
iraianbu IAS new rules announced for tamilnadu
மொத்தமாக தூக்குங்க நேரடியாக களம்மிறங்கி கண்டிப்புடன் சொன்ன இறையன்பு ஐஏஎஸ் அடுத்த நடந்த அதிரடி சம்பவம்..!
சென்னையில் குறிப்பிட்ட சாலை ஒன்றில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு நேரடியாக களம் இறங்கி ஆய்வு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் சாலை காண்ட்ராக்டர் அதிரடியாக சிக்கியுள்ளார்.
குறிப்பாக மழைக்காலங்களில் தமிழ்நாட்டு அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக, தீராத பிரச்சினையாக எப்பொழுதும் இருப்பது மழை நீர் வீடுகளில் புகுவது.
இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் வருடாவருடம் தமிழ்நாடு அரசு செலவு செய்கிறது இதை எப்படியாவது குறைக்க வேண்டும் அது மட்டுமில்லாமல்.
இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வு காண வேண்டுமென முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இப்போது தீவிரமாக கண்காணிப்பில் இருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் கடந்த போகிப்பண்டிகை அன்று இரவு திடீரென்று சென்னை சாலை பணிகளை பார்வையிட்டார்.
சென்னையில் தேனாம்பேட்டை மற்றும் வாரன்ஸ் சாலை மற்றும் மகாபலிபுரம் சாலையில் கடந்து வந்த சாலை பணிகளை நேரடியாக இரவு வேளைகளில் அவர் சோதனை செய்தார்.
ஏற்கனவே போடப்பட்ட சாலைகள் அகற்றப்பட்டு புதிய சாலை அமைப்பதற்கு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என ஆய்வினை செய்தார்.
ஏன் இந்த திடீர் ஆய்வு
முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததிலிருந்து சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் புதிதாக அமைக்கப்படும் சாலைகளின் மீது தீவிரமாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
புதிதாக சாலைகள் போடும்போது ஏற்கனவே இருக்கும் பழைய சாலைகளை அகற்றிவிட்டு புதிய சாலைகள் போடப்பட வேண்டும் என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பழைய சாலைகளின் மீது புதிய சாலைகள் மீது போட்டு மேடு ஏற்படுத்தினால் இதனால் சாலைகளில் இருந்து மழைநீர் வீடுகளுக்குள் செல்வதால் பல்வேறு பிரச்சனைகளை பொதுமக்கள் மழைக்காலங்களில் சந்திக்கிறார்கள்.
இதில் தீவிர கவனம் செலுத்தி இதனைத் தீர்ப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் பல மாதங்களுக்கு முன்பே இது தொடர்பாக மாநிலம் முழுக்க இருக்கும் அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்தார்.
சரியாக பின்பற்றப்படுகிறதா
இந்த உத்தரவுகள் அனைத்தும் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை அவ்வப்போது முதல்வர் மற்றும் தலைமை செயலாளர் கண்காணித்து வருகிறார்கள்.
ஆனால் இந்த உத்தரவை சில மாவட்டங்களில் அதிகாரிகள் மதிக்கவில்லை உத்தரவை மீறி சாலை மீது கோட்டிங் போல இன்னொரு சாலை போடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால் மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது இதைப்பற்றிய புகார் முதல்வருக்கு சென்ற நிலையில் தான்.
சென்னையில் சாலை பணிகளை பார்வையிட தலைமைச் செயலாளர் வே இறை அன்பிற்கு முதல்வர் உத்தரவிட்டார், அதேபோல் கடந்த வாரம் தலைமைச் செயலாளர் இறையன்பு சென்னையில் நேரடியாக சாலை பணிகளை பார்வையிட்டார்.
களத்தில் இறங்கிய முதல்வர்
முதல்வர் ஸ்டாலின் போகிப்பண்டிகை அன்று நேரடியாக சாலை பணிகளை பார்வையிட்டார் இது அதிகாரிகளுக்கு இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மீண்டும் தலைமைச் செயலாளர் இறையன்பு குரோம்பேட்டையில் உள்ள கட்டபொம்மன் தெருவில் சாலை பணிகளை பார்வையிட்டார்.
அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது, கடந்த டிசம்பர் மாதம் அங்கு புதிய சாலை அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விதிமீறல் நடந்துள்ளது
அப்போது சரியாக விதியை கடைப்பிடிக்காமல் ஏற்கனவே போடப்பட்ட சாலை மீது சாலை போட்டுள்ளனர் அதோடு சாலையை மழைநாளில் அவசரமாகப் போட்டு முடித்துள்ளனர்.
இது தொடர்பாக புகார்கள் வந்த வண்ணம் நிலையில்தான் தலைமைச் செயலாளர் இறையன்பு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
களத்தில் நேரடியாக பார்வையிட்ட தலைமைச் செயலாளர் சாலை மோசமாக இருப்பதைக் கண்டு கோபம் அடைந்துள்ளார் என்ன இது ஏன் ரோடு இவ்வளவு மோசமாக இருக்கிறது.
மாஸ்க்போட்டோ வாய்ரொம்ப நாற்றம்மடிக்கிறதா
பழைய சாலையையே அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்கவில்லை இதை எல்லாம் மொத்தமாக தூக்குங்க மறுபடியும் முதலில் இருந்து சாலை போடுங்கள்.
ஒப்பந்ததாரரை மீண்டும் சாலை போட சொல்லுங்கள் என்று தலைமைச் செயலாளர் வெ இறையன்பு கோபமுடன் நடந்து கொண்டுள்ளார்.
Best carbohydrate food list in tamil
இந்த சாலை பணிகளை மேற்பார்வையிட்ட அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.