்ன..!
இந்தியன் ரயில்வே துறையில் இந்த ஆண்டு 2.50 லட்சத்திற்கு மேல் காலிப்பணியிடங்கள் இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
இது இந்தியா முழுவதும் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் சூழ்நிலையில்.
இந்தியாவின் மிக முக்கியமான துறையாக இருக்கும் ரயில்வே துறையில் இத்தனை லட்சம் வேலை வாய்ப்புகள் இருந்தும் நிரப்பப்படாமல் இருப்பது மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியான செய்தியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே துறையில் காலிப்பணியிடங்கள் குறித்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்.
ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார் அதற்கு பதில் அளித்துள்ள ரயில்வே அமைச்சகம் இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி நிலவரப்படி.
ரயில்வே துறைவில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 580 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற ரயில்வே பாதுகாப்பு பிரிவில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 924 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரயில்வே துறையில் சுமார் 3 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக துறை சார்ந்த அமைச்சர் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதி என்ன
10 Pass (or) ITI from institute recognized by NCVT/SCVT/ (or) Equivalent National Apprentice Certificate (NAC) Granted by NCVT
வயது வரம்பு தகுதி என்ன
இந்தப் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 33 வயதுக்குள் இருக்க வேண்டும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
சம்பள விவரங்கள்
இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 22,500/-முதல் அதிகபட்சம் ரூபாய் 25,380/-வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை
கணினி அடிப்படையில் சோதனைகள், உடன் திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ தேர்வு ஆகியவை RRB குரூப் D செயல்முறையின் ஒரு பகுதியாகும்.
தேர்வின் கேள்விகள் மற்றும் கால அளவுகள் என்ன
பொருள் கேள்விகளின் எண்ணிக்கை தலா 1 மதிப்பெண் கால அளவு பொது அறிவியல் 251 மணி 30 நிமிடம், கணிதம் 251 மணி 30 நிமிடம், பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு 201 மணி 30 நிமிடம் பொது, விழிப்புணர்வு மற்றும் நடப்பு விவரங்கள் 301 மணி 30 நிமிடம் மொத்தம் 100
விண்ணப்பிக்கும் முறை எப்படி
RRR குரூப் D தேர்வு பல்வேறு காலகட்டங்களாக நடந்த ரயில்வே ஆட்சியர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இந்திய ரயில்வே பிரிவுகளில் 2.5 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன,இந்த பணியிடங்களுக்கு தேர்வு இணையதளத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயின் அதிகாரப்பூர்வை இணையதள முகவரி https://www.rrbcdg.gov.in/ மூலம் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கணினி அடிப்படையில் அட்டவணை மற்றும் அனுமதி அட்டை ஆகியவை ரயில்வே அதிகாரப்பூர்வை இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.
தேர்வு தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பு தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேர்வின் தேதியை பார்ப்பதற்கு இணைப்பு மற்றும் SC/ST மாணவர்களுக்கான.
தங்களுக்கு தேவையான விவரங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை இந்தியன் ரயில்வே ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வருகின்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.
அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்படும் என இந்தியன் ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
How to get new ration card in tamil nadu